Skip to main content

Posts

Showing posts with the label புதிது

பேட்மேன் பேல்பூரி

பள்ளிக்கூடத்திற்கு வெளியே முன்பு மாதிரி இப்போது தின்பண்டங்கள் எதுவும் விற்பதில்லை. ஹைஜீன் என்று நம் புராக்டர் அண்ட் கேம்பில் குழந்தைகளுக்கு வெளியே எதையும் வாங்கித் தர பயப்படுகிறோம். நான் படிக்கும்காலத்தில் ஸாண்ட்விச், பீட்சா, பர்கர் வகையறாக்களைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஆறாம் கிளாஸ் படிக்கும்போது ‘பாக்கெட் மணி’ 25பைசாவுக்கு, இரண்டு தேன் மிட்டாய்; கூட மூன்று ஜவ்வு மிட்டாய் கிடைக்கும். தேன் மிட்டாயில் தேன் இருக்காது. ஆரஞ்ச் கலரில் (மைதா மாவு என்று நினைக்கிறேன்.) உருண்டை; உள்ளே உடைத்தால் சக்கரைப் பாகு இரண்டு சொட்டு இருக்கும்; அது தான் தேன். அந்த டேஸ்ட் அடையார் ஆனந்த பவன், கிரண்ட் ஸ்நாக்ஸ் என்பதெல்லாம் தேடினாலும் கிடைக்காது. அதை விற்கும் பாட்டியை என்னால் மறக்க முடியாது.

ஆயகலைகள் – கிரேக்கம் முதல் கிரேவிட்டி வரை

“கொல்லைக்குப் போயிட்டு வரேன்!” “போய்ச் சேர்ந்ததும் தந்தி அடிங்க!!” என் தாத்தாவும் பாட்டியும் பேசிக்கொள்ளும் தமாஷாரம். கொல்லைக்கு என்பது நாம் தற்போது உபயோகப்படுத்தும்  “ரெஸ்ட் ரூம்” சமாசாரம். வீடு தாண்டி வெளியே வந்தால் காதல், கனவு, கள்ள உறவு, கோபம், குரோதம், குஷி, பழிவாங்கல், யார் எழுதினார் என்று தெரியாத மர்மம் என்று நவரசங்களையும் பொறித்துச் சொல்லும் இடங்களாக இன்றளவும் பள்ளி கல்லூரி, அலுவலக டாய்லட்கள் திகழ்ந்துவருகின்றன. பஸ் பயணத்தின் போது, வழியில் ‘நிறுத்துவார்கள்’. பாம்பு இல்லாத புதர்ப்பக்கமாக ஒதுங்கவேண்டியது உங்கள் சாமர்த்தியம். பஸ் பயணத்தின் போது, உங்கள் நண்பர் இதோ டீ சாப்பிட்டு வரேன் என்று எங்காவது ஒதுங்கினால், டிரைவர் ஹார்ன் அடித்து, இன்ச் இன்சாக பஸ்ஸை நகர்த்தி பூச்சாண்டி காமிப்பார்.  “ஆனது ஆச்சு, இதோ வந்திடுவார்,” என்று பதறும் உங்களுக்கு வயிற்றை கலக்க ஆரம்பிக்கும். பதினைந்து வருடங்கள் முன் அமெரிக்கா சென்றபோது டாய்லட் பேப்பர் அறிமுகம் கிடைத்தது. காலில் நியூஸ் பேப்பர் பட்டாலே சரஸ்வதி என்று கண்ணில் ஒற்றிக்கொள்ளும் நமக்கு, பேப்பரில் துடைத்துப் போட உடனே மனம் இடம்கொடுக்காது. ஆனாலும், ச...