Skip to main content

Posts

Showing posts from February, 2016

கையெழுத்து சொல்லும் கதை - பகுதி 3 ( நிறைவு )

பெரிய நம்பிகள் திருமாளிகை எண்! ஒரு சோழ மன்னனால் கூரத்தாழ்வான், பெரியநம்பிகள் இருவரின் கண்கள் பிடுங்கப்பட்டன அந்த துயரமான நிகழ்வை சொல்லுவதற்கு முன் இந்த வருடம் ஜனவரி 7 எனக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அன்று மார்கழி கேட்டை ஸ்ரீபெரிய நம்பிகள் திருநட்சத்திரமும், தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருநட்சத்திரமும் சேர்ந்த துவாதசி. காலை 6 மணிக்குப் பெரிய பெருமாளை தரிசிக்க சென்ற போது 50, 100, 250 ரூபாய் என்று டிக்கெட் வரிசை அமைத்து இன்னும் பெரிய பெருமாளாகியிருந்தார். கோயில் முழுக்க கருப்பு-சிகப்பு நாத்திகர் கலரில் ’கோவிந்தா’ என்று கோஷம் போடும் ஆஸ்திகர் கூட்டம். நாழிக்கேட்டான் கோபுர வாசலில் கோயிலுக்கு வரும் பர்முடா, கைலி கூட்டத்தை காவல்துறை திரும்ப அனுப்பிக்கொண்டு இருந்தது. நெற்றியில் திருமண், குடுமி, கச்சத்துடன் அதை புரியாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார் ஒரு வெள்ளைக்காரர். பழசு ஆனா புதுசு ! துவாதசி அன்று பெருமாள் துளசி தீர்த்தம் கொடுத்து அருள, அதை வாங்கிக்கொண்டு, கொள்ளிடம் சலவை செய்த மாதிரி இருந்த கோயிலை பார்த்துக்கொண்டே ஆயிரம் கால் மண்டபத்தின் புது தோற்றத்தைக் கொஞ்ச நேரம் ரசித்

ஐஸ்பாக்ஸ் - சிறுகதை

சென்னை தி.நகரில் இருந்து தேனாம்பேட்டை போகும் சாலையின் குறுக்கே இருக்கும் அந்த சின்ன சந்தின் பெயர், 'மாடல் ஹவுஸ் ரோடு லேன்.' தென்னந் துடைப்பத்தை திருப்பிப் பிடித்த மாதிரி பலவண்ண கட்சிக்கொடிகள் பறந்து கொண்டிருக்கும் அந்தச் சந்துக்கு எதிர்புறம் ஒரு ஜெராக்ஸ் கடை சந்து ஆரம்பத்தில், ஆலிவ் பச்சை நிறத்தில் கவிழ்ந்துகிடக்கும் குப்பைத்தொட்டியைக் கடந்து உள்ளே நுழைந்தால், மொத்தம் ஒன்பது வீடுகள். அதில் மூன்றாவது வீட்டில், ஐஸ்பாக்ஸ் ஆனந்தன் என்கிற ஆனந்தன் வசிக்கிறார் என்பதைத் தவிர இந்த சந்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. சின்னத்திரைநிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர் போன்றவர்களை ஷாப்பிங் மால், கடைத்தெரு, தியேட்டர் போன்ற இடங்களில் பார்க்கும்போது, இவரை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே...' என்று நமக்குத் தோன்றும் அல்லவா? ஆனந்தனும் அந்த வகை.

கையெழுத்து சொல்லும் கதை - பகுதி 2

மா. செல்லப் பெருமாள் கோனார் அவர்கள் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் செய்த சொற்பொழிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து 1976ஆம் வருஷம் ஒரு சின்ன புத்தகத்தை அச்சடித்து பலருக்கு கொடுத்தார் என்று போன பகுதியில் பார்த்தோம். அவர் தொகுத்த அந்தப் புத்தகத்தில் அவர் எழுதிய முன்னுரையில் சில பகுதிகளை இங்கே தருகிறேன். “.... அறிந்தோ அறியாமலோ அசுத்தப்பொருளின் மீது காலோ கையோ பட்டுவிட்டால், மனிதன் அதை உணர்ந்தவுடன் அவன் உள்ளம் அருவருப்பின்பாற்பட்டுத் துடிதுடித்துப் போகிறது. உடன் அவன் முதற்காரியமாக தூய நீர்நிலைக்குச் சென்று தன் உள்ளம் போதும் போதும் எனக் கருதும் வரை கால்களைத் தேய்த்துத்தேய்த்துக் கழுவுகிறான். இதனினும் தீவிரமாகவுள்ளவன் நீரில் தான் உடுத்தியுள்ள உடைகளுடன் மூழ்கிக் குளித்து எழுகிறான். அதன் பிறகுதான் அவர்கள் உள்ளம் அமைதி பெறுகிறது. இது மனிதனின் இயல்பாகும் . இங்ஙனே, 1930 ஆம் ஆண்டினின்று 1962 ஆம் ஆண்டு வரை அடியேன், பகுத்தறிவுவாதி எனக் கூறிக் கொள்ளும் நாஸ்தீகவாதியாக அப்படுகுழியில் மூழ்கிக் கிடந்தவனவேன். பெரியபெருமாளான அழகிய மணவாளனின் திருவருளால் 1962ஆம் ஆண்டினின்று ஸ்ரீவைணவன் எனும் உணர்வு வரப்பெற்று

கையெழுத்து சொல்லும் கதை - பகுதி 1

மா. செல்லப் பெருமாள் கோனார் ஒரு தீவிர தி.க தொண்டர். மதுரை வாசி. ’தந்தை பெரியார்’ மதுரை வந்தால் இவர் வீட்டில் தான் தங்குவார். 1962 ஆம் வருஷம் ஒரு மார்கழி மாதம் மதுரை கள்ளழகர் கோயிலில் திருப்பாவை உபன்யாசம் நடந்துக்கொண்டு இருக்க அன்று மார்கழி கேட்டை – பெரிய நம்பிகள் திருநட்சத்திரம் ( ஸ்ரீராமானுஜருக்கு சமாஸ்ரயணம் செய்தவர் பெரியநம்பிகள்). உபனயாசகர் பெரிய நம்பிகள் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கிறார். “தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறநேர் நம்பி ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது (காலமான போது) மாறநேர் நம்பிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார் பெரிய நம்பிகள். இந்தச் செயலை பல ஸ்ரீவைஷ்ணவர்களை முகம் சுளிக்க செய்திருக்க வேண்டும். அவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் போய் முறையிட ஸ்ரீராமானுஜரும் தன் ஆசாரியனிடம் “இது தகுமோ?” என்று கேட்க அதற்கு நம்பிகள் “பறவையான ஜடாயுவுக்கு ராமர் இறுதிச் சடங்குலளைச் செய்தார் அவரைக் காட்டிலும் நான் பெரியவனோ ? அல்லது அந்த பட்சியை காட்டிலும் நம் மாறனோர் நம்பித் தாழ்ந்தவனா ? மேலும் உயர்ந்த குலத்தில் பிறந்த யுதிஷ்டிரர் (தருமர்) தாழ்ந்த குலத்தில் பிறந்தவளின் மகனாக பிறந்த விதுரருக்கு இத

படம் சொல்லும் கதை

படத்தில் இருக்கும் சிதிலமடைந்த வீடு யாருடையது ? இந்த திருமாளிகையில் அப்படி என்ன விஷேசம் ? என்று அறிந்துக்கொள்ள முதலில் ததியாராதனம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன என்று பார்க்கலாம் பிறகு கிபி 1122க்கு உங்களை அழைத்துச்செல்கிறேன் ! ததீயாராதனம் என்ற சொல்லை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷையில் ‘சாப்பாடு’ என்ற சொல்லாக தற்போது பயன்படுகிறது. ஆனால் ததீயாராதனம் என்றால் ‘ததீயர்களை’ ஆராதித்தல் என்று பொருள். ததீயர்கள் என்றால் அடியார்கள். ஆராதித்தல் என்றால் உபசரித்தல் பணிவிடை, உபசாரம் என்ற பல விதமாகச் சொல்லலாம். அதாவது பாகவதர்களை மகிழும்படி செய்தல் ததீயாராதனம். பெரியாழ்வார் திருமொழியில் நா அகாரியம் சொல் இலாதவர் நாள்தொறும் விருந்து ஓம்புவார் தேவ காரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர் ( 360 ) என்று பாடியுள்ளார். பேசக்கூடாதவற்றைத் தம் நாவால் பேசமாட்டார்கள். தினமும் வேதம் ஓதி பகவானை வழிபட்டு ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஆராதனம் செய்துகொண்டு விருந்தோம்புவார்கள் வாழுமிடமான திருக்கோட்டியூர் என்று பாடியுள்ளார். அவர் மேலும் காசின் வாய்க் கரம் விற்கிலும் கரவாது மாற்