Skip to main content

Posts

Showing posts from August, 2005

ஸ்ரீவில்லிப்புத்தூர்

"மென்னடை யன்னம் பரந்து விளையாடும் வில்லிப்புத் தூருறை வான்தன் பொன்னடி காண்பதோ ராசையி னாலே பொருகயற் கண்ணிணை துஞ்சா.." [%image(20050829-srivilliputhur_gopuram.jpg|188|250|ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம்)%] என்று ஆண்டாள் பாடியுள்ள ஸ்ரீவல்லிப்புத்தூருக்கு கோகுலாஷ்டமி அன்று சென்றிருந்தேன். திருச்சி மதுரை பைபாஸ் சாலை வழியே 1066 டயல் செய்தால் ஆம்புலன்ஸ் உடனே வரும் என்ற அறிவுப்புக்களை பார்த்துக்கொண்டு 80 கிமி வேகத்தில் சென்றால் மூன்று மணி நேரம் ஆகிறது. இந்த கோயில் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. முதல் பகுதி வடபத்ரசயனர் கோயில். இந்த பெருமாளுக்கு தான் ஆண்டாள் தன் மாலையை சூடிகொடுத்தாள் என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றன. இதன் நுழைவுவாயில் இருக்கும் இராஜகோபுரம் 196அடி உயரம்; 11 நிலைகள்; 11 கலசங்களையும் கொண்ட கோபுரத்தின் அகலம் 120' x 82' ஆகும். இந்த கோபுரம் தமிழ்நாடு அரசின் முத்திரைச் சின்னமாக விளங்குகிறது. [%image(20050829-logo.jpg|85|88|TN logo)%] இந்த ராஜகோபுரத்தை பெரியாழ்வாரால் ஸ்ரீவல்லபதேவ பாண்டிய மன்னன் (கிபி 765-815) உதவியோடு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கோபுரத்தின

சாந்தி சாதனா

இந்த பெயரை பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். அமரர் எஸ்.இராஜம் அவர்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன் நிறுவிய நிறுவனம். " வரலாற்று முறைத் தழிழ் இலக்கியப் பேரகராதி " என்ற பெயரில் அற்புதமான ஒரு அகராதியை இவர்கள் கொண்டுவந்துள்ளார்கள். வரலாற்று முறை அகராதி - Etymological Dictionary -  அதாவது ஒரு சொல்லுக்கு நாம் விருப்பத்துக்கேற்பச் பொருள் காணாமல், இலக்கியத்தில் எந்தெந்த இடத்தில் அச்சொல் வருகிறது, அதற்கு அந்த இடத்தில் என்ன பொருள், அதற்குப் பழைய உரையாசிரியரின் ஆதாரம் உண்டா, காலப் போக்கில் அச் சொல்லின் பொருள் எவ்வாறு மாற்றம் அடைந்து வந்த்துள்ளது என்பவற்றையெல்லாம் தெரிந்து கொள்ளும் பொருட்டு விரிவான, முழுமையான,  தரமான ஒர் அகராதி. மொத்தம் ஐந்து தொகுதிகள், 131 இலக்கியங்கள், 70814 வார்த்தைகள், எல்லாவற்றிருக்கும் மேலாக தழிழ் பேரறிஞர் பலருடைய 40 ஆண்டு கால கடின உழைப்பைக் கொண்டு இது வெளிவந்துள்ளது. இதற்கு மேல் கொஞ்சம் சீரியஸ் விஷயம். தமிழ் அகராதி என்பது காலப் போக்கில் அவசியம் கருதித் தானாக வளர்ந்த ஒன்று. 18ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்றே கூறலாம். மிகப் பழைய இலக்கண நூலான தொல்காப்பியம் சூத்திர முறை

நீங்கள் எத்தனை புத்திசாலி

இந்த வாரம் கற்றதும் பெற்றதும்'ல்.... நீங்கள் எத்தனை புத்திசாலி’ என்று சி.சபரிநாதன் முப்பது விநோத வாக்கியங்களை எக்ஸெல்லில் மின்னஞ்சலில் கொடுத்து, விடை கேட்டிருந்தார். அதாவது, Roads என்பதை இடம் வலம் மேல் கீழாக எழுதியிருப்பதை CrossRoads என்று கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். பத்துப் பதினைந்து கண்டுபிடிக்க முடிந்தது. இம்மாதிரி தமிழிலும் செய்து பார்க்கலாமே என்று தோன்றியது. பன்னிரண்டு கொடுத்திருக்கிறேன். பத்தை நீங்கள் கண்டுபிடித்தாலே, என்னளவு புத்திசாலி! அடுத்த இதழில் விடைகள் வருவதற்குள் எழுதிப் போட்டால், ‘குளுக்கள்' முறையில் பரிசு. பத்தாவது கொஞ்சம் கஷ்டம். மற்றவற்றை சுலபத்தில் கண்டுபிடித்து விடலாம்.  [%popup(20050822-vikatan_puzzle.jpg|290|400|விகடன் புதிர்)%] பார்க்க இங்கே கிள்க் செய்யவும் நன்றி ஆனந்த விகடன்  [ Update on 30th Aug 2005 ] விடைகள்: விகடன் 21.8.05 இதழில் கொடுக்கப்பட்ட புத்திசாலித்தன பரீட்சைக் கேள்விகளுக்கான விடை இதோ... 1. நெருப்பு கமல்  - அக்னி நட்சத்திரம் - 2. காசில்லை ஹிஹி - ஏழையின் சிரிப்பு 3. சமுதாயம் - சமுதாய முன்னேற்றம் ("வளரும் சமுதாயம்" என்றும் சிலர

www.desikan.com

என் வீட்டுப்பக்கத்தையும் , வலைப்பதிவையும் www.desikan.com என்ற வலைத்தலத்தில் இணைக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். உங்கள் வசவுகளும் வாழ்த்துகளும் வரவேற்க்கப்படும். இந்த வேலையினால் அவ்வப்போது தான் பதிவுகள் இடம் பெரும். அதுவரை கீழே உள்ள புதிருக்கு(கூகிளை நாடாமல்) விடை காண முயலுங்கள்.. (பின்னூட்டத்தில் (அ) ஈ-மெயிலில் தெரியப்படுத்தவும்) [%popup(20050822-excel_puzzle.jpg|397|400|புதிர்)%] பார்க்க இங்கே கிளிக் செய்யவும்  முதல் புதிருக்கு விடை: 1. Seven Seas பிகு: இதே போல் தமிழில் யாராவது உருவாக்கினால் எனக்கு தெரியப்படுத்தவும். Old comments from my previous Blog . Downtown 7. He's by himself 8. See-thru blouse 9. First Aid 11. six feet under ground 13. tricycle 14. reading thru lines 15. cross roads 16. under graduation 17. Just between you and me 22. Life after forty 23. Jack in the box 24. growing economy 25. just in the corner 29. standing ovation By முகமூடி, at Mon Aug 01, 12:28:11 PM IST   3. forgive , forget 12. glance back 27. Apple pie By icarus, at Mon Aug 01, 12:42:54 PM IST