Skip to main content

Posts

Showing posts from July, 2009

டெலிஃபோன் மணி போல் ...

[%image(20090728-teleCartoon.jpg|115|115|Tele Cartoon)%] ஒன்பதாவது படிக்கும் போது  ஜெரோம் கே.ஜெரோம் (Jerome.K.Jerome)  எழுதிய தொலைப்பேசி பற்றிய நகைச்சுவைக் கட்டுரை எங்களுக்குப் பாடமாக இருந்தது. இந்தக் கட்டுரையை படித்த காலத்தில் எங்கள் வீட்டில் தொலைப்பேசி இல்லை. தொலைப்பேசிக்கு பக்கத்துக் கடைக்குப் போக வேண்டும். சில ஆண்டுகளில் தொலைப்பேசி வீட்டுக்கு வந்துவிட்டது. சினிமாவில்தான் சிகப்பு, பச்சை நிறத் தொலைப்பேசி எல்லாம் பார்க்க முடியும். எங்கள் வீட்டுக்கு வந்தது சாம்பல் நிறம். ஆள்காட்டி விரலைப் போட்டு சுழற்ற வேண்டும். இந்தச் சுழற்சி முறை எப்படி வேலை செய்கிறது என்று போன வருஷம்தான் படித்துத் தெரிந்துகொண்டேன். (டெலிகாம் கம்பெனியில் இருந்துகொண்டு இது கூடத் தெரியவில்லை என்றால் எப்படி?) மவுத்வாஷ் எல்லாம் இல்லாத அந்தக் காலத்தில் மாதத்துக்கு ஒரு முறை ஒரு அக்கா ஜோல்னா பையுடன் வந்து, "என்ன பாட்டி சௌக்கியமா?," கேட்டுக்கொண்டே தொலைப்பேசியை மஞ்சள் துணியைக் கொண்டு துடைத்துவிட்டு, பேசுமிடத்தில் வாசனை ஸ்டிக்கர் ஒட்டிவிட்டுப் போவாள். தற்போது ஒரு ரூபாயில் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். பெட்டிக்கடைக்

கரும்புப் பூவும் சோம்நாத்பூரும்.

எங்கள் அலுவலக கேண்டீனில் பெங்களூர் மைசூர் சுற்றுலா தலங்களின் படங்கள் பெரிய சைஸில் அலங்கரித்திருக்கும். சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல் அந்த கொலாஜில் ஒரு கோயில் மட்டும் தனியாக வசீகரிக்கும். தினமும் சாப்பிடும்போது கோயில் பக்கம் உட்கார்ந்து சுமாரான சாப்பாட்டையும் ரசித்துச் சாப்பிட்டிருக்கேன். படத்தில் ரசித்த அந்தக் கோயிலுக்கு மார்ச் மாத ஒரு சனிக்கிழமை திடீரென 'சரி கிளம்புங்க' என்று குடும்பத்துடன் கிளம்பினேன் - சோம்நாத்பூர்! பெங்களூரிலிருந்து 140கிமீ தூரத்தில் சோமநாத்பூர் என்ற அமைதியான சின்ன கிராமமும் இந்தப் பழமையான கோயிலும் இருக்கின்றன. கிபி 1268ல் ஹோய்சாளர்களால் கட்டப்பட்டது. ஹோய்சாளர்கள் கடைசியாகக் கட்டிய பெரிய கோயில் என்கிறார்கள். பேலூர், ஹலேபிடிலும் இந்த மாதிரி கோயில்கள் இருக்கின்றன. ஆனால் சோம்நாத்பூர் கோயில் முழுமையாக இருக்கும் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயில் மூன்றாம் நரசிம்ம மன்னனின் தளபதியான சோமநாதன் என்பவரால் கட்டப்பட்டது என்ற குறிப்பும் இருக்கிறது. "சார் கனகபுரா வழியா போனால், மாளவல்லி கிராமம் வரும்... " போன்ற தகவல்க

வின்க்ஸ் கிளப்

[%image(20090702-Winxclubandpixies.jpg|140|200|winx club)%] "வின்க்ஸ் கிளப்?" என்றேன் ஒன்றும் புரியாமல்.. "இது கூட தெரியாதாப்பா உனக்கு!" என்று என் லேப்டாப்பை அபகரித்து, www.winxclub.com என்று டைப் அடித்துக் காண்பித்தாள். "என்னது இது?"   "இதோ இதுதான் நான் ஃபிளோரா."   "ஃபிளொராவா?" "ஆமாம் ஸ்கூல்ல நான், ஐஸ்வரியா, வேதிக்கா எல்லாம் சேர்ந்து வின்க்ஸ் கிளப் ஆரம்பிச்சிருக்கோம்." "ரோஹித் அந்த கிளப்ல இல்லையா?" "நோ" "அப்ப இது லேடீஸ் கிளப்பா?" "லேடீஸ் இல்லப்பா. கேர்ல்ஸ்!" "நேத்திக்கி ஸ்டெல்லா எனக்கு ஸ்டிக்கர் எல்லாம் கொடுத்தா" "ஸ்டெல்லா?" "நான் ஃபிளோரா. ஐஸ்வரியா தான் ஸ்டெல்லா. என்னப்பா நீ, இது கூட தெரியாதா?" "சரி" "அவ லன்ச் சாப்பிடரப்போ எனக்கு சப்பாத்தி எல்லாம் தருவா. ராஜஸ்தானி பிக்கிள் ரொம்ப நல்லா இருக்கும்பா" "ஓ" "அவ மதர்டங் தெலுங்கு. ஆனா அவ தமிழ்ல பேசுவா. அவ அப்பா வேற ஒரு கல்யாணம் செஞ்சுக்க போறாளாம்" "அப்படியா?" "