Skip to main content

Posts

Showing posts from December, 2020

16. பாவை குறள் - தூயோமாய்

16. பாவை குறள் - தூயோமாய்  நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே!  கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே!  மணிக்கதவம் தாள் திறவாய், ஆயர் சிறுமியரோமுக்கு  அறை பறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்; தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்; வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா!  நீ நேய நிலைக் கதவம் நீக்கு — ஏலோர் எம்பாவாய். கடந்த பத்து பாசுரங்களில் பல விதமான கோபியரையெழுப்பிய ஆண்டாள் அடுத்த நான்கு பாசுரங்களில் மற்றவர்களை எழுப்பி அவர்களின் அனுமதியுடன் சென்று கண்ணனை அனுபவிக்க போகிறார்கள்.  இப்போது ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் நந்த கோபன் திருமாளிகையை அணுகி வாயில் காப்போனைக் கதவைத்திறக்கச் சொல்லுகின்றனர்.  எங்களுக்குத் தலைவனான நந்தகோபனுடைய மாளிகையைக் காப்பவனே ! கொடிகள் கட்டப்பட்டு விளங்கும் தோரண வாசல் காப்பானே ! அழகிய தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளேவிடு ! ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு மாயன் கண்ணபிரான் நேற்றே விரும்பியதைத் தருகிறேனென்று வாக்களித்துள்ளான் எனவே, அவனைத் துயிலெழுப்ப பாட தூய்மையுடன் வந்துள்ளோம். முதல் முதலிலே மறுக்காமல் பிணைந்து மூடிக்கொண்டுள்ள கதவைத் திறந்து எங்களை உள்ளேவிட

15. பாவை குறள் - இளங்கிளியே !

15. பாவை குறள் - இளங்கிளியே எல்லே! இளங்கிளியே ! இன்னம் உறங்குதியோ! சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்; வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்; வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக! ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை? எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்; வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க வல்லானை  மாயனைப் பாடு — ஏலோர் எம்பாவாய். நாம் கதைகளைப் படிக்கும் சில உரையாடல்கள் வரும். உதாரணத்துக்கு ஒருவர் தொலைப்பேசியில் பேசுவதை இப்படி எழுதலாம்.    “ஹலோ!...” ”.....” “ஹலோ.. ஹலோ… கேக்குதுங்களா ?”  “.....” “டாக்டர் இருக்காரா ?” “......” “என் பெயர் …. எப்ப வருவார்?” “......” “பர்சனல்” “.......” “சரி, நாலு மணிக்கு வரேன்” “......” “டாக்டர் வந்தா சொல்லிடுங்க…” ”......” “நன்றி” மேலே உள்ள சம்பாஷனையில் மறுமுனையில் யாருடன்,எந்தச் சமயத்தில், என்ன பேசினார் என்று படிக்கும் போது சுலபமாக யூகிக்கலாம். இதே போல் திருப்பாவை ஆறாம் பாசுரத்திலிருந்து பதினான்காம் பாசுரம் வரை நாம் உரையாடலை யூகித்துக்கொள்ள வேண்டும்.  உதாரணமாக ஆறாம் பாசுரத்தில் என்ன நடந்திருக்கும் ?  “சீக்கிரம் எழுந்த

14. பாவை குறள் - நாவுடையாய்

14. பாவை குறள் - நாவுடையாய்  உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர்  வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்: செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்; எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் நங்காய்!  எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய் ! சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு ஏலோர் எம்பாவாய். உங்கள் வீட்டு பின்புறக்குளத்தில் செந்தாமரை மலர்கள் மலர்ந்து விட்டன அல்லி மலர்களின் வாய்கள் மூடிக்கொண்டு விட்டன காவி ஆடை அணிந்த வெண்மை பற்களுடைய துறவிகள் தங்கள் கோயில்களுக்கு சங்கூதப் போகிறார்கள் எங்களை முன்னதாக எழுப்புவதாக வீண் பெருமை பேசும் பெண்ணே வெட்கமில்லாதவளே, பேச்சு மட்டும் இனிமையாகப் பேசுபவளே ! சங்கு சக்கரம் தரித்த விசாலமான கையையுடைய கமலக்கண்ணனைப் பாட வேண்டும் எழுந்திரு என்கிறாள் ஆண்டாள்.  இதில் மிக அழகான மூன்று வரிகள் இருக்கிறது.  செங்கழுநீர்  வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்: செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்; பத்துப்பாட்டு எனும் சங்கத் தமிழ் நூலில் கபிலர் பாடிய குறிஞ்சிப

13. பாவை குறள் - வெள்ளி - வியாழம்

13. பாவை குறள் - வெள்ளி - வியாழம் புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப் பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்; வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று; புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால் கள்ளம் தவிர்ந்து கலந்து — ஏலோர் எம்பாவாய். பறவையாய் வந்த பகாசுரனின் வாயைப்பிளந்தவனும் கொடிய இராவணனுடைய தலையைக் கிள்ளியெறிந்த திருமாலைப் பாடிக்கொண்டு பாவை நோன்பு நோற்கும் இடத்தை அடைந்துவிட்டார்கள். சுக்கிரன்(வெள்ளிக்கிரகம்) உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்துவிட்டது. பறவைகள் கூவுகின்றன பூபோன்ற மான்கண் உடையவளே உடல் குளிர நீராடாமல் படுத்துக் கிடக்கிறாயோ? நீ உன்னுடைய கபடத்தை விட்டுவிட்டு எங்களுடன் வந்து கலந்துவிடு! ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற இந்த வரி மிகப் பிரபலம். சுக்கிரன், குரு கிரக நிலைகளைக் கொண்டு ஆண்டாள் எந்தக் காலத்தில் திருப்பாவை பாடியிருப்பாள் என்று ஆராய்ச்சி செய்துள்ளார்கள். இப்படி ஆராய்ச்சி செய்தவர்கள் ’நற் செல்வன் தங்காய்’ என்று போன பாசுரத்தில் வந்த அந்

12. பாவை குறள் - பனி

 12. பாவை குறள் - பனி கனைத்து இளங் கற்று-எருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலை வழியே நின்று பால் சோர நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்! பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி, சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைக் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்; இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்! அனைத்து இல்லத்தாரும் அறிந்து — ஏலோர் எம்பாவாய் எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்கும் இதனால் வீடு முழுவதும் சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் வீட்டுத்தங்கையே ! பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள் உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறோம். இராவணனைக் கொன்ற இராமனைப் புகழ் பாடுகிறோம் நீ வாய் திறவாமல் தூங்குவதை எல்லா வீட்டினரும் அறிந்து விட்டார்கள். மழை பெய்யும் போது சில சமயம் வேகமாக அடிக்கும் ‘பேய் மழை’ என்று நாம் ஒதுங்கிவிடுவோம். சில சமயம் மெதுவாக, இதமாக ஸ்பிரே செய்வது போல அதில் நனையலாம் என்ற ஆசை உண்டாகும்படி பெய்யும். அந்த மாதிரி ஒரு மழை தான் இந்தப் பாசுரத்தில் வருகிறது.  திருப்பாவையில் ஆண்டாள் மூன்றாம் பாசுரத்தில் ‘தீங்கின்றி’ மழை வேண்டும் என்று

11. பாவை குறள் - புனமயிலே!

 11. பாவை குறள் - புனமயிலே! கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து செற்றார் திறலழியக் சென்று செருச் செய்யும் குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற் கொடியே! புற்றரவு அல்குல் புனமயிலே ! போதராய், சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து  நின் முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச் சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி!  நீ எற்றுக்கு உறங்கும் பொருள்?– ஏலோர் எம்பாவாய். இளம் கன்றுகளை ஈன்ற பசுக்களைக் கறப்பவர்களும் பகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று போர் புரிபவர்களுமான குற்றமற்ற ஆயர்கள் குடியில் பிறந்த தங்கக்கொடி போன்ற பெண்ணே!  பாம்பின் படம் போன்ற இடைபெற்ற, மயில் போன்ற பெண்ணே! எழுந்து வா உறவு முறையுடைய தோழிகளாய் இருக்கும் நாங்கள் எல்லோரும் உன் வீட்டு முற்றத்தில் கார்மேக நிறக் கண்ணனின் நாமங்களைப் பாடுகிறோம். அசையாமலும் பேசாமலும் உறங்கும் செல்வமுள்ள பெண்ணே! உறங்குவதன் பொருள் என்ன, நாங்கள் அறியோம்! என்று ஆண்டாள் தன் தோழிகளுடன் இன்னொரு பெண்ணை எழுப்புகிறாள்.  எழுப்பப்படும் பெண் எப்படி இருக்கிறாள் என்று ஆண்டாள் அவளை எட்டு வரி பாசுரத்தில் இரண்டு வரிகளில் வர்ணிக்கிறாள்.  கோவலர் தம் பொற்கொடியே  - ஆயர்களின்

10. பாவை குறள் - சுவர்க்கம்

 10. பாவை குறள் - சுவர்க்கம்  நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே! தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய். நோன்பு நோற்றுச் சுகம் அனுபவிப்பவளே! வாசல் கதவைத் திறக்காதவர்கள் பதில் கூடவா சொல்ல மாட்டார்கள் ? நறுமணமுள்ள துளசிமாலையைச் சூடிய நாராயணன், நம்மால் போற்றப்பட்டு அருள் புரிபவனான இராமாவதாரத்தில் யமன் வாயில் இரையாக வீழ்ந்த கும்பகர்ணனும் உன்னிடத்தில் தோல்வியடைந்து தனது பேருறக்கத்தை உனக்குத் தந்தானோ ? எல்லையற்ற சோம்பலுடையவளே! சிறந்தவளே தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக! சில வருடங்களுக்கு முன் வைகுண்ட ஏகாதசி சமயம் ஸ்ரீரங்கத்தில் ஒருவரிடம் ‘சொர்க்க வாசல் எத்தனை மணிக்குத் திறப்பார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு அவர் சம்பிரதாயத்தைப் பற்றி எழுதும் நீரே சொர்க்க வாசல் என்று கூறலாமா ? அது பரமபத வாசல் அன்றோ?’ என்றார். அவர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை. (செய்திகளில் ‘சொர்க்க வாச

பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன்

 பூனைக் கதைகள் | சுஜாதா தேசிகன் காலை நடைப் பயிற்சியின் போது பூனை ஒன்று இறந்து கிடந்தது. சில நொடி மௌன அஞ்சலிக்குப் பிறகு கடந்து சென்றேன். நாங்கள் வசிக்கும் இருபது மாடிகள் கொண்ட ஃபிளாட்டில் மொத்தம் ஆயிரத்து ஐந்நூறு குடும்பங்கள் இருக்கின்றன. மதிலுக்குள் ஒரு கிராமம் என்று கூறலாம். குடும்பத்துக்கு இரண்டு காரும் ஒரு குழந்தையும்! பெரும்பாலும் அப்பா அம்மா வேலைக்குச் செல்லும் குடும்பங்கள். அழகிய பூந்தோட்டம் அதில் ஆங்காங்கே பூனைகள் ஓடிக்கொண்டு இருக்கும். குழந்தைகள் அதைத் துரத்திக்கொண்டு விளையாடுவார்கள். சில குழந்தைகள் வீட்டிலிருந்து பால் எடுத்துக்கொண்டு வந்து ஒரு தட்டில் அவற்றுக்குக் கொடுப்பார்கள். அப்பார்ட்மெண்ட் தகவல்களுக்கு ஓர் ஆன்லைன் குழு இருக்கிறது, அதில் ஒருவர் “இன்று இரண்டு இறந்த பூனைகளைப் பார்த்தேன். யாராவது பூனைகளுக்கு விஷம் வைக்கிறார்களா?” என்று கேட்க, இன்னொருவர் “சில நாட்களுக்கும் முன் மூன்று இறந்த பூனைகளைப் பார்த்தேன், ஆக மொத்தம் ஐந்து பூனைகள் இறந்துள்ளது” என்று பதில் கூற, இந்த விஷயம் சூடு பிடித்தது. அப்பார்ட்மெண்ட் அசோசியேஷன் இதைக் குறித்து ஆராய்ந்து கண்டுபிடிக்க வேண்டும் என்று இந்

9. பாவை குறள் - கண்வளரும்

9. பாவை குறள் - கண்வளரும் தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத் தூபம் கமழத் துயிலணைமேல்  கண்வளரும் மாமான் மகளே! மணிக் கதவம் தாழ்திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள்தான் ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ? ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ? மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய வாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும் மாமன் மகளே! கதவைத் திறந்துவிடு அம்மணி! உன் பெண்தான் எழுப்புங்கள் அவள் ஊமையோ? செவிடோ? சோம்பேறியோ? அல்லது மந்திரத்தால் மயங்கித் தூங்குகிறாளோ? மாயன், மாதவன், வைகுந்தன் என்ற பகவானின் நாமங்கள் பலவற்றைச் சொல்லி நற்பயன் அடைய வேண்டியிருக்கிறது சீக்கிரம் உன் மகளை எழுப்பு என்கிறாள் ஆண்டாள்.  இன்னொரு பெண் பிள்ளையை ஆண்டாள் எழுப்பும் திருப்பள்ளி எழுச்சி பாசுரம் இது.  இதில் ’தூமணி மாடத்தில்,  சுற்றும் விளக்கெரிய,  தூபம் கமழ...மணிக் கதவம்’ என்று ஓர் இல்லத்தை விவரிக்கிறாள். எட்டு வரிகள் கொண்ட பாசுரத்தில் இரண்டு வரி ஓர் இல்லத்தை விவரிக்க ஏன் ஆண்டாள் எடுத்துக்கொண்டாள் ?   கூரத்தாழ்வானைப் பார்த்து ஒருவர் “என

8. பாவை குறள் - அருள்

8. பாவை குறள் - அருள் கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து  உன்னைக் கூவுவான் வந்து நின்றோம்;  கோதுகலம் உடைய பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால் ஆவாவென்று ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய். கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது எருமைகள் சிறிது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின கிளம்பிய மற்ற பெண்களைத் தடுத்து நிறுத்தி உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம் குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம் குதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயைக் கிழித்தவன் மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால் நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான். இந்தப் பாசுரத்திலும் ஆண்டாள் இன்னொரு தோழியை ஒரு விடியல் அடையாளத்தைக் கூறி எழுப்புகிறாள். இந்தப் பாசுரமும் இன்னொரு திருபள்ளியெழுச்சி ! கிழக்கே வெளுக்க ஆரம்பித்துவிட்டது. சூரியன் வரப் போகிறது. எருமைகள் பனிப்புல் மேயச் சென்றுவிட்டது  என்பதை ‘ மேட்டிள

7. பாவை குறள் - கேட்டிலையோ ?

 7. பாவை குறள் - கேட்டிலையோ ? கீசுகீசு என்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து பேசின பேச்சரவம்  கேட்டிலையோ ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும்  கலகலப்பக்  கை பேர்த்து வாசநறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த  தயிரரவம் கேட்டிலையோ ? நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ ? தேச முடையாய்! திறவேலோர் எம்பாவாய்.கீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடிக் கூவிய கூச்சல் ஒலி கேட்க வில்லையா பேதைப் பெண்ணே! காசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க வாசனையுடைய கூந்தலை உடைய இடைப்பெண்கள் கைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்கவில்லையோ! பெண்கள் தலைவியே! நாராயணனான கண்ணனை நாங்கள் பாடக் கேட்டுக்கொண்டே படுத்துக் கிடக்கிறாயோ? பிரகாசமானவளே ! கதவைத் திறப்பாயாக என்று ஆண்டாள் அடுத்த பெண்ணை எழுப்புகிறாள்.  ஏன் இப்படி ஒவ்வொரு இல்லத்துக்கும் சென்று எழுப்புகிறாள் என்று நமக்குத் தோன்றும். பெருமாளுடன் கூடுவதை விட அடியார்களுடன் கூடுவதைத் தான் ஆழ்வார்கள் விரும்புகிறார்கள். நம்மாழ்வார் ‘அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ’ என்கிறார்.  கோயிலுக்கு செல்லும் போ

6. பாவை குறள் - உள்ளத்துக் கொண்டு

 6. பாவை குறள் - உள்ளத்துக் கொண்டு புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம் உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய். பறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாகக் கொண்ட விஷ்ணுவின் கோவிலில் வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பது கேட்கவில்லையா?  இளம் பெண்ணே! எழுந்திரு பூதனா என்றும் அரக்கியின் நச்சு முலையை உறிஞ்சி, வஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது கட்டுக் குலையும்படி காலால் உதைத்தவன் பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை  முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று கூறும் ஒலி எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது என்று ஆண்டாள் தன் தோழிகளை எழுப்ப ஆரம்பிக்கிறாள்.  நாம் கோயிலுக்குச் செல்லும் போது, பெரும்பாலும் கூட்டம் இருப்பதை விரும்புவதில்லை. ஏதாவது பிரசாதம் கிடைத்தாலும் அதை மறைத்து எடுத்து வந்துவிடுகிறோம். நல்ல அனுபவத்துடனும் சுயநலம் வந்துவிடுகிறது 

5. பாவை குறள் - குடல் விளக்கம்

5. பாவை குறள் - குடல் விளக்கம் மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத் தூய பெருநீர் யமுனைத் துறைவனை ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத் தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத் தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் மாயனான வடமதுரையில் பிறந்த திருக்குமாரனான தூய யமுனை நதிக் கரையில் வசிக்கிற இடையர் குலவிளக்காக அவதரித்து, யசோதைக்குப் பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை பரிசுத்தத்துடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி வாயாரப் பாடி, நெஞ்சார தியானித்தால்,  முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும் அவன் அருளால் நெருப்பில் விழுந்த பஞ்சாக உருத் தெரியாமல் அழிந்து போகும். ஆகவே அவன் நாமங்களைச் சொல்லுவோம் என்கிறாள் ஆண்டாள்.  ’மாயனை’ என்று ஆரம்பிக்கிறாள் ஆண்டாள். மாயனை என்ற சொல்லை எப்படிப் புரிந்துகொள்வது ? வியக்கத்தக்கச் சொல்ல முடியாத செயல்களைச் செய்பவன் மாயன்.  சென்ற பாசுரத்தில் பரிமேலழகர் ’கடவுளின் ஆணையால் உலகமானது நிலை பெறுவதற்கேதுவாய் இருக்கும் மழையினது சிறப்பை சொல்லும் அதிகாரம்’ என்று ’வான் சிறப