திருமழிசையாழ்வார் என் அம்மா திருமழிசையாழ்வாரைத் தான் கடைசியாகச் சேவித்தார். அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டை விட்டு வெளியே வந்த போது “உங்க அம்மாவிற்கு மருந்து இல்லை, சந்தோஷமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்று டாக்டர் சொன்னது ”அம்மா... உயிருடன் இன்னும் எவ்வளவு நாள் ?” என்ற கேள்வி என் மனதில் ஓடத் தொடங்கியது. அம்மா என்ன ஆசைப்பட்டார் என்று மனம் யோசிக்கத் தொடங்கியது... “திருமழிசை இங்கேயே இருக்கு ஆனா போனதில்லை” என்று அம்மா என்றோ சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. மறுநாள் காலை அம்மாவை அழைத்துக்கொண்டு திருமழிசைக்குச் சென்றேன். ”மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவற்றையும்” மாலையாகத் தொடுத்தால் போதும் என்கிறாள் ஆண்டாள். மாமாயன் என்றால் மாயனுக்கு எல்லாம் மாயன் என்று சொல்லலாம். மாயனை define செய்ய திருமழிசை ஆழ்வார் பாடல் ஒன்று போது. ஆனைகாத்து ஓர் ஆனை கொன்று, அது அன்றி, ஆயர் பிள்ளையாய் ஆனை மேய்த்து; ஆ-நெய் உண்டி; அன்று குன்றம் ஒன்றினால் ஆனை காத்து மை-அரிக்கண் மாதரார் திறத்து முன் ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே? கஜேந்திரனைக் காத்த நீ குவலயாபீடம் என்ற இன்னொரு யானையைக் கொன்றாய். பசுக்