Skip to main content

Posts

Showing posts with the label ஆழ்வார்

ஸ்ரீராமர் என்ற ரக்ஷகன்

ஸ்ரீராமர் என்ற ரக்ஷகன் ஸ்ரீராம ஜன்ம பூமியில் குழந்தையான ’ஸ்ரீராம லல்லா’ எழுந்தருளுவதற்கு பல நூற்றாண்டுகளாக பலர் போராடினர். கடைசியாக அந்த வழக்கு முடிவுக்கு வந்து, பிராணப் பிரதிஷ்டையை டிவியில் தரிசித்த அன்று அதன் முன் விழுந்து சேவித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. எல்லோர் இல்லங்களிலும் ஒரு குழந்தை பிறந்த சந்தோஷத்துடன் இனிப்பு செய்து, வழங்கி இந்த பாரத தேசமே கொண்டாடியது. அயோத்தியில் ஸ்ரீராமரை சேவிப்பதற்கு முன், சென்னைக்கு சென்று காலணி கூட அணியாமல் வாதிட்ட வழக்கறிஞர் ஸ்ரீ பராசரனை சந்தித்து சேவித்தேன். (“நான் என்ன ஜீயரா? இவ்வளவு முறை சேவிக்கிறீர்கள்”). ’போற்றப் பறைதரும் புண்ணியன்’ என்று ஆண்டாள் கொண்டாடும் ஸ்ரீராமபிரானின் ஆலயத்தை இந்தப் புண்ணிய பூமியில் தரிசிக்க முடிந்ததே நம் மேலையார் செய்த புண்ணியத்தின் பயன். சமீபத்தில் ஒரு தலையங்கத்தில், அயோத்தி ராமர் சந்நிதியின் கருவறை முகப்பில், வால்மீகி ராமாயணத்தில் இல்லாத 'ஸ்ரீராமர் லிங்க பூஜை செய்தார்' என்ற கதைக்குரிய சிற்பம் தவறாக அமைக்கப்பட்டுள்ளது என்று கண்டித்துள்ளார்கள். 'நாம் வணங்கும் ராமரே, தம் ஆலயத்தில் சிவலிங்கத்துக்குப் பூஜை செய்...

சிந்தனைக்கு இனியான் ! மனதுக்கு இனியான் !

சிந்தனைக்கு இனியான் ! மனதுக்கு இனியான் !  இன்று கார்த்திகையில் கார்த்திகை. நம் கலியனான திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம். நரசிம்ம அவதாரத்தில் பெருமாள் இரணியனுக்குத் திருத்திப்பணி கொள்ள ஒரு வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் பிராட்டிக்கு வருத்தம். இராமாவதாரத்தில் திருந்த ஒரு சந்தர்ப்பம் கொடுத்தார் (இன்று போய் நாளை வா .. இந்த கதை உங்களுக்கு தெரிந்திருக்கும்).  பெருமாளின் பத்து அவதாரங்களையும் இரண்ரே வரியில் திருமங்கை ஆழ்வார் சொல்லும் அழகைப் பாருங்கள். மீனோடு ஆமை கேழல் அரி குறளாய் முன்னும் இராமனாய் தானாய் பின்னும் இராமனாய் தாமோதரனாய் கற்கியும் ஆனான் இதில் முன்னும் இராமனாய் - பரசுராமரையும், பின்னும் இராமனாய் - பலராமனையும் குறிக்கிறது. ஆனால் இராமாவதாரத்தை ‘தானாய்’ என்கிறார்.  அவதாரங்களை இரண்டாக வகைப்படுத்தலாம். ஒன்று சொரூப அவதாரம் - பகவான் தானே அவதாரம் எடுப்பது. மற்றொன்று ஆவேச அவதாரம். ஒரு ஆத்மாவை தேர்ந்தடுத்து ஒரு பயனுக்காக தன் சக்தியை அதில் வைத்து ஆவேசிப்பது. பரசுராமரும், பலராமரும் ஆவேச அவதாரங்கள். ராமர் சொரூப அவதாரம்.  பத்து அவதாரங்களில் பரசுராமர் ராமரை ஒருவரை ஒருவர் சந்தித...

ஊர் எனப்படுவது உறையூர் !

ஊர் எனப்படுவது உறையூர் ! கோயில் என்றால் ஸ்ரீரங்கம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அதே போல ’ஊர் எனப்படுவது உறையூர்’ என்பது சொல்வழக்கு.  உறையூர்  சோழர்களின் தலைநகரமாக இருந்தது என்று படித்திருக்கிறோம். வேறு என்ன பெருமை என்று தெரியாது ஆனால் இந்த ஊருக்கு ஒரு மகிமை உண்டு. இங்கே அவதரித்தவர்கள் எல்லாம் நம்பெருமாளிடம் மோகித்துள்ளார்கள்.   இங்கே அவதரித்த நம் திருப்பாணாழ்வார் ’அமுதினை கண்ட கண்கள் மற்றொன்றை காணாவே' என்று அரங்கனிடம் மோகித்து அவரிடம் சென்றார்.  பிள்ளை உறங்காவில்லி தாஸர் அவர்களை உடையவர் அரங்கன் முன் நிறுத்த அதன் பிறகு நடந்த கதை உங்களுக்கு தெரியும். இவருக்கும் உறையூர் தான் பூர்வீகம்.  உறையூர் நாச்சியாரும் நம்பெருமாளிடம் மோகித்தவர் தான் (நம்பெருமாள் மோகித்தார் என்று கூறுவது தான் சரியாக இருக்கும்!) ஸ்ரீவில்லிப்புத்தூர் என்றால் ஆண்டாள் என்பது போல உறையூர் என்றால் அது நாச்சியார் கோயில். இந்த இரண்டு ஊரையும் சேர்த்து திருமங்கை ஆழ்வார் இப்படி பாடுகிறார்  கோழியும் கூடலும் கோயில் கொண்ட     கோவலரே ஒப்பர் குன்றம் அன்ன பாழி அம் தோளும் ஓர் ...