Skip to main content

Posts

Showing posts with the label பதம் பிரித்த பிரபந்தம்

திருக்குடந்தை சென்று வந்தேன்

திருக்குடந்தை சென்று வந்தேன்  ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை ஆழ்வார்கள் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் மூன்று பதிப்புகள் கண்டு, பல திவ்ய தேச எம்பெருமான்கள், ஆழ்வார் ஆசாரியர்கள் ஆசீர்வாதம் பெற்றது குறித்த அவ்வப்போது பதிவிட்டிருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  ஆனால்  ’ஆராவமுதே’ என்ற பாசுரத்தால் நமக்கு மொத்த நாலாயிரத்தையும் பெற்றுத்தந்த ’திராவிட வேதம் காட்டிய பெருமாளே ’ என்று போற்றப்படும் திருக்குடந்தை ஆராவமுத ஆழ்வானின் திருவடிக்கு இதுவரை செல்லவில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்காது. சில நாள் முன் அது நிறைவேறியது.  ஒப்பிலியப்பன் ஸந்நிதி வங்கீபுரம் நவநீதம் கோபால தேசிகாசாரியர் ஸ்வாமிகளைச் சனிக்கிழமை அவருடைய திருமாளிகையில் சென்று சேவித்தேன். ரயில்வேயில் மிக உயர்ந்த பதவிகள் வகித்து ஓய்வு பெற்ற பின் திருவிண்ணகர் என்று ஒப்பிலியப்பன் ஸந்நிதியில் சந்நியாசி போல இருந்துகொண்டு, ஸம்ப்ரதாய கைங்கர்யமும், ஒப்பிலியப்பன் திருக்கோயிலில் கௌரவ அத்யாபக கைங்கர்யமும் செய்து வருகிறார்.வடமொழி, தென்மொழியில் பெரும் புலமை உடையவர்.  இந்த 91 வயதிலும் பலருக்குப் பஞ்சசமஸ்கார...

சொல்லடைவு - வெளியீடு மற்றும் புத்தகத்தை எப்படி பெறுவது.

  சொல்லடைவு - வெளியீடு மற்றும் புத்தகத்தை எப்படி பெறுவது. திவ்யப் பிரபந்தத்துக்குச் சொல்லடைவு இருக்கிறதா என்று தேடிக்கொண்டும், அறிஞர்களைக் கேட்டுக்கொண்டும் இருந்தேன். சங்க இலக்கியத்துக்கும், திருக்குறளுக்கும் இருந்தது ஆனால் ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்கு இல்லை என்பது தெரிந்த அதே சமயம் ஸ்ரீமந் நாதமுனிகளின் 1201 திருநட்சத்திரப் பத்திரிக்கை அடியேன் இல்லம் தேடி வந்தது. 1200 வருடங்களுக்கு முன் நாதமுனிகள் நம்மாழ்வாரிடமிருந்து நமக்குப் பெற்றுக் கொடுத்த ஆழ்வார்களின் ஈரச் சொற்களுக்குச் சொல்லடைவு இல்லையே, நினைத்தவுடன் நாம் நாதமுனிகளின் திருநட்சத்திரம் அன்று பிறந்த நாள் பரிசாக அவர் அவதரித்த காட்டுமன்னார் கோயிலில் அவருக்கு இதை சம்பர்பிக்க முடிவு செய்து வேலைகளை ஆரம்பித்தேன். இரண்டு நாளில் மொத்த 300 பக்கங்களையும் டைப் செட் செய்து, பிழைகளை நீக்கி, அட்டைப் படம் முதலியவற்றை வடிவமைத்து அச்சுக்கு அனுப்பியது எல்லாம் ஒளிக்கீற்று போல முடிந்ததற்குக் காரணம் நாதமுனிகளின் ஆசிகள் தான். இதுவரை நேரில் பார்க்காத நண்பர் பிரசன்னா, ஓட்டுனருடன் காரை அனுப்ப திருவாலி திருநகரிக்கு ...

ஸ்ரீமத் நாதமுனிகள்

  ஸ்ரீமத் நாதமுனிகள் ஸ்ரீமத் நாதமுனிகள் சன்னதி ஒன்று ஸ்ரீரங்கத்தில் இருப்பதே என் அப்பா சொல்லித் தான் தெரியும். ஸ்ரீரங்கவிலாஸ் மண்டபத்தில் கடைகளுக்கு நடுவே ஒரு சந்தில் இருக்கும். சின்ன வயதில் ஒரு நாள் அதைத் தேடிச் சென்று சேவித்துவிட்டு வந்தேன். பிறகு ஸ்ரீமத் நாதமுனிகள் அவதார ஸ்தலமான காட்டுமன்னார் கோயிலில் அவர் பேரனான ஆளவந்தாருடன் சேவித்துவிட்டு அங்கேயே ஒரு முழு நாளை சில வருடங்களுக்கு முன் கழித்தேன். பதம் பிரித்த பிரபந்தம் முதல் பதிப்பின் போது அடியேனுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து முன்பே எழுதியிருக்கிறேன். ஸ்ரீ வைஷ்ணவ ஆசாரியார்களில் முதல்வரான ஸ்ரீமத் நாதமுனிகள் வீரநாராயணபுரத்தில் தான் அவதரித்தார்.(அஷ்டாங்க யோகம் மற்றும் தேவ கானத்தில் வல்லவராக இருந்தார்) ஆழ்வார்கள் அருளிச் செய்த பிரபந்தங்கள் காலப் போக்கில் மறைந்து போயின. அவைகளைத் தொகுத்த பெருமை ஸ்ரீமத் நாதமுனிகளையே சாரும். ஒரு சமயம் வீரநாராயணபுரத்தில் இருக்கும் மன்னார் என்ற பெருமாளைச் சேவிக்க சில ஸ்ரீ வைஷ்ணவர்கள் வந்தார்கள். அவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியின் முதல் பதிகமான "ஆராவமுதே...

திவ்யப் பிரபந்தச் சொல்லடைவு சில கேள்விகள் பதிலுடன்

திவ்யப் பிரபந்தச் சொல்லடைவு சில கேள்விகள் பதிலுடன்  நேற்று சொல்லடைவு புத்தகம் வெளியீடு குறித்து அடியேன் எழுதியிருந்தேன்.  சிலர் கேட்கும் கேள்விகளுக்கு இவை.  *புத்தகம் என்ன விலை, எப்போது கிடைக்கும் ? அளவு என்ன ?  புத்தகம் அச்சுக்குச் சென்றுள்ளது, அட்டை, பைண்டிங் போக்குவரத்துச் செலவு போன்றவை தெரிந்த பின் வழக்கம் போலப் புத்தகத்துக்கு ஆகும் செலவை மட்டும் வாங்கிக்கொள்ள எண்ணம்.  மற்ற ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை வெளியீடுகள் போல இருக்கும். புத்தகம் 20.6.2024 அன்று வெளியிடப்படும். அதற்குப் பிறகு ஒரு வாரம் கழித்து அனுப்பத் திட்டம்.  *புத்தகம் உள்ளே எப்படி இருக்கும் ? மாதிரி பக்கங்களைப் பகிர முடியுமா ?   சில மாதிரி பக்கங்களைக் கொடுத்திருக்கிறேன்.  *என்னிடம் பழைய பிரபந்தம் புத்தகம் ஒன்று இருக்கிறது அதற்கு இந்தச் சொல்லடைவைப் பயன்படுத்த முடியுமா ?  இந்நூலில் குறிப்பிட்டுள்ள பாசுர எண்கள் ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை வெளியீடான ‘ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள். உங்களிடம் உள்ள...

திவ்யப் பிரபந்ததுக்கு முதல் சொல்லடைவு !

 திவ்யப் பிரபந்ததுக்கு முதல் சொல்லடைவு !  சென்ற வாரம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்துக்குச் சொல்லடைவு குறித்து எழுதியது நினைவிருக்கலாம்.  சில நாள்கள் முன் காட்டுமன்னார் கோயிலிலிருந்து ஸ்ரீமந் நாதமுனிகள், ஸ்ரீ ஆளவந்தார் திருஅவதார மஹோத்ஸவ பத்திரிகை வந்த போது நாலாயிர திவ்யப் பிரபந்தம் சொல்லடைவு புத்தகத்தைத் தயாரித்து அதை ஸ்ரீமந் நாதமுனிகளின் அவதார தினத்தில் வருக்கு சமர்பித்து ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று அடியேனுக்கு உடனே தோன்றியது.  சென்ற வாரயிறுதியில்  புத்தகம், அட்டைப் படம் முதலியவற்றைத் தயாரித்து, மருத்துவர் ஸ்ரீ உ.வே.திருக்குடந்தை வேங்கடேஷ் ஸ்வாமியிடம் அணிந்துரை வேண்டும் என்று கேட்டவுடன்  அன்புடன் உடனே அளித்து, 20ஆம் தேதி அன்று ஸ்ரீ உ.வே கருணாகராசார்ய ஸ்வாமிகளும், ஸ்ரீ.உ.வே A.V..ரங்காசாரியார் ( சிதம்பரம்) 'நாதமுனிகள் காட்டிய நல்வழி புத்தகத்தை’ நாதமுனிகள் சந்நிதியில் வெளியிட உள்ளார்கள், அத்துடன் உங்கள் திவ்யப் பிரபந்த சொல்லடைவு புத்தகத்தையும் சேர்த்து வெளியிடலாமே  என்ற போது, ’போதும்’ என்று கை நீட்டினாலும் மடத்தில் கைமேல் அக்கார அடிசில் சாதிப்பது போல இரு...

தமிழ் தொடரடைவு

  தமிழ் தொடரடைவு இன்றைய செயற்கை நுண்ணறிவின் இயந்திர கற்றல் மற்றும் ஆழமான கற்றல் உள்ளிட்ட பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி பயிற்சியளிக்கப்பட்ட வழிமுறைகளைக் கொண்டு மொழியியலுக்கு ஏற்ற மாடல் கொண்டு முழு திவ்யப் பிரபந்தத்தையும் அதன் உரைகளையும் கொண்டு வந்துவிட்டால், பல விஷயங்கள் நமக்குச் சாத்தியமாக்கும். உதாரணத்துக்கு ஆழ்வார்கள் எவ்வளவு முறை ‘அடியார்’ என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார்கள். எந்த ஆழ்வார் அதிகம் உபயோகித்துள்ளார் போன்ற கேள்விகளைக் கேட்கலாம். ஆழ்வார் பாடல்களைக் கொண்டு நரசிம்ம அவதாரம் குறித்து பத்து நிமிட உபன்யாசம் செய் என்றால் உடனே செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை. இன்னும் ஒரு படி மேலே சென்று ஸ்ரீ.உ.வே வெங்கடேஷ் ஸ்வாமி போல உபன்யாசம் செய் என்றால் தோணி சிக்ஸ் அடித்த மாதிரி நரசிம்மர் அடித்தார் என்று சொன்னாலும் ஆச்சரியப்படக் கூடாது! திவ்யப் பிரபந்தத்துக்கு ‘Concordance’ முதலில் தேவைப்படும். [Concordance - ’an alphabetical list of the words (especially the important ones) present in a text, usually with citations of the passages in which they are found’] தமிழில் தொடரடைவுகள். உதா...

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வெளியிட்ட மூன்றாம் பதிப்பு !

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் வெளியிட்ட மூன்றாம் பதிப்பு ! ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம ஜெயந்தியுடன்,  ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ திருவாய்மொழிப் பிள்ளை போன்ற ஆழ்வார்கள் ஆசாரியர்களின் திருநட்சத்திரமும் ‘மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளால்’ என்பது போல அமையத் திருமங்கை ஆழ்வார் வர்ணிக்கும் கிராமம் போல ஸ்ரீரங்கபட்டினம் பெலகோலாவில் வசிக்கும் ‘ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்’ இருப்பிடத்துக்குச் சென்று வந்தது இனிய அனுபவம். .  ’அந்தியம் போதில் அரியுருவாகி’ என்று பெரியாழ்வார் கூறிய படி அந்திசாய ஆஜர் ஆன சமயம்,’ ‘பாரதத் தேசம் சுபிட்சமாக’ இருக்க வேண்டும் என்ற ஒரு பிரார்த்தனையை முன் வைத்து,  தேவலோகத்தில் நடைபெறும் மஹா யக்ஞம்(யாகம்) போன்று விமர்சையாக நடைபெற்றுக்கொண்டு இருந்தது. ’சார்ங்க முதைத்த சரமழையுடன் பூர்ணாஹுதி முடிவு பெற்று, கோயிலில் மங்கள ஆர்த்தி நடைபெற ’சுந்தரர் நெருக்க, விச்சாதரர் நூக்க’ கூட்டத்தின் ஓட்டைகளில் ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர் முழுமையாகச் சேவை சாதிக்க, மெதுவாகக் கூட்டத்தில் ஊடுருவி முன் வரிசையில் ஸ்ரீராம் ஸ்வாமிகளிடம் ‘இன்று ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் மூன்றாம் பதிப்பு நம் நரசிம்மர்...

வழிகாட்டும் ஸ்ரீராமர்

வழிகாட்டும் ஸ்ரீராமர் காட்டிக்கொடுத்த காட்டுமன்னார் என்ற பதிவைப் படித்திருப்பீர்கள். அதற்குக் காரணம் ஸ்ரீரங்கம் கோதண்ட ராமர் தான்! ஸ்ரீராம நவமி அன்று இதை மீண்டும் சொல்லுவதில் மகிழ்ச்சி. ஆழ்வார்கள் மலர்ந்து அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முதல் பிரதியை உடையவர் திருநட்சத்திரம் அன்று அதை வெளியிடுவதற்கு முன் உறையூர் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், ஸ்ரீரங்கம் தாயார், நம்பெருமாள் ஆசீர்வாதங்களைப் பெற்றுவிடலாம் என்று காரில் புறப்பட்டேன். உறையூரில் அர்ச்சகரிடம் “நாச்சியார் திருவடியில் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்ற போது அவர் ஆசையுடன் புத்தகங்களை நாச்சியார் திருவடியில் வைத்து தாயாரின் புஷ்பம், மஞ்சள் காப்பு பிரசாதங்களைப் புத்தகம் மீது அள்ளிக் கொடுத்தார். பிறகு அவதார ஸ்தலத்தில் விற்றிருக்கும் ஸ்ரீ திருப்பாணாழ்வார் சந்நிதி மற்றும் ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ உடையவர் மற்றும் நாச்சியார் வீற்றிருக்கும் மண்டபத்தில் புத்தகங்களை வைத்து வணங்கிவிட்டு வெளியே வந்த போது கோவிட் காலத்தில் வெளியே வரவே பயப்பட்டுக் கொண்டு இருந்த காலத்திலும் வெய்யிலில் பூக்களை விற்றுக்கொண்டு இருந்த பெண்மணியிடம் புத்தகங்களைக் கொடுத்து...

காட்டிக்கொடுத்த காட்டுமன்னார்

காட்டிக்கொடுத்த காட்டுமன்னார்  பதம் பிரித்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதல் பதிப்பு முதல் பிரதியை காட்டுமன்னார் கோயில் ஸ்ரீமந் நாதமுனிகள் சந்நிதியில் வைத்து ஆசீர்வாதம் பெறச் சென்றிந்த போது ஓர் அனுபவம் ஏற்பட்டது. சுருக்கமாகச் சொல்லுகிறேன். கோவிட் இரண்டாம் அலை எங்கும் பரவியிருந்த  அன்று காலை ஒன்பது மணிக்கு காட்டுமன்னார் கோயிலில் வீரநாராயணப் பெருமாள் முன் நின்றேன். இங்கே தான் சுமார் 1200 வருடங்கள் முன் நாதமுனிகள் நாலாயிரத்தையும் அரங்கேற்றம் செய்தார் என்ற நினைப்பே உள்ளத்தில் ஆனந்தத்தையும் பூரிப்பையும் கொடுத்தது. காட்டுமன்னார் பெருமாள் திருவடிகளில் பிரபந்தப் புத்தகத்தை வைத்து அர்ச்சகர் “இவர் காட்டும் மன்னார். நாலாயிரத்தை நாதமுனிகளுக்குக் காட்டிக்கொடுத்த மன்னார். நாதமுனிகள் தினமும் ஆராதனை செய்த பெருமாள்…” என்று கூறி மன்னார் ஆசிர்வதிக்க அர்ச்சகரிடம் “நாதமுனிகள் திருவடிகளிலும் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்றேன். “பெருமாள் திருவாராதனம், பிறகு கோஷ்டி முடிந்த பின் தான். நாழியாகும்” என்றார்.  அங்கே இருந்த ஸ்ரீநிவாசாச்சார் ஸ்வாமி (தீர்த்தம் ஸ்தானிகர் )  “உங்களுக்கு பெங்களூர் செல...

பதம் பிரித்த பிரபந்தம் சில கேள்வி பதில்கள்

 பதம் பிரித்த பிரபந்தம் சில கேள்வி பதில்கள் (1)  எங்கள் வீட்டில் ஏற்கனவே நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகம் இருக்கிறதே ? இது பதம் பிரித்த பிரபந்தம்.  பதம் பிரித்த பிரபந்தமா ?  சுமாராகத் தமிழ் படிக்கத் தெரிந்தால் பயப்படாமல் படிக்கலாம். முயன்றால் பொருள் எளிதில் விளங்க ஆரம்பிக்கும். உதாரணமாக பெரியாழ்வார் திருமொழி பாசுரம் ஒன்றைப் பதம் பிரித்து/பிரிக்காமல் கொடுத்திருக்கிறேன். வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்.  சரி இதனால் என்ன பயன் ?  சுஜாதா கல்கியில் எழுதியதைப் படிக்க சிபாரிசு செய்கிறேன். (கீழே கொடுத்திருக்கிறேன்) ஆழ்வார் பாசுரங்களை ரசிக்க முதலில் பதம் பிரித்துக் கொள்ள வேண்டும். அது சில சமயம் எளிதாக இருக்கும். சில சமயம் ரொம்ப கடினமாக. தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்கள் எளிமை ரகத்தைச் சேர்ந்தவை. நம்மாழ்வாரின் பாசுரங்களும் அப்படியே அவரது திருவிருத்தம் மட்டும் படுத்தும். உதாரணத்துக்கு இந்த 31வது பாசுரத்தைப் பாருங்கள். இசைமின்கடூதென்றிசைத்தாலிசையிலமென்றலைமே லசைமின்களென்றாலசையுங்கொலாமம்பொன்மாமணிக டிசைமின்மிளிருந்திருவேங்கடத்துவன்றாட்சிமய மிசைமின்மிளிரியபோவான்வழிக்கொண...

ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவில் வந்த குறிப்பு

 ஸ்ரீ ந்ருஸிம்ஹப்ரியாவில் வந்த குறிப்பு 

வைணவன் குரல் ஆங்கில பதிப்பில் வந்த குறிப்பு

 வைணவன் குரல் ஆங்கில பதிப்பில் வந்த குறிப்பு 

இந்து தமிழ் திசையில் வந்த குறிப்பு

  இந்து தமிழ் திசையில் வந்த குறிப்பு 

அட்டைப் படங்கள் சிறு குறிப்பு

 அட்டைப் படங்கள் சிறு குறிப்பு இரண்டாம் பதிப்பின் அட்டைப் படங்களை குறித்து சில விஷயங்கள். பிரபந்தத்தை கையில் ஏந்தினால் சில நொடிகளாவது அட்டைப் படத்தை தரிசிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டேன். அதனால் அட்டைப் படத்தின் நடுவில் இருக்கும் பெருமாள் படத்தை மட்டும் ’UV’ முறையில் அச்சடிக்கப்பட்டது. முதல் பதிப்பில் நம்பெருமாள் மிக அழகாக காட்சி கொடுத்தார். பலர் “அட்டைப் படத்தை பார்த்துக்கொண்டே இருக்கலாம்” என்று கூறிய போது மகிழ்ச்சியாக இருந்தது. இரண்டாம் பதிப்பு இரண்டு புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்று முடிவு செய்த போது என்ன அட்டைப் படம் வைக்கலாம் என்று யோசித்த போது நம்பெருமாள் தாயார் படம் தேடாமலே கிடைத்தது. பாகம்-1, பாகம்-2 இரண்டும் கையில் இருந்தால் ‘சேர்த்தி சேவை!” அநுபந்தம் அட்டைப் படம் என்ன என்று யோசிக்கும் போது மீண்டும் நம்மாழ்வார் மோட்சம் படம் கிடைத்தது. இதையும் தேடவில்லை. மூன்று அட்டைப் படங்களும் எடுத்தவர் என் நண்பர் திரு சுதாகர் அவர்கள். அவருக்கு என் நன்றிகள். மூன்று புத்தகங்களுக்கும் உட்புற அட்டையில் என்ன படங்கள் வைக்கலாம் என்று யோசித்த போது கோவிட் போது பங்குனி உத்திரம் நடைபெறவி...

ஸ்ரீ உ.வே எம்.எஸ். வேங்கடாச்சாரியார் பாராட்டுரை

 ஸ்ரீ உ.வே எம்.எஸ். வேங்கடாச்சாரி பாராட்டுரை முதல் பதிப்பு வெளி வந்த சமயம், அதன் பிரதியை ஸ்ரீமந் நாதமுனிகள் சந்நிதியில் ஆசீர்வாதம் பெற சென்றிருந்தேன். அங்கே என்ன நடந்தது என்று சுருக்கமாக சொல்லுகிறேன். அன்று காலை ஒன்பது மணிக்கு காட்டுமன்னார் கோயிலில் வீரநாராயணப் பெருமாள் முன் நின்றேன். இங்கே தான் சுமார் 1200 வருடங்கள் முன் நாதமுனிகள் நாலாயிரத்தையும் அரங்கேற்றம் செய்தார் என்ற நினைப்பே உள்ளத்தில் ஆனந்தத்தை கொடுத்தது. காட்டுமன்னார் பெருமாள் திருவடிகளில் பிரபந்தப் புத்தகத்தை வைத்து அர்ச்சகர் “இவர் காட்டும் மன்னார். நாலாயிரத்தை நாதமுனிகளுக்குக் காட்டிக்கொடுத்த மன்னார். நாதமுனிகள் தினமும் ஆராதனை செய்த பெருமாள்…” என்று கூறி மன்னார் ஆசிர்வதிக்க அர்ச்சகரிடம் “நாதமுனிகள் திருவடிகளிலும் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்றேன். “பெருமாள் திருவாராதனம், பிறகு கோஷ்டி முடிந்த பின் தான். நாழியாகும்” என்றார். அங்கே இருந்த தீர்த்தம் ஸ்தானிகர் ( ஸ்ரீநிவாசாச்சார் ஸ்வாமி ) “உங்களுக்கு பெங்களூர் செல்லுவதற்கு நேரம் ஆகிவிட்டது என்றால் நாதமுனிகளின் சந்நிதி வாசல் படியில் வைத்துச் சேவித்துவிட்டுச் செல்லுங்கள்” என...

ஸ்ரீ உ.வே.அரங்கராஜன் அவர்கள் அணிந்துரை

ஸ்ரீ உ.வே.அரங்கராஜன் அவர்கள் அணிந்துரை முதல் பதிப்பு பிரபந்தம் வந்த பிறகு ஒரு நாள் மதுரை பேராசிரியர் முனைவர் ஸ்ரீ உ.வே அரங்கராஜன் ஸ்வாமி என்னை தொலைப்பேசியில் அழைத்தார். “பிரபந்தம் பதிப்பாசிரியர் என்ற முறையில் நீங்கள் சிலவற்றை தெரிந்துகொள்ள வேண்டும்” என்று ஆழ்வார் பாசுரத்திலிருந்து சில வரிகளை மேற்கோள் காண்பித்து, அதற்கு விளக்கம் கொடுத்தார். 87 வயதை தாண்டியவர் என்னை கூப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை. அளவு கடந்த பிரேமையும், ஆழ்வார்களின் மீதும், அவர்களின் ஈரத் தமிழின்பால் பிரேமையினால் மட்டுமே அது நடந்தது.   இன்றும் பிரபந்தத்தில் ஏதாவது சந்தேகம் வந்தால் உடனே அவரை அழைத்துவிடுவேன். உடனே வகுப்பு ஆசிரியர் போல அழகாக சொல்லிக்கொடுப்பார்.   இரண்டாம் பதிப்பு பிரிண்டுக்கு போகும் சமயம் அவரிடம் தண்டம் சமர்ப்பித்து ”அடியேனுக்கு உங்கள் கையினால் ஓர் அணிந்துரை வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன். “பார்க்கிறேன்” என்று கூறியவர் சில நாட்களில் என்னை அழைத்து அவர் எழுதிய அணிந்துரையை எனக்கு நிறுத்தி நிதானமாக படித்து காண்பித்து அனுப்பிவைத்தார். இந்த பெரும் பெறு எனக்கு பூர்வ ஜென்ம புண்ணியம். - சுஜாதா தேசிக...

ஆசாரியரின் ‘அநுக்ரஹ’ ஸ்ரீமுகம்

ஆசாரியரின் ‘அநுக்ரஹ’ ஸ்ரீமுகம் ஆசாரியரின் ‘அநுக்ரஹ’ ஸ்ரீமுகம் சென்ற மாதம் அடியேனின் ஆசாரியனான ஸ்ரீ அஹோபில மடம் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர்  பெங்களூர் விஜயத்தின் போது அவரைச் சேவித்து ஆசீர்வாதம் பெற்றேன்.  கிளம்பும் முன் மீண்டும் அவரைச் சேவித்து “இன்னும் இரண்டு வாரத்தில் பிரபந்தம் புத்தகம் இரண்டாம் பதிப்பு வருகிறது.  உங்கள் ஆசிரிவாதம் வேண்டும்” என்றேன்.  “நன்றாக வரும். இது போல மேன்மேலும் செய்யுங்கள்” என்று ஆசிவர்வாதம் செய்தார். அப்போது கையில் இருந்த முதல் பதிப்பை அவரிடம் சமர்பித்தேன்.  “இந்தப் புத்தகம் நினைவு இருக்கிறது” என்று இரண்டாம் பதிப்பின் விவரங்களை கேட்டறிந்தார்.  வீட்டுக்கு திரும்ப, காரை ஸ்டார்ட் செய்யும் போது ஓர் எண்ணம் தோன்றியது.  ஆசாரியன் இருக்கும் அறைக் கதவை தட்டி உள்ளே சென்று அவரிடம் “இரண்டாம் பதிப்புக்கு ஸ்ரீமுகம் அருளவேண்டும்” என்றேன்.  “மெலிதான புன்னகையுடன். ஸ்ரீ காரியம் ஊரில் இல்லை. வந்தவுடன் ஏற்பாடு செய்கிறேன்” என்று அருளினார்.  வாகனத்துக்கு வந்த போது புத்தகம் அச்சுக்கு செல்லும் நாள் நினைவுக்கு வந்தது.   மீண்டும் ...

இரண்டாம் பதிப்பு - பதம் பிரித்த பிரபந்தம் அப்டேட் - 17.05.2022

பதம் பிரித்த பிரபந்தம் அப்டேட் - 17.05.2022 பணம் அனுப்பிவிட்டேன், எனக்கு எப்போது Tracking Number  வரும் ?  பத்து நிமிடம் முன் பணம் அனுப்பியவர்களுக்கு கூட Tracking Number அனுப்பிவிட்டோம்.  இனி பணம் அனுப்புகிறவர்களுக்கு டிராக்கிங் நம்பர் அன்றே அனுப்பப்படும்.  எனக்கு டிராக்கிங் நம்பர் வரவில்லையே ?  கீழே கமெண்ட் அல்லது rdmctrust@gmail.com க்கு ஒரு மெயில் அனுப்பவும்.  சரி, ஏன் இந்த தாமதம் ?  புத்தகம் அறிவிப்பு வந்தவுடன் பலர் புக் செய்ததால் எல்லாவற்றையும் வங்கி கணக்கில் சரி பார்த்து, டிராக்கிங் நம்பர் அனுப்ப தாமதம் ஆகிவிட்டது.  எவ்வளவு புத்தகங்கள் அச்சடிக்க திட்டம் ?  ஆயிரம்  புத்தகங்கள் அச்சடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் அறிவித்த சில நாட்களில் பலர் புக் செய்த்தால்,  கூடுதலாக  புத்தகம் அடிக்க வேண்டும் என்று தோன்றியது.  தற்போது 1500 புத்தகங்கள் அச்சடிக்கிறோம்.  இரண்டு மாதம் கழித்து புத்தகம் கிடைக்குமா ?  புத்தகம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும். இல்லை என்றால் அடுத்த பதிப்புக்கு காத்திருக்க வேண்டும்.  சரி, பணம் அனுப...

’அடியேன் சாமிக்கு’ மூன்று செட் பார்சல்

 ’அடியேன் சாமிக்கு’  மூன்று செட் பார்சல் கடந்த சில மாதங்களாக பிரபந்தம் புத்தகம் குறித்துப் பல அழைப்புகள் வரும். மார்ச் முதல் வாரம் என்று நினைக்கிறேன் ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது. பேசியவர் ’அடியேன் சாமி’ என்று ஆரம்பித்தவுடன் அந்த அடியேனில் உண்மையான ‘அடியேன்’ ஒளிந்துகொண்டு இருந்தது. பேச்சு வட்டாரமொழியில் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு கிராமபுரத்தை நினைவுபடுத்தியது.  குரல் நாற்பது என்றது.  “சாமி பிரபந்தம் புத்தகம் எங்கே கிடைக்கும் அடியேனுக்கு ஒரு பிரதி வேண்டும்” என்று சுத்தமான தமிழில் இருந்தது.  ”புத்தகம் தயாராகிக்கொண்டு இருக்கிறது. இன்னும் ஒரு மாதம் ஆகும்” என்றேன்.  “அப்ப ஒரு மாதம் கழித்து மீண்டும் கூப்பிடட்டுமா ?” “சரி, ஏப்ரல் முதல் வாரம் கால் செய்யுங்க” சரியாக ஏப்ரல் முதல் வாரம் அவர் மீண்டும் அழைத்தார் மீண்டும் அதே “அடியேன் சாமி!” என்று ஆரம்பித்தார்.  “நீங்க ஏப்ரல் முதல் வாரம் அழைக்க சொல்லியிருந்தீங்க…மன்னிக்கனும்” என்று மீண்டும் பிரபந்தம் புத்தகத்தை பற்றிக் கேட்டார்.  ”புத்தகம் ரெடியாகிக்கொண்டு இருக்கிறது…உடையவர் திருநட்சத்திரம் 5-மே அன்று வெளியிட முடிவ...

செய்ந்நன்றி

செய்ந்நன்றி திருக்குறளில் செய்ந்நன்றியறிதல் என்று ஓர் அதிகாரமே இருக்கிறது. பொதுவாக நாம் பிறருக்குச் செய்த நன்றி தான் நினைவில் இருக்கும். ஆனால் பிறர் நமக்கு செய்த நன்றி மறந்துவிடுவோம்.  கைமாறு கருதாது செய்த ‘செய்ந்நன்றியை’ போற்ற வேண்டாம், மறக்காமல் இருக்கலாம். மறப்பதற்கு முன் அதை இங்கே எழுதிவிடுவது என்ற முடிவு. .  ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் இரண்டாம் பதிப்பிற்குப் பலர் உதவியிருக்கிறார்கள்.  புத்தகம் அச்சுக்குச் செல்லும் சமயம், அடியேனின் ஆசாரியனான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகிய சிங்கரை சேவித்து, பிரபந்தம் இரண்டாம் பதிப்பு வருகிறது, அதற்கு உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என்றேன். “நல்லா வரும்!” அன்று திருவாய் மலர்ந்தார். சட்டென்று அவரிடம் ”ஸ்ரீமுகம் அருள முடியுமா ?” என்று கேட்க  “ஸ்ரீகாரியம் ஊரில் இல்லை, வந்தவுடன் தருகிறேன்” என்றார்.  “புத்தகம் சில நாளில் அச்சுக்கு போகிறது… “ என்றேன்.  உடனே ஸ்ரீமுகத்துக்கு ஏற்பாடு செய்து அவர் கையால் அக்ஷதையுடன் ஆசீர்வதித்தார்.   தன் 90 வயதிலும் சிரமம் பாராமல், திரு பி.எஸ்.ஆர் என்ற ‘கடுகு’ ஆசாரிய...