Skip to main content

Posts

Showing posts from May, 2015

பிறவிப் பெருங்கடல்

உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன் மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன் துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே. - நம்மாழ்வார் திருவாய்மொழி அடிக்கடி கேட்ட பாசுரம் தான். சிம்பிளான விளக்கம் - உயர்வுகளுக்கெல்லாம் உயர்வானவன் அவன். அறிவின்மை யாவும் அழியும்படி ஞானத்தையும் பக்தியையும் அடியோனுக்கு அருளினான் அவன். தேவர்கள் முதலிய நித்திய சூரிகளின் தலைவன் அவன். எல்லாத் துன்பங்களையும் நீக்குகின்ற அவனின் திருவடிகளைத்தொழுது பிறவிப் பெருங்கடலிலிருந்து கரை ஏறுவாய் என் மனமே. உடலை ஒழுங்காக வைத்திருந்தால், மனம் ஒழுங்காக இருக்கும் என்று ஸ்ரீவைஷ்ணவ உபன்யாசத்தில் கேட்டிருக்கிறேன். மனம் நன்றாக இருந்தால் உடல் நன்றாக இருக்கும் என்பது இன்னொரு சித்தாந்தம் ! இரண்டாவது என் தந்தைகடைப்பிடித்தது. பயம் கலந்த உயிராசை எல்லோருக்கும் இருக்கிறது. சின்ன தலைவலி, கால் குடைச்சல், முகத்தில் பரு என்று எந்த உபாதை வந்தாலும் உடனே டாக்டரிடம் சென்று மருந்து சாப்பிடுகிறோம். பூரான் வீட்டுக்குள் நுழைந்தால் உடனே அடித்துவிடுகிறோம். கொசு கடித்தால் உடனே நசுக்கி வேட்டியில் சின்ன ரத்த கறையாக்குகிறோம் நல்ல ஆரோ

அணில்

எங்கள் வீட்டில் அசைவ உணவு கிடையாது. இதில் என்ன விஷேசம், ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தில் இது சகஜம் தானே என்று கேட்கலாம். இன்று நிலமை அப்படி இல்லை. “முட்டை கூட சாப்பிட மாட்டீங்களா ?” என்று ஆச்சரியமாக கேட்க ஆரம்பித்துவிட்டர்கள். ”முட்டையை முழுசா சாப்பிட வேண்டாம்... கேக் சாப்பிடலாமே...?” ஸ்ரீரங்கம் வைஷ்ணவ குடும்பங்களில் ஒருவர் ஐடி படித்து, அமெரிக்காவில் நுழைந்த கையோடு, பீட்சா, பர்கரும் கூட அவர்கள் வாயில் நுழைந்துவிட்டது. “நான் சாப்பிடுவது வெஜ் பிட்சா ... பாருங்க பச்சை கலர் புள்ளி இருக்கு..வெஜிடேரியன்” என்று சாப்பிடும் அந்த பிட்சா மாமிசம் செய்த அதே அவனில் அதே தட்டில் செய்யப்பட்டது என்று தெரிந்தும் தெரியாமல் இருக்கிறார்கள். மாமிசம் சாப்பிடுவதும், சாப்பிடாமல் இருப்பது அவர்கள் இஷ்டம். விவாதிக்க போவதில்லை. நான் சாப்பிடுவது இல்லை. அதற்கு சின்ன வயதில் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களாக இருக்கலாம். பகிர்கிறேன். “பையன் எப்படி சூம்பி போய் இருக்கான்... நல்ல நாட்டு முட்டையாக வாங்கி நானே ஆம்லெட் போட்டு தரேன்” என்று பக்கத்து வீட்டு மணி மாமா என் அப்பாவிடம் சொல்லுவார். “எங்களுக்கு வேண்டாமே..” என்றால்

ஆனந்தவள்ளி

நேற்று மாலை ஸ்ரீபெரும்புதூர் சென்று இருந்தேன். கோயில் வாசலில், வயதான ஒரு பெண்மணி பழைய பெயிண்ட் டப்பாவில் தண்ணீர் வைத்துக்கொண்டு தூண்களில் செதுக்கப்பட்டிருக்கும் நம்மாழ்வார், உடையவர், பெருமாள் சிலைகளுக்கு கையால் திருமஞ்சனம் செய்துக்கொண்டு இருந்தார். பேச்சு கொடுத்தேன். “உன் பேர் என்னம்மா ?” அவளுடைய பெயரை இதுவரை யாரும் கேட்டிருக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன். லேசாக சிரித்துவிட்டு “ஆனந்த வள்ளி” என்றாள். ”தினமும் இந்த மாதிரி தண்ணி தெளிப்பையா ?” “ஆமாங்க.. தூசியா இருக்கு, ஜனங்க எதையாவது தடவுறாங்க. சிலபேர் விளக்கு வைக்கிறார்கள்..அழுக்காகுது... அதனால் தினமும்” “இந்த ஊரா ?” “இல்லை பக்கத்துல சுங்குவார்சத்திரம்.. காலையில எட்டு மணிக்கு வந்துடுவேன். சாயங்காலம் எழு மணிக்கு கிளம்பிடுவேன்” “தினமுமா அங்கிருந்தா வர ?” “ஆமாம்.. நாளைக்கு(இன்று) திருவாதிரை சீக்கிரம் வரமுடியாது...அதனால இங்கேயே பக்கதுல ஒரு மண்டபத்துல படுத்துப்பேன். கையில ஒரு செட் துணி இருக்கு” கொஞ்சம் நேரம் கழித்து “இந்த மாதிரி தண்ணி ஊத்தினா மழை வருது...” ”அப்படியா?” “நிஜம்தாங்க” ”மழைவந்தா ஆந்த தண்ணி