Skip to main content

Posts

Showing posts from March, 2008

இலக்கிய சிந்தனை சார்பில் சுஜாதா இரங்கல் கூட்டம்

அன்பு மிக்க தேசிகன். வணக்கம். இன்று (22.3.08 - சனிக்கிழமை)சுஜாதா இரங்கல் கூட்டம் இலக்கிய சிந்தனையின் சார்பில் சென்னையில் நடந்தது. இ.பா தலைமை. திருமதி சுஜாதவும் இரு மகன்களும் வந்திருந்தனர். கஸ்தூரி ரங்கன், க்ரேஸி மோகன், திருப்பூர் க்ருஷ்ணன், அலிடாலியா ராஜாமணி, பூர்ணம் குழு ரமேஷ், பாமா கோபாலன், மொழி பெயர்பாளர் சவுரி ராஜன், வைத்தீஸ்வரன், ரவி சுப்ரமணியம், செங்கை ஆழியான், நான் எல்லோரும் பேசினோம்.   கஸ்தூரி ரங்கன் டெல்லியில் வாரா வாரம் அவரை சந்தித்தது பற்றி சொன்னார். அவர் சொன்ன ஒரு வாக்கியம் கண்ணில் நீர் வரவழைத்தது. “சுஜாதாவை விட நான் மூன்று வருஷம் பெரியவன். என் இரங்கல் கூட்டத்தில் அவர் பேசுவார்னு நினைச்சேன். இப்பிடி ஆயிடிச்சு.” என்றார். மொழி பெயர்ப்பாளர் சவுரி ராஜன் டெல்லியில் ஹிந்தி தினசரிகளில் கூட அவர் இறந்ததை வெளியிட்டார்கள் என்றார். இலங்கையை சேர்ந்த செங்கை ஆழியான் இலங்கையின் பெரும்பலான எழுதாளர்கள் அவருடைய பாதிப்புடன் எழுதுவதாக சொன்னார். தானும் அப்படியே என்றார்! இலங்கையில் எல்லா பத்திரிகைகளும் குறைந்தது ஒன்று அல்லது அரை பக்கமாவது அவர் மரணத்துக்கு வருந்தின என்றார். அலிடாலியா ராஜாமணி சொன

சுஜாதா - நினைவுகள்! - என்.சி.மோகன்தாஸ்

இந்த வாரம் தினமலர் வாரமலரில் வந்த கட்டுரை கேரளா  பரலூர் எனும் பகுதியில் 1982ல் முதன் முதலாக எலக்ட்ரானிக் ஓட்டு எந்திரத்தை செயல்படுத்த சுஜாதா வந்திருந்தபோது தான் அவருடன் எனக்கு முதல் சந்திப்பு. அப்போது கொச்சியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தேன். எழுத்தில் சக்கை போடு, போடும் நபரா இவர் என, முதல் நோட்டத்திலேயே சுஜாதா மீது ஏமாற்றம்! அவரது நடவடிக்கைகளை, "சாவி' பத்திரிகைக்கு எழுதலாமா எனக் கேட்டேன். "ஓ... தாராளமாய்!' என்றார். எழுத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்த எனக்கு, அவரை பற்றி எழுதி, பரபரப்பாய் நான் பேசப் பட வேண்டும் என்ற வேகம்; எனக்குள் பரபரப்பு. "இது அரசாங்கத்து சமாஜாரம். தப்பாய் எதுவும் வந்து விடப்படாது. எழுதி என்னிடம் காட்டிட்டு அனுப்பு!' என்றார். அதன்படியே எழுதிக் காட்டினேன். "ப்...ச்... போன்ற ஒற்றுக்களுக்கும், உங்களுக்கும் தகராறு போலிருக்கு!' என்று, கூறி விட்டு, சாப்பாட்டில் ஐக்கியமானார்.அன்றே அவசர தபாலில் சென்னைக்கு அனுப்பினேன். இரண்டு நாளில், சாவி அலுவலகத்திலிருந்து போன்... "கட்டுரை நன்றாக இருக்கிறது... பிரமாதமாய் பிரசுரமாகப் போகிறது!' என்று

கற்றதும் பெற்றதும்

ஏதோ தேடும் போது, சுஜாதா எழுதிய கடைசி கற்றதும் பெற்றதும் கண்ணில் பட்டது. சில பகுதிகள் உங்கள் பார்வைக்கு. விகடனில் கற்றதும் பெற்றதும் முடிக்கும் போது, தற்காலிக முற்றும் மீண்டும் சந்திக்கலாம் என்று சொல்லுவார். இந்த முறை திடீர் என்று 'முற்றும்' போட்டார்.  ஏன் என்று பிறகு ஒரு சமயம் சொல்லுகிறேன். இப்போது படிக்க கடைசி பகுதி.. கம்ப்யூட்டரே, பதில் சொல்லு! வயசாவதன் தவிர்க்க முடியாத அடையாளங்களில் ஒன்று, சமீபத்திய ஞாபகங்கள் கண்ணாமூச்சி காட்டுவது. நினைவு இருப்பது போலிருக்கும்; வார்த்தை சிக்காது. இரண்டு நாட்களுக்கு முன், முகம்மது கைஃப் என்ற பெயர் சட்டென்று மறந்து போய், அதி-காலையில் ஒரு மணி நேரம் விழித்திருந்து யோசித்தேன். இந்த உபாதைக்கு நியூரான்களைப் புதுப்பிக்க மருந்து மாத்திரைகள் இருக்கிறதா? டாக்டர் ராமச்சந்திரன் போன்றவர்கள் சொல்லலாம். ஆனால், நான் கடைப்பிடிப்பது ஒரு நிச்சயமான மார்க்கம்... இன்டர்நெட்! ஞாபகம் வரவில்லை என்றால், அப்படியே விட்டு விட்டுக் காலை எழுந்ததும், கம்ப்யூட்டரைத் திறந்து google அலலது yahoo answers-ல் கேள்வி கேட்டால், கிடைத்துவிடும். இப்படித்தான் சாமர்செட் மாம் எழுதிய நா

தமிழ் மாயக் கட்டம்

விக்கிரமாதித்தன் 'சிம்ரன் சின்னத் திரையை' பார்த்து அழுதுகொண்டு இருந்தான். "சீரியல் பார்க்காதேன்னு எவ்வளவு முறை சொல்றது?" என்று எட்டிப்பார்த்தது வேதாளம் "சீரியல் பார்த்தாலும் வாத்தியார் நினைவு வருது என்ன செய்ய" வேதாளம் பச்சையாக ஏதோ காண்பித்தது. அதை விக்கிரமாதித்தன் பார்த்த போது,  இப்படி தெரிந்தது. 5 22 18 28 15 2 12 8 25     "இந்த மாதிரி பழைய விஷயத்தை எல்லாம் தூசு தட்டாதே, தும்மல் வருது" என்று விக்கிரமாதித்தன் சலித்துக்கொண்டான்.  வேதாளம் விடுவதாக இல்லை இது மாயக் கட்டம் இல்லை, மாயாஜால கட்டம் "மேல  உள்ள மாய கட்டங்களில் உள்ள எண்களின் ஆங்கில வார்த்தைகள் கொண்டு இந்த மாயா சதுரம் இங்கே இருக்கு பாரு" விக்கிரமாதித்தன் பார்த்தான் five (4) twenty-two (9) eighteen ( 8 ) twenty-eight (11) fift

சுஜாதா பற்றி குங்குமத்தில் வந்தவை

ஓவியர் ஜெயராஜ் http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_14_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_15_13_3_2008.jpg தி.முருகன் குங்குமம் முதன்மை ஆசிரியர் http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_18_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_19_13_3_2008.jpg சுஜாதா கேள்வி பதில்கள் http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_20_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_22_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_23_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_24_13_3_2008.jpg விவேக் http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_27_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_28_13_3_2008.jpg மனுஷ்ய புத்திரன் http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam_30_13_3_2008.jpg http://www.desikan.com/blogcms/wiki/media/sujatha/kungumam

வாடாத நினைவுகள் - லேனா தமிழ்வாணன்

லேனாவின் பார்வையில் என்ற இந்தப் பகுதியில் சமூக அக்கறைகளை மட்டுமே இதுவரை எழுதி வந்திருக்கிறேன். ஆனால் முதல் முறையாக இப்பகுதியில் எழுத்தாளர் சுஜாதாவிற்கு அஞ்சலி செலுத்த எண்ணுகிறேன். தமிழ் எழுத்துலகில் நவீன வடிவங்களைப் பயன்படுத்தியவர்களுள் சுஜாதாவின் பங்கு மிக உருப்படியானது. 60 வயது ஆனதும் சாய்வு நாற்காலியைக் கேட்காமல், மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளும் முன்பு வரை எழுத்து எழுத்து என்று 73 வயதிலும் எழுத்தை அப்படி நேசித்தார். வாசகர்கள் எதிர்பார்ப்பு மற்றும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டே அவரது படைப்புகள் அமைந்தன. தம் திருப்திக்கு எதையாவது எழுதுவேன்; படித்துத் தொலைப்பது உங்கள் தலையெழுத்து என்கிறபோக்கு சுஜாதாவிடம் இருந்ததே இல்லை. 1970களில் இளைஞர்களாக இருந்தவர்களை ஈர்க்க ஆரம்பித்தார். அவர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டார். காலத்திற்கு ஒவ்வாத எழுத்து என்றோ, இவர் அந்தக் காலத்து ஆசாமி என்றோ இவரது எழுத்துக்கள் பெயர் வாங்கியதே இல்லை. நவீனங்களுக்கு ஏற்ப, அண்மைத் தலைமுறைக்கு ஏற்பத் தன் எழுத்தை நவீனப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் சுஜாதாவுக்கு இருந்தது. அறிவியல் சார்ந்த எழுத்து என்று எடு

சுஜாதா அஞ்சலி கூட்டம் - பெங்களூர்

நேற்று பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் சுஜாதா நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது. நானும் ஒரு சுஜாதா வாசகனாக என் நண்பருடன் சென்றிருந்தேன். கூட்டம் முதலில் கப்பன் பூங்காவில் என்று சொன்னார்கள், ஆனால் திடீர் என்று ஞானோதயம் வந்து தமிழ்ச் சங்கத்தில் என்று அறிவித்தார்கள். கொசுக்கடிக்கு இந்த இடம் தேவலாம் என்று போனேன். திண்ணையில் அறிவிப்பு மாறிக்கொண்டே இருக்க, கூட்டம் மாலை 4:00லா, 4:30மணியா என்ற குழப்பம் இருந்துக்கொண்டிருக்க. எதுக்கும் போகும் முன் திண்ணையில் ஒரு தடவை பார்க்கலாம் என்று பார்த்தால் 5:00மணி என்று போட்டிருந்தது. 4:45 மணிக்கு போன போது 'பெங்களூர்த் தமிழ்ச் சங்கம்'  வெளியில் சாக்பீஸில் 'சுஜாதா நினைவு அஞ்சலி கூட்டம்' மாலை 5:30 என்று பலகையில் எழுதியிருந்தார்கள். பெங்களூர்த் தமிழ்ச் சங்கம் 'அல்சூர் லேக்' பக்கத்தில் இருக்கிறது. நான் பலபேரிடம் விலாசம் கேட்ட போது, எல்லோரும் இப்படி தான் சொன்னார்கள். லேக் பக்கத்தில் தமிழ்ச் சங்கம் என்று கேட்டால் யாராவது குளத்தில் தள்ளிவிடும் அபாயம் இருப்பதால் முகவரியை கொடுக்கிறேன்: சரியான முகவரி #59, அண்ணாசாமி முதலியார் தெரு. 5:35மணி ஆகியிர

சுஜாதா எழுதிய கடைசி பாசுரம்

சில நாட்களாக உடல்நலத்தில் சற்று நலிவு ஏற்பட்டதனால் ஓரிரு எண்ணங்கள் தொடரை தொடர்ந்து எழுதமுடியவில்லை. இப்பொழுது உடல்நிலை சரியாகிவிட்டதால் இந்த தொடரை விட்ட இடத்தில் எடுக்கிறேன். திவ்ய பிரபந்தத்தில் எந்த பாசுரத்திலும் ஏதாவது ஒரு புதிய செய்தி இருந்தே தீரும். அந்த புதிய செய்திகளை சொல்லும்போது அதன் தமிழும் பக்தியும் சொல்லாட்சியும் அவரவர் ஆர்வங்களுக்கேற்ப நமக்கு கிடைக்கும். பல புதிய சொற்கள் பயில முடியும். இதற்காக ஒரு வைணவனாகவோ பக்தியால் நிறைந்தவனாகவோ இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. தமிழார்வம் மட்டும் போதும். உதாரணத்திற்கு குலசேகர ஆழ்வாரின் 'வாளால் அறுத்து சுடினும்' என்ற பாசுரத்தில் அந்த காலத்து சர்ஜரி பற்றிய செய்திகள் கிடைத்தன என்பதை குறிப்பிட்டோம். இப்படி ஒவ்வொரு பாசுரத்திலும் நம்மால் திளைக்க முடியும். 'கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை, அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள், மற்று ஒன்றினைக் காணாவே.' இந்தப் பாசுரத்தை எழுதிய திருப்பாணாழ்வாரின் வாழ்க்கையைப் பற்றி நிறைய கதைகள் உண்டு. அவர் ஸ்ரீரங்கம் கோவில் நுழைவதற்கு அனுமதி கிடைக

Why He Mattered...

Why He Mattered... Friday March 7 2008 18:24 IST Baradwaj Rangan The unfortunate demise of the Tamil writer Sujatha — from the news-channel eulogies, though, you’d think the man was merely a screenwriter, giving shape to the visions of Shankar and Mani Ratnam — has occasioned a steady outpouring of how-I-learnt-to-read-Tamil-with-his-books memories, and while I know from experience that that’s true, I feel no one has zeroed in on why this is so.   After all, there were so many other Tamil writers — the great modernist god that was the early Vairamuthu, say — who were Sujatha’s contemporaries and who were certainly no slouches when it came to a certain felicity of expression that could make any rank newbie fall in rapturous love with the language. But I think what made Sujatha stand apart and speak to so many of us who grew up in the seventies and the eighties was that his writings were instantly appealing to a generation that could understand Tamil and speak Tamil and read Tamil an

அப்போலோ தினங்கள்

அப்போலோ தினங்கள் 'அப்போலோ தினங்கள்' என்று கடைசியாக அவர் எழுதியதைப் பார்த்தபோது, எனக்கு அவர் ஆஸ்பத்திரியில் போராடிய கடைசித் தருணம்தான் நினைவுக்கு வந்தது. அதற்கு முன் நான் அவரைப் பார்த்தது, பிப் 21ம் தேதி. உடம்பு மெலிந்து, ஆக்ஸிஜன் மிஷினின் உதவியால் சுவாசம். கடந்த பதினைந்து வருடங்களில் நான் அவரை எவ்வளவோ முறை சந்தித்திருக்கிறேன்; இதுமாதிரி பார்ப்பது முதல் முறை. அத்தனை கஷ்டத்திலும், 'என்ன தேசிகன், ஆம்டையா நல்லா இருக்காளா? ஆண்டாள் எப்படி இருக்கா? ஸ்கூல் எல்லாம் ஒழுங்காப் போறாளா?' என்று எதையும் விடாமல் விசாரித்தார். எல்லாரும் நல்லா இருக்காங்க சார்!' 'கிரிக்கெட் என்னப்பா ஆச்சு, வழக்கம் போலதானா?' என்றார். சில மணி நேரத்துக்கு முன்பு எடுத்த ரத்தப் பரிசோதனை அளவில் கிரியாடினின் அளவு அதிகமாக இருப்பதாகத் தகவல் வந்ததால், டாக்டர் உடனே மருத்துவமனைக்கு வரச் சொல்லியிருந்தார். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. 'இந்தத் தடவை உடம்பு ரொம்ப படுத்திடுத்து. ஆஸ்பிட்டல் போனா இன்னும் படுத்துவாங்களே' என்றார். 'ஒண்ணும் ஆகாது சார்! ஒரு டயாலிஸிஸ் பண்ணிட்டு அனுப்பிடுவாங்க!' கண்கள

சுஜாதா – ஒரு சகாப்தம் கல்கி கட்டுரை

போனவாரம் கல்கியில் வந்த கட்டுரை.  PDF வடிவில் டவுன் லோட் செய்து படிக்கலாம் கல்கி கட்டுரை (இது போல் பல விஷயங்களை எனக்கு ஸ்கேன் செய்து அனுப்பும் திரு. நடராஜனுக்கு இந்த சமயத்தில் நன்றி கூட விரும்புகிறேன். )

சுஜாதாவிற்கு பதிலா - ஜே.எஸ்.ராகவன்

[%image(20080308-jsraghavan_3.jpg|175|175|null)%] சுஜாதாவிற்கு பதிலா? ஜே.எஸ்.ராகவன் (புரோக்ராம் செய்த ஒரு ரோபோவாக சுவையான விஷயங்களை பூலோகத்தில் எழுதிக் குவித்த வித்தகர் சுஜாதா வைகுண்ட டைம்ஸில் இவ்வாறு பதிலளிப்பாரா? ) ? விஞ்ஞானத்தின் உதவியுடன் மானிடர்களைப் பதினாறைத் தாண்டாத மார்க்கண்டேயர்களாக மாற்ற முடிந்துவிட்டால் என்னுடயை நிலை என்னாவது? (யமதர்மராஜன், யமலோகம்) ! காலன் கலங்க வேண்டாம். படை எடுப்பு, பயங்கர வாதம், வாகனப் புகைகள், பஸ் எரிப்பு, ஓஸோன் ஓட்டை, கலப்படம் போன்றவை உங்களுடைய பாசக் கயிற்றுக்கு வேலை வைக்கும். ? மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி அடைய ஒரு சிறப்புப் பயிற்சி தேவையாமே? அது என்ன? ( மேனகா, இந்திர லோகம்) ! வெற்றி பெற்றவுடன் இரண்டு கைகளால் கன்னங்களை எல்.ஐ.சி எம்பிள மாகத் தாங்கி ஊஊஊஊன்னு ஒரு பாட்டம் அழணும். அப்படி அழுது பஞ்ச் வைக்கா விட்டால் சூட்டின கிரீடத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கொண்டு போனாலும் போய் விடுவார்கள்! ? கையில் சாப்ட்வேர் எதற்கு? சுவடிகள் இருந்தால் போறும் இல்லையா? (சரஸ்வதி, பிரும்ம லோகம்) ! Lotusல் உட்கார்ந்து கொண்டுசாப்ட்வேரைப் புறக்கணித்தால் எப்படி

அபூர்வ மனிதர் சுஜாதா - பாவண்ணன்

தூங்கியெழுந்ததிலிருந்து தூங்கப்போவதுவரை தன் எல்லா நடவடிக்கைகளிலும் இயல்பான உற்சாகம் இழையோட வாழ்கிற மனிதர்கள் ஒரு சிலரையாவது நாம் பார்த்திருக்கலாம். அதே சமயத்தில், ஒரு புத்தகத்துக்கு அட்டை போடுவதிலிருந்து ஓர் எந்திரத்தை வடிவமைப்பதுவரை, எந்தச் செயலை எடுத்துக்கொண்டாலும் கச்சிதமாகவும் சரியான முறையிலும் செய்து முடிக்கிற திறமையாளர்கள் ஒரு சிலரையும் நாம் பார்த்திருக்கலாம். உற்சாகம் மிகுந்த மனிதர்கள் அனைவரும் திறமையாளர்களாக இருப்பதில்லை. திறமையாளர்கள் அனைவரும் உற்சாகத்துடன் வாழ்வதுமில்லை. உற்சாகமும் திறமையும் ஒருங்கே பொருந்திய அபூர்வமான மனிதர்கள் மிகவும் குறைவு. இந்தச் சிறிய பட்டியலில் அடங்கக்கூடிய அபூர்வமான மனிதர் சுஜாதா என்கிற எஸ்.ரங்கராஜன். சுஜாதா மிகச்சிறந்த பொறியாளர். இந்தியா முழுதும் இன்று பயன்படுத்தப்பட்டுவரும் மின்வாக்குக்கருவியை வடிவமைத்த தொடக்கக்காலப் பொறியாளர்களில் ஒருவர். சங்க இலக்கியங்களiலும் பக்தி இலக்கியங்களiலும் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம் வெகுஜன இதழ்ப்பரப்பில் தொடர்ச்சியாகவும் உத்வேகத்தோடும் இயங்கியவர். எல்லாக் கட்டங்களிலும் தனக்குரிய வாசகர்களை நிறை

சுஜாதா பற்றி ரவிபிரகாஷ்(விகடன்)

என்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசையில் சுஜாதா பற்றியும் எழுதுவதாக இருந்தேன். ஆனால், அந்த நிகழ்வு சந்தோஷமான ஒன்றாக அமையாமல், திடுதிப்பென ஒரு துக்ககரமான சம்பவத்தில் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கடந்த 27-02-2008 புதன்கிழமை அன்று காலையில், விகடன் ஆசிரியர் திரு.அசோகன் எனக்குப் போன் செய்து, "எழுத்தாளர் சுஜாதா உடல்நிலை சரியில்லாமல், அப்போலோவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். முடிந்தால் ஒரு நடை போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்" என்றார். அலுவலகம் போனதும், அன்றைக்கு முடிக்க வேண்டிய இதழுக்கான ஃபாரம் லிஸ்ட் போட்டுக் கொடுத்துவிட்டு, நான் சுஜாதாவைப் பார்க்கக் கிளம்பினேன். வெறுங்கையாகப் போகவேண்டாம் என்பதற்காக ஒரு பெரிய ஹார்லிக்ஸ் பாட்டிலை வாங்கிக்கொண்டு போனேன். விகடன் எடிட்டோ ரியல் அலுவலகத்திலிருந்து பொடிநடை தூரத்தில் அப்போலோ. ஆஸ்பத்திரியின் மெயின் பில்டிங்குக்குப் போனேன். சுஜாதாவின் இயற்பெயரான ரங்கராஜன் என்ற பெயரைச் சொல்லி, விசாரித்தேன். பக்கத்துக் கட்டடத

எங்கே சுஜாதா குமுதம் கட்டுரை

[%image(20080308-Kumudam_sujatha_1.jpg|335|198|null)%] எங்கே சுஜாதா குமுதம் கட்டுரை - ஐ.ரா.சுந்தரேசன் தமிழ் அன்னை ஒரு வசன பாரதியை இழந்து விசனத்துக் குள்ளாகியிருக்கிறாள். உனக்கு ஒரு டாக்டர் பட்டம் கொடுத்து நாங்கள் மகிழவில்லை. சாஹித்திய அகாடமி சாத்திக்கொண்டது. பத்மஸ்ரீ பதுங்கிக் கொண்டது. வாக்குப் பதிவு இயந்திரத்தை வடிவமைத்த வாத்தியாருக்கு கெளரவம் தர வக்கில்லை நமக்கு. ஞான பீடத்தில் அவரை ஏற்றிப் பாராட்டும் ஞானம் நமக்கு முற்றவில்லை. திருப்பாவை அருளிய ஆண்டாளும், திருப்புகழ் தந்த அருணகிரியும், தேசிய மகாகவி பாரதியும், தமிழ்த்தாய் தொலைத்துவிட்ட காப்பியச் சுவடிகளை, அவளுக்குத் தேடித் தந்த டாக்டர் உ.வே.சா.வும், பட்டங்களுக்காகப் பாடுபட வில்லை. வஞ்சக வியூகத்தில் அகப்பட்டுக் கொண்ட அபிமன்யு மாதிரி உள்ளிருந்தே வளைத்துக் கொண்ட நோய்களுடன் ஒண்டியாக, தீரமாகப் போரிட்டு வீர மரணம் எய்தினீர். (நோய்களையும், மருத்துவ மனைகளையும், மருத்துவர்களையும் எமனே சிரிக்கும்படி கிண்டல் செய்த எம காதகர்!) அவரது நட்பு வட்டாரத்தின் விஸ்தீரணம் பலப் பல ஹெக்டேர்கள். சுஜாதாவுக்கு நாடு பூரா பெரிய இடத்து ரசிகர்கள். ஆனால், தானொரு வி.

சுஜாதா பற்றி திரு.அப்துல் கலாம்

நேற்று சிங்கப்பூர் ஒலி வானொலி வெளிச்சம் என்ற நிகழ்ச்சியில் திரு.அப்துல் கலாம் அவர்கள் சுஜாதா பற்றி ( ஒலி வடிவில் ) ஒலி துண்டை இங்கே டவுன் லோட் செய்துக்கொள்ளலாம் (  நன்றி: ஒலி வானொலி )

சுஜாதா பற்றி பாலகுமாரன்

[%image(20080306-balakumaran.jpg|150|100|null)%] சுஜாதா பற்றி பாலகுமாரன் அவர்கள் சில நினைவுகள் இருக்கின்றன. அவர் மறைவு செய்தியைக் கேட்ட பின் உள்ளுக்குள்ளே அவை மெல்ல சோகத்தோடு மலர்ந்தன. அப்பொழுது தமிழில் கவிதையில் இருக்கும் அளவுக்கு கதையில் எனக்கு ஆளுமை இல்லை. இப்பொழுது சோழா ஷெரட்டன் ஹோட்டல் இருக்குமிடத்தில் முன்பு ஒரு திருமண மண்டபம் இருந்தது. அந்த திருமண மண்டபத்தில் தினமணி கதிர் பத்திரிக்கையின் சார்பாக, அதன் ஆசிரியராக இருந்த திரு. சாவி அவர்கள் எழுத்தாளர் சுஜாதாவை சென்னை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். மண்டபம் முழுக்க அடர்த்தியான கூட்டம். புதிய உரைநடை எழுதுபவர்கள், புதுக் கவிஞர்கள், சிவப்பிலக்கிய எழுத்தாளர்கள், காதல் கதை எழுதுபவர்கள், துப்பறியும் கதை செய்பவர்கள் என்று பல தரப்பட்ட எழுத்தாளர்கள் அந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தார்கள். எழுத்தாளர் திரு. மெளனி அவர்கள் வந்திருந்தார்கள். கூட்டம் ஆரம்பிக்கும் முன்பு எழுத்தாளர் திரு. மெளனியிடம் திரு.சுஜாதா போய் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். திரு. மெளனி அவர்கள் நாங்கள் உங்கள் எழுத்தை படித்ததில்லை, உங்களை பற்றி இவர்கள் சொல்லியிருக்கிறார்கள

சுஜாதா பதில்கள், வாரம் ஒரு பாசுரம்.

இந்த வாரம் குங்குமத்தில் சுஜாதா பதில்களில் இரண்டை இங்கே தந்திருக்கிறேன். கே: அப்துல் கலாமுடன் இணைந்து நீங்கள் எழுதுவதாக இருந்த 'இந்திய ராக்கெட் இயல்' புத்தகம் எந்த நிலையில் உள்ளது ? பதில்: கைவிடப்பட்டது. கே: நீங்கள் யாருக்கு தொண்டன், யாருக்கு தலைவன் ? பதில்: என்னை வியக்கவைக்கும் புத்தகங்களை எழுதியவர்களுக்கெல்லாம் தொண்டன்; ஒரு எறும்புக்கு கூட தலைவனாக என்னால் இருக்க முடியாது. இந்த வாரம் கல்கியில் வந்த வாரம் ஒரு பாசுரம் தேரழுந்தூர் காவிரிக் கரை யில் உள்ள ஊர். திருமங்கை யாழ்வார் இவ்வூரில் நின்றிருக் கும் பெருமானை ஏத்தி 45 அழகான பாடல்கள் பாடியிருக்கிறார். அவற்றில் ஒன்றை மாதிரி பார்க்கலாமா? இந்தப் பாடலில் கஜேந்திர மோட்சம் சொல்லப்பட்டிருக்கிறது. ‘குலத் தலைய மதவேழம் பொய்கை புக்கு, கோள் முதலை பிடிக்க, அதற்கு அனுங்கி நின்று, நிலத் திகழும் மலர்ச் சுடர் ஏய் சோதீ! என்ன, நெஞ்சு இடர் தீர்த்தருளிய என் நிமலன் காண்மின் - மலைத் திகழ் சந்து, அகில், கனகம், மணியும் கொண்டு வந்து உந்தி, வயல்கள்தொறும் மடைகள் பாய, அலைத்து வரும் பொன்னி வளம் பெருகும் செல்வத்து அணி அழுந்தூர் நின்று, உகந்த அமரர் கோவே.

சுஜாதா மறைவு குறித்து - மனுஷ்ய புத்திரன்

சுஜாதா:நம் காலத்து நாயகன் ( 1935-2008 ) பெசன்ட் நகர் மின்சார மயானத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி வெயில் தகித்த ஒரு மதியத்தில் சுஜாதா ஒரு பிடி சாம்பலாக மாறினார். மயானத் தின் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த என்னிடம் யாரோ ஒரு உறவினர் சுஜாதா மீது போடப்பட்ட நாணயங்களில் இருந்து ஒரு இரண்டு ரூபாய் நாண யத்தைக் கொடுத்து 'நினைவாக வைத்துக்கொள் ளுங்கள்' என்று கொடுத்தார்.   சுஜாதா 90களின் ஆரம்பத்தில் இருந்து இந்த 17 ஆண்டுகளில் எனக் குக் கொடுத்தவைகளை லௌகீகக் கணக்குகளால் அளவிடுவது கடினம். இப்போது அவரிடம் இருந்து கிடைத்த அந்த இரண்டு ரூபாய் நாணயம் ஒரு இரும்புக் குண்டாகிக் கனத்துக் கொண்டிருக்கிறது. ஒருபோதும் தொலைக்கவோ செலவழிக்கவோ கை மறதியாய் வைக்கவோ முடியாத நாணயம். புற உலகிற்கான பாதைகள் மூடப்பட்டு எனது வெளிச்சக் குறைவான அறையின் சொற்களால் ஆன ரகசிய வழிகளைக் கண்டுபிடித்து வெளியேற நான் தத்தளித்துக்கொண்டிருந்த காலம் அது. எங்கள் கிராமத்து நூலகத்தில் குமரி பதிப்பகம் வெளியிட்ட சுஜாதாவின் நூல்கள் என் அலுப்பூட் டும் பொழுதுகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. நைலான் கயிறும், 24 ரூபாய் தீவுகளும், கொலை யுதிர் காலமும் வ