Skip to main content

Posts

Showing posts from November, 2005

பூக்குட்டி !

[%image(20051124-pookutti_cover.jpg|407|300|பூக்குட்டி அட்டைபடம்)%] அக்டோபர் மாதம் கற்றது பெற்றதுமில் சுஜாதா எழுதியது. ...  'தமிழில் குழந்தைகளுக்காக ஆங்கிலப் புத்தகங்களின் வடிவமைப்புத் தரத்தில் புத்தகங்கள் இல்லை' என்று குறை சொல்வதைப் பலரிடம் அடிக்கடி கேட்டபின், குழந்தைகளுக்காக அவ்வகையில் ஒரு புத்தகம் நானே சொந்தமாகப் போடு வது என்று தீர்மானித்தேன். சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு கொண்டாடினார்களே... அப்போது 'பூக்குட்டி' என்ற தொடர்கதை விகடனில் வந்தது. அதற்கு மணியம் செல்வன் அழகழகான சித்திரங்கள் வரைந்திருந்தார். ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குழந்தையை விட்டு டைட்டில் எழுதச் சொல்லி, அந்தக் குழந்தையின் பெயரையும் போட்டு, அட்டகாசமாக வெளியிட்டார்கள். பிறகு, அது புத்தக வடிவிலும் வந்தது. ஆனால், உலகத் தரத்தில் அல்ல! தற்போது புத்தக வடிவமைப்பிலும் அச்சு நேர்த்தியிலும் காகிதத் தரத்திலும் தமிழகத்தில் மேல்நாட்டுத் தரத்தை எட்டிவிட்டார்கள். பதிப்புத் திறமைகள் பன்மடங்கு அதிகரித்து விட்ட நிலையில், 'லேடி பேர்ட்' புத்தகங்களைப் போல ஒல்லியாக, கெட்டி அட்டையுடன், நல்ல காகிதத்தில் பெரிதாக அச்சிட்டு,

நவதிருப்பதி

கடந்த வாரம் திருநெல்வேலி , மதுரையை சுற்றியுள்ள பாண்டிய நாட்டு திவ்வியதேசங்களுக்கு சென்றிருந்தேன் . முதல் நாள் திருநெல்வேலியில் நவ திருப்பதி என்றழைக்கப்படும் ஒன்பது திவ்வியதேசங்கள் , மறு நாள் மதுரையில் இருக்கும் மூன்று திவ்வியதேசங்கள் என மொத்தம் பன்னிரெண்டு . சனிக்கிழமை மதுரையிலிருந்து புறப்பட்டு போகும் வழியில் திருநெல்வேலி 146 கீமீ என்ற போர்டை பார்த்த போது காலை மணி 11:30; கயத்தாறு என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தோம் என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தோம் . இந்த இடத்தில் தான் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கில் போட்டதாக சொல்கிறார்கள் . இப்போது இந்த இடத்தில் ஏர்டெல் டவர் இருக்கிறது . திருநெல்வேலி வருவதற்குள் அதை பற்றிய ஒரு சிறு குறிப்பு ... மதுரைக்கு முன் பாண்டியர்களுக்கு தலைநகராக திருநெல்வேலி இருந்திருக்கிறது . ஊர் சுற்றிவர நெல் பயிர்கள் வேலி போல சூழ்ந்திருந்த காரணத்தினால் திருநெல்வேலி என்ற பெயர் பெற்றது . தாமிரபரணிக்கு மேற்கு பக்கத்தில் திருநெல்வேலியும் கிழக்கு பக்க்கத்தில் பாளயங்கோட்டையும் அமைந்துள்ளது . கிபி 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்கர்கள் இந்த ஊரை ஆண்டிருக்கிறார்கள்

தி கிரேட் எஸ்கேப்

"ஐயோ!. இது என்ன சத்தம் ?" ஏதோ உடைந்தது போல்... கடவுளே... மழையா ? வெள்ளமா? சுனாமியா ? இவ்வளவு வேகமான நீரோட்டமாக இருக்கிறதே.. வானிலை அறிக்கையில் கூட ஒன்றும் சொல்லவில்லையே...? எங்கு பார்த்தாலும் தண்ணீர். இந்த சின்ன இடத்தில்... மாட்டிக்கொண்டுவிட்டேனே...முழுகிவிடுவேனா ? கடல் அலை போல் மேலும் கீழுமாக... 'பளக்' ...'பளக்'... வாய்க்குள் தண்ணீர்... இந்த சத்தம்... இவ்வளவு நாள் வேளா வேளைக்கு சாப்பாடு, தூக்கம் என்று அமைதியாக சிக்கிகொண்ட உணர்வே இல்லாமல்....  இன்று ஏன் எனக்கு இந்த சோதனை ? இப்படி குலுக்கிபோடுகிறதே..இந்த சுவற்றில் இடித்து இடித்து தூள் தூளாகிவிடுவேனா ?  கடவுளே... அட என்னது இது ஒரு சின்ன சுரங்க பாதையா ? கடவுள் அதற்குள் என் பிராத்தனைக்கு கண்ணை திறந்துவிட்டாரா ? ஆச்சரியமாக இருக்கிறதே! இந்த தண்ணீர் தான் இதை திறந்திருக்க வேண்டும். இவ்வளவு நாள் எனக்கு இது கண்ணில் படவில்லையே...ஏதோ ஒன்று வெளியே போனால் போதும். இவ்வளவு சின்ன வழியில் போகமுடியுமா? இதன் வழியாக வெளியே வந்தால் உயிருடன் இருப்பேனா ?எனக்கு இதை தவிற வேறு வழியில்லை. கூனிக்குறுகி ஒரு சரியான நிலையில் போனால் முடியும்

ஐஸூக்கு வந்த மவுஸ்!

ஐஸூக்கு வந்த மவுஸ்! - எஸ்.வி. ராமகிருஷ்ணன்   [%image(20051103-ice_svr1.jpg|226|150|Ice)%] 1944. ஐரோப்பாவில் மட்டுமல்லாது இந்தியாவில் இம்பால் முனையிலும் (மணிப்பூர் சமஸ்தானம் - இந்திய பர்மா எல்லை) உலக யுத்தம் உக்கிரமாக நடந்த காலம். தாராபுரத்தில் பார்க் ரோட்டில் எங்கள் வீட்டிலிருந்து ஐந்தாறு காம்பவுண்டுகள் தள்ளி இருந்த ஒரு பங்களாவை (காம்பவுண்டு வைத்த தனி வீடுகளை அப்படித்தான் சொன்னார்கள். தனி வீடு என்று தனியாகச் சொல்ல வேண்டியதுகூட இல்லை. ஏனெனில் திறீணீt என்ற கூடுகளை, பம்பாய் போய் வந்தவர்களைத் தவிர யாரும் பார்த்ததுகூட இல்லை) ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு இருந்தனர். அங்கே எப்போதும் சீருடை அணிந்த துருப்புகள் ஜீப்பிலும் மிலிட்டரி லாரியிலும் வருவதும் போவதுமாக இருக்கும். அவர்களுக்கும் ஊர்க்காரர்களுக்கும் தொடர்பே இருக்கவில்லை. அது ஒரு தனி உலகம். ஒரு நாள் பார்க் ரோட்டில் ஒரு பரபரப்பு. ராணுவத்தினரின் உபயோகத்துக்காக வந்த ஐஸ் கட்டிகள் உபரியாக இருந் திருக்க வேண்டும். பாறை போன்ற ஒரு பெரிய ஐஸ் கட்டியை அவர்கள் வீட்டுக்கு வெளியே சாலையில் கொண்டுவந்து போட்டுவிட்டுப் போய்விட்டார்கள். எல்லோரும் காணாதது கண்ட