2021 திரும்பி பார்க்கிறேன் ! 2021 மற்ற வருடங்கள்போல இப்ப தான் ஆரம்பித்தது அதற்குள் முடிந்துவிட்டது. சில நினைவுகள். உருப்படியான விஷயம் : பதம் பிரித்த பிரபந்தம் புத்தகம் வெளியிட்டது . மணக்கால் நம்பி திருநட்சத்திரம் அன்று அறிவிப்பு செய்து, பங்குனி உத்திரம் அன்று அச்சுக்குச் சென்று, உடையவர் திருநட்சத்திரம் அன்று வெளியிடப்பட்டது. 1300 புத்தகம் முழுவதும் தீர்ந்து, கொரோனா இரண்டாம் அலையின்போது அனுப்பப்பட்டப் புத்தகம் மொத்தம் 1008(!). பெற்றுக்கொண்டவர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டார்கள். அடுத்த வருடம்(2022) அதன் இரண்டாம் பதிப்பு கொண்டு வரப் பெருமாள் அருள் புரிய வேண்டும். வேலைகள் மெதுவாக நடந்துகொண்டு இருக்கிறது. எழுத்துப் படிப்பு : கல்கி கடைசிப் பக்கம் தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. பல கடைசிப் பக்கம் இரவு 12 மணிக்கு டெட்லைனுக்குள் கடைசியாக அனுப்புகிறேன். தினம் ஒரு பாசுரம் எழுதத் தொடங்கி, கூட்ஸ் வண்டிபோல நடுநடுவே நிறுத்திவிட்டுத் தொடர்கிறேன். எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாகப் படிக்க வில்லை. ஏ.கே.செட்டியார் முழுத் தொகுப்பு, கல்கி ஆசிரியர் அன்புடன் கொடுத்த முகம்