ஆண்டாளும் தோழிகளும் - சிற்றஞ் சிறுகாலே - (பாசுரம் 29) (சூழல்: ஆண்டாளும் தோழிகளும் 'பறை' என்று பலமுறை குறிப்பிட்டு அதைக் கண்ணனிடம் வேண்டினார்கள். ஊருக்காக நோன்பு நோற்கப் பறை வேண்டும் என்று முதலில் கேட்டாலும், இப்போது தாங்கள் வேண்டிய பறையின் உண்மையான உட்பொருள் என்ன என்பதையும், தங்களின் உண்மையான நோக்கம் கண்ணனுக்குத் தொண்டு செய்வதே என்பதையும் கூறி, ஒட்டுமொத்த திருப்பாவையின் கருத்தையும் இங்கே நிறைவு செய்கிறார்கள்.) [சிற்றஞ் சிறுகாலே] கண்ணன்: "ஆயர் சிறுமிகளே! இந்த மார்கழி குளிரில், அதுவும் மிக அதிகாலையில்... உங்கள் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் ‘சிற்றஞ்சிறுகாலையிலே’... பொதுவாகச் சிறுபெண்கள் விடியற்காலையில் எழுந்திருக்கத் தயங்குவார்களே, நீங்கள் மட்டும் எப்படி இத்தனை சீக்கிரம் வந்தீர்கள்?" (வெட்டவெளிச்சம்' என்பது போல, 'சிற்றஞ்சிறுகாலை' என்பது எதார்த்தமான, அழகான இடைக்குலப் பேச்சு வழக்கு) ஆண்டாள்: "கோவிந்தா! வேறு என்ன... உன்னை அடைய வேண்டும் என்கிற வேகம் தான் எங்களை இங்கே இழுத்து வந்தது." புல்லகலிகா: "ஆமாம் கண்ணா! நாங்கள் நினைத்த மாத்திரத்தில் மார்கழ...