வெள்ளகோவில் வரதராஜர் முன் விழுந்த தேங்காய்! சென்ற வருடம் ஆகஸ்ட் மாதக் கடைசியில் திரு ஆறுமுகம் என்பவர் பதம் பிரபந்தப் புத்தகம் ஒன்று வேண்டும் என்று மெசேஜ் அனுப்பியிருந்தார். விவரங்களை அனுப்பினேன். புத்தகம் ஒன்றை வாங்கிக்கொண்டு அடியேனிடம் தொலைப்பேசினார். அவர் திருப்பூரில் வெள்ளகோவில் என்ற இடத்தில் மருத்துவர்; வயது எழுபத்து ஐந்து, அவர் கூறிய விஷயத்துக்கு முன் திருக்கண்ணமங்கை ஆண்டான் குறித்து ஒரு விஷயத்தைப் பார்த்துவிடலாம். திருக்கண்ணமங்கை ஆண்டான் என்ற ஆசாரியர், தன்னை ரக்ஷித்துக் கொள்ள எந்த முயற்சியும் மேற்கொள்ளாமல் அவர் எம்பெருமானுக்குக் கைங்கர்யங்களை விடாமல் செய்து வந்தார். நம்மாழ்வார் திருவாய்மொழி ( 9.2.1 ) ”கடைத்தலை சீய்க்கப்பெற்றால் கடுவினை களையலாமே” என்கிறார். ”ஒருவன் கோயிலைச் சுத்தம் செய்தால் அவனுடைய பாவங்கள் கழிந்துவிடும்” என்பது தான் அது. நம்மாழ்வார் பாவம் தொலையக் கைங்கரியம் செய் என்கிறாரே என்று நமக்குச் சந்தேகம் வரும். நம்பிள்ளை ஈடு வ்யாக்யானத்தில் இந்த பாசுரத்துக்கு திருக்கண்ணமங்கை ஆண்டான் பற்றி ஒரு சுவையான குறிப்பைத் தருகிறார். ஒரு மகிழ மரத்தடியில் காய்ந்த சருகுகளைப் பெரு