Skip to main content

Posts

Showing posts from January, 2017

ஸாளக்கிராமத்தை கடித்த குழந்தை

பக்தி என்பது தமிழ் வார்த்தை கிடையாது; சமஸ்கிருத வார்த்தை. ஆழ்வார் பாடல்களிலும் சங்கப் பாடல்களில் பக்தி என்ற வார்த்தையே கிடையாது. திருமங்கையாழ்வார் ‘பத்திமை’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்துகிறார். (பெரிய திருமொழி). பத்திமை என்றால் அன்பு, காதல்! உண்மையான பக்தி. 1925-ல் பிரசுரமான ஒரு தமிழ் அகராதியில் பக்தி=பத்தி என்ற குறிப்பு உள்ளது. பக்தி என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘மிஸ்டிஸிசம்’ (Mysticism) என்று சொல்லுவார்கள். (பக்தர்கள் - Mystics). மிஸ்டிஸிசம் என்பதற்கு ஆங்கில அகராதியில் விளக்கம் இப்படி இருக்கிறது “One who seeks by contemplation or self-surrender to obtain union with or absorption into the Deity, or who believes in spiritual apprehension of truths beyond the understanding” தமிழில் “இறைப் பொருளினிடம் தம்மையே அடைக்கலமாகத் தந்து பக்தி அல்லது தியானம் மூலம் இறையனுபவத்தைப் பெறுபவர் என்றும் சாதாரண அறிவிற்கு அப்பாற்பட்டதாகிய ஆன்மீக உண்மைகளை உணரமுற்படுபவர்” என்று விளக்கம் சொல்லலாம். ( நன்றி: அ.ச.ஞானசம்பந்தன் ) நிச்சயம் மேலே சொன்ன ஆங்கிலம், தமிழ் இரண்டு விளக்கமும், இரண்டு மூன்று முறை ப

நம் கூரத்து ’ஆழ்வான்’

சமீபத்தில் ஸ்ரீரங்கம் சென்றிருந்த போது கூரத்தாழ்வான் சன்னதியில் ‘கூரத்தாழ்வார்’ என்று இருந்ததை ‘கூரத்தாழ்வான்’  என்று மாற்றியிருந்தார்கள். ஸ்ரீராமானுஜருடைய பிரதான சீடர் கூரத்தாழ்வானை, கூரத்தாழ்வார் என்று மரியாதையாகக் கூப்பிடாமல் ஒருமையில் ’கூரத்தாழ்வான்’ என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் அழைப்பார்கள். இதற்குக் காரணம் என்ன ? என்று கேட்டால், கூரத்தாழ்வார் என்பவர் அவர் திருதகப்பனார் அதனால் வேறுபடுத்திக்காட்ட இவரைக் கூரத்தாழ்வான் என்று அழைக்கிறார்கள் என்று பலர் கூறுவர். சில காலம் முன்புவரை, நானும் அதே போல தான் நினைத்துக்கொண்டு இருந்தேன். ஒரு முறை கூரத்தாழ்வான் திருநட்சத்திரத்துக்கு கூரம் சென்றிருந்தேன். அங்கே சன்னதியில் கூரத்தாழ்வான் வாழ்க்கை சரித்திரம் படமாக இருந்தது அதில் ஏன் ஆழ்வான் என்று குறிப்பிட்டுள்ளார் என்று தெரிந்துகொண்டேன். ஆளவந்தார் தொடக்கமாக ஸ்ரீராமானுஜர் காலம்வரை, திவ்வியப் பிரபந்தத்திற்கு வாய் மொழியாகவே உரைகள் இருந்தது. வியாக்கியானங்கள் எல்லாம் ஸ்ரீராமானுஜருக்கு பிறகு தான் எழுதப்பட்டது. ஸ்ரீராமானுஜர் போலவே அவர் சீடர்களும் திவ்யபிரபந்தத்தை முழுமையாக சுவாசித்தார்கள். தாங்கள் சுவைத்