Skip to main content

Posts

Showing posts from March, 2010

கூட்டம்

“என்னை கன்னத்தில் பளார்னு அறைஞ்சுட்டாண்டா!” “நீ என்ன செஞ்சே?” “பீச் பக்கம் சும்மா வேடிக்கை பாக்கப் போனேன்.” “உன்னை யார்டா அங்கே எல்லாம் போகச் சொன்னா?” இந்த உரையாடல் என் பெரியப்பாவுக்கும் என் அப்பாவுக்கும் நான் +2 படிக்கும் போது நடந்தது. அடி வாங்கியவர் என் பெரியப்பா. அதிகம் படிக்காதவர். நாடகங்கள், ரத்னா ஃகபே சாம்பார் இட்லி தான் அவர் உலகம். இ.பி என்ற மின்சார வாரியத்தில் ஒரு சாதாரண வேலையில் இருந்தார். திருவல்லிக்கேணியில் வாடகை வீடு. இன்றும் சைக்கிள்தான் அவர் ஒரே சொத்து. காது கொஞ்சம் சரியாகக் கேட்காது. அவருக்கு தேவையான விஷயம் மட்டும் காதில் விழும்! எம்.ஜி.ஆர் இறந்த அன்று பீச் பக்கம் சைக்கிளை எடுத்துக்கொண்டு போயிருக்கிறார். போகும்போது ஏதோ ஒரு தெருவில், ஒரு மேசை மீது எம்.ஜி.ஆர். படம் வைத்து, மாலை போட்டு, ஊதுவத்தி கொளுத்தி வைத்துள்ளார்கள். அந்தத் தெருவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு போன அவரை நிறுத்தியிருக்கிறார்கள்… “தலைவரே போயிட்டார். நீ எப்படி சைக்கிள் ஓட்டிக்கொண்டு போவ? சைக்கிளை விட்டு இறங்கி தள்ளிகிட்டு போடா” பெரியப்பா கீழே இறங்கி, “என்ன?” என்று கேட்டிருக்கிறார். “கஸ்மாலம், தலைவர் போயிட்டார்.

பயணங்கள், புத்தகங்கள்

ஜெர்மனியின்… செந்தேன் மலரே தமிழ் மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன் இந்தப் பாடலின் ஆரம்பத்தில் கமல் இரண்டு கைகளிலும், ‘வா, வா,’ என சைகை காண்பிக்க, ஹீரோயின் “ரதி” ஓடி வந்து ‘பச்சக்’ என்று கமல் மீது ஒட்டிக்கொள்வார். திருமணம் ஆன புதிதில் இதே போல நானும் பாட, எனக்கு ஜெர்மனி மேல் காதல் என்று நினைத்து, அலுவலகத்தில் உடனே ஜெர்மனி போகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். தனியாகத் தான். “பிராஜக்ட் ஸ்கோப்பிங். இரண்டே வாரம் தான், திரும்ப வந்துவிடலாம்.” என்றார்கள். ஜெர்மனியில் என்ன கிடைக்கும், எப்படியெல்லாம் நான் கஷ்டப்பட்டேன், சாப்பாட்டுக்கு என்ன செய்தேன், அங்கே எடுத்துக்கொண்ட படங்கள் இவை என்றெல்லாம் எழுதி உங்களை கஷ்டப்படுத்த போவதில்லை, கவலைப்படாதீர்கள். கிளம்பும்போதுதான் ஃபிரேம் ரிலே (Frame Relay) பிராஜக்ட் என்ன என்று தெரிந்துகொண்டு வா என்று சொல்லி கையில் புத்தகத்தைத் திணித்து அனுப்பினார்கள். “என்னது, ஃபிரேம் ரிலேவா? எனக்கு அதப்பத்தி ஒன்னுமே தெரியாதே,” என்று அதிர்ந்து சொல்லி முடிக்கும்போது “லாஸ்ட் கால் ஃபார் பாசஞ்சர்..” என்று அறிவிப்பு வந்து விமானத்தில் ஏற

சர்க்கரைப் பொங்கல்

"மதி நுட்பத்தால் மகத்தான காரியமொன்றைச் செய்துமுடிக்கும் நாள்"-- பொங்கல் அன்று காலை டிவியில் என் ராசிக்கு  இப்படி சொன்னர்கள்.  ஒரு மணி நேரத்தில் அது நடந்தேறியது. "இன்னிக்கு நான் பொங்கல் செய்றேன்," என்றேன். இப்படிச் சொல்லக் காரணம் இருக்கிறது; வீட்டில் குழந்தையைப் பார்த்துக்கொள்ளுவதை விட பொங்கல் செய்வது சுலபம் என்று நினைத்து அப்படிச் சொல்லிவிட்டேன்! "என்ன, நீங்க பொங்கல் பண்ணப் போறீங்களா?"   "ஏன் நான் பண்ணக் கூடாதா?" "அதுக்கில்ல... அதெல்லாம் சரியா வருமா?" சும்மா இருந்த வாய்க்கு கொஞ்சம் பொங்கல் கிடைத்த மாதிரி, "சரியா அளந்து போட்டா தன்னால நல்லா வந்துட்டுப் போறது. எல்லாமே சயின்ஸ்தான்," என்றேன். "சரி, என்ன அளவு, சொல்லுங்க பார்க்கலாம்.." இந்த கேள்விக்கு பதில் ரொம்ப சுலபம். தேர்வில் புத்தகத்தைப் பார்த்து விடை எழுதுவது மாதிரி. என் லாப்டாப்பை எடுத்து " http://mykitchenpitch.wordpress.com/ " என்று என் டைப் செய்து, சர்க்கரை பொங்கலைத் தேடி எடுத்து... "பச்சரிசி ஒரு கப், பயத்தம் பருப்பு, 1/4 கப்...." என்று பட