Skip to main content

Posts

Showing posts from May, 2012

சுஜாதாவின் நேர்காணல்கள்

சுஜாதா நேர்காணல்கள் என்ற புத்தகத்தை கொண்டுவர வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆவல். சுஜாதாவின் இரண்டு நேர்காணல்கள் மிக முக்கியமானது. ஒன்று "சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் என்னை ஏற்றுக்கொள்ளாததைப் புரிந்துக்கொள்ள முடிகிறது" என்று தீராநதியிலும், இன்னொன்று படிகளில் வந்தது. இதை தவிர அவருடைய நேர்காணல்கள் பல பத்திரிக்கையில் வந்திருக்கிறது. சுட்டி விகடனில் கூட வந்திருக்கிறது. 1996-97ல் தமிழ் டாட் நெட் என்ற இணைய குழுமம் பாலா தலமையில் சுறுசுறுப்பாக இயங்கியது. இன்றும் அதில் இருந்த பலர் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள். 1997 மார்ச் மாதம் குழுமம் சார்பாக சுஜாதாவின் பேட்டி எடுக்கலாம் என்று முடிவு செய்தோம். குழுமத்தில் பலர் கேள்வி கேட்பார்கள், அதை நான் தொகுத்து சுஜாதாவிடம் பதில் பெற வேண்டும். அவ்வளவு தான். சுஜாதாவுடன் எனக்கு அப்போது பரிட்சயம் ஏற்பட்ட புதுசு. அவரிடம் கேட்பதற்கு கொஞ்சம் பயமாக இருந்தாலும், கேட்டுவிடலாம் என்று கேட்டேன். உடனே சரி என்று ஒப்புக்கொண்டு விட்டார். யுனிக்கோட் எழுத்துரு இல்லாத காலம். அதனால் தமிழில் மெயில் அனுப்பிவிட்டு "சார் எழுத்தெல்லாம் தெரிகிறதா?" என்று