Skip to main content

Posts

Showing posts from February, 2017

எழுத்தும் பணமும்

இந்தியா டூடே தமிழில் அம்பலம் சிறப்பு பக்கத்தில் சுஜாதா அவர்களின் கேள்விபதில்களும், சின்ன சின்ன கதைகள், கட்டுரைகள் வந்த சமயம். என் எழுத்து ஆர்வம் காரணமாக நான் பெண் பார்த்துவிட்டு வந்த அனுபவத்தை சிறு கட்டுரையாக எழுதினேன். அதை தைரியமாக சுஜாதா அவர்களிடம் காண்பித்தேன். இதை ஒரு பிரிண்டவுட் எடுத்து கொடு என்றார். கொடுத்தேன். அதன் மீது, ”Next Ambalam issue" என்று எழுதி கையெழுத்து போட்டு அருகில் இருந்தவரிடம் கொடுத்தார். இந்தியா டூடேயில் வந்தது. அடுத்த முறை அவரை பார்க்கும் போது “சார் இந்த இஷ்யூவில வந்தது” என்றேன். அதற்கு அவர் கேட்ட முதல் கேள்வி “பணம் வந்ததா ?... உங்க அட்ரஸ் கொடுத்துவிடுங்க இவர்களிடம்..பணத்தை ஒழுங்கா அனுப்பிடுங்க..” என்றார். பணம் பெரிது இல்லை ஆனால் எழுத்துக்கு அவர் கொடுத்த மரியாதை இது. இந்த கட்டுரையை படிக்கும் போது சில்லரைத்தனமாக இருக்கிறதே என்று இன்று நினைக்கிறேன். ஆனால் அவர் தந்த ஊக்கம் தான் இன்று என்னையும் பலரையும் எழுத வைத்திருக்கிறது. நான் எழுதிய கட்டுரை கீழே...

சுஜாதாவின் முதல் சிறுகதை

சுஜாதாவின் "தேர்ந்தெடுத்த சிறுகதைகள்” தொகுப்புக்கு கதைகளை வரிசைப்படுத்திக்கொண்டு இருந்த நேரம். அவர் எழுதிய முதல் சிறுகதை பற்றிய பேச்சு வந்தது.  “சிவாஜி பத்திரிக்கையில் எழுதிய கதை” “அது கிடைக்காது” என்றார் தீர்மானமாக.  இதே போல அவர் எம்.ஐ.டியில் படிக்கும் போது ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அது எம்.ஐ.டி வெள்ளி விழா மலரில் வந்தது. அதை நானும் துபாயில் இருக்கும் ராஜ்குமார் என்பவரும் பல வருஷமாக தேடினோம் . பிறகு சுஜாதா மறைந்தபின் அந்த முயற்சியை விட்டுவிட்டோம். மீண்டும் தேடினால் கிடைக்கும் என்று நினைக்கிறேன். இந்த வாரம் ஆனந்தவிகடனில் சுஜாதாவின் முதல் கதை என்றவுடன் பழைய உற்சாகத்துடன் புத்தகம் வாங்கி பார்த்தேன், பிறகு படித்தேன். மைகேல் மதன காம ராஜன் படத்தில் சரளமாக அங்கிலம் பேசும் கமலை பார்த்து இன்னொரு கமல் ”அதெல்லாம் அப்படியப்படியே வரதுதானில்ல...” என்பார். அதே போல் தான் சுஜாதாவின் எழுத்தும். பதினெட்டு வயதில் எப்படி அசால்டாக எழுதியிருக்கிறார். எப்படி இந்த கதை கிடைத்தது என்று ஒருவாரமாக தேடினேன். சிவாஜி பத்திரிகையை நடத்தினவர்களின் தொலைப்பேசியை நண்பர் மூலம் கேட்டு அவர்களிடம் பேசினேன். ”முன்பு

பார்த்தேன் எடுத்தேன் - 2

நம் தேசம் பாரம்பரியம்மிக்கது. கோயில்கள் வழிபாட்டு தலங்களாக மட்டும் இல்லை. இங்கே தான் கல்வி, கலாச்சாரம் வளர்ந்தது. மழை, புயல் போன்ற காலங்களில் பலருக்கு பாதுகாப்பாக இருந்திருக்கிறது. பஞ்சகாலத்தில் மக்களுக்கு உணவுவளித்து காத்துள்ளது. ”கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்று சொன்னாரகள். ஸ்ரீரங்கம் போன்ற திவ்ய தேசங்களை வாழ் நாள் முழுக்க பார்த்து ரசித்துக்கொண்டே இருக்கலாம். பல்லவர்கள், சேர, சோழ, பாண்டியர்கள், நாயக்கர்கள் மட்டும் இல்லாமல், விஜயநகர, ஹோய்சாளப் பேரரசர்கள் ஸ்ரீரங்கத்தை பல நூற்றாண்டுகளாக பல் வேறு காலகட்டங்களில் கட்டியது. இங்கே பல மொழிகளில், 644 கல்வெட்டுகள் இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர்கள் விட்டு சென்ற எழுத்துகள், ஆவணங்கள். 2013ல் ஸ்ரீரங்கம் சென்ற போது இந்த சின்ன சிற்பம் கண்ணில் பட்டது. சின்ன தவழும் கண்ணன் கையில் வெண்ணையுடன்!.  கைநாட்டு வைக்கும் கட்டைவிரல் அளவு தான் இருக்கும் இந்த சிற்பம். ஆனால் நாம் கையை வைத்துக்கொண்டு சும்மா இருப்போமா ? சூப்பர் கம்யூட்டர், கிளவுட் கம்ப்யூட்டிங் என்று வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் இது போல கையால் செய்வதற்கு ஆள் க

பார்த்தேன் எடுத்தேன் - 1

இந்த படத்தில் இருக்கும் பூ இன்று காலை வாக்கிங் போகும் போது - ’பார்த்தேன் எடுத்தேன்’. நான் குடியிருக்கும் அடுக்குமாடிக் கட்டடத்தில் இந்த செடியை பார்த்து வியந்திருக்கிறேன்.எப்போது பார்த்தாலும் வசிகரிக்கும். பல நாள்கள் அதைத் தொட்டுப் பார்த்து அனுபவித்திருக்கிறேன். பழைய சினிமா வில்லனின் புலி நகம் வைத்த செயின் மாதிரி என்ன விதமான படைப்பு! பூவின் பெயர் தெரியாது. 2011 ஆஸ்திரேலியா சென்றபோது, சிட்னி துறைமுகப் பாலம் (Sydney Harbour Bridge) பக்கம் பெரிய மரம் அதிலும் அதே பூ!. சிறிது நேரம் மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது அங்கே கிளி இரண்டு விளையாடிக்கொண்டு இருந்ததையும் கவனிக்க முடிந்தது. பச்சைக் கிளிகளையே பார்த்துப் பழக்கப்பட்ட எனக்கு வானவில் நிறத்தில் அந்தக் கிளிகளைப் பார்க்கும்போது அத்தை பெண்ணுக்குப் பதில் ஆண்ட்ரியாவைப் பார்த்த மாதிரி இருந்தது. சிறிது நேரம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு சிட்னி துறைமுகப் பாலத்தில் நடக்க ஆரம்பித்தேன். பாலத்தின் தடுப்புச் சுவற்றிலும் அதே டைப் கிளிக்குஞ்சு. பிரியாவிடை கொடுத்துவிட்டுத் திரும்பி வந்ததிலிருந்து அந்தப் பூவின் பெயரையும் அந்தக் கிளி

நம்பி தெரு நம்பிக்கை விநாயகர் - பாகம் - 2

சற்று முன்  திருவல்லிக்கேணி சம்பத்குமார் ஸ்வாமி அவர்கள் நான் 2010ல் திருக்கச்சி நம்பி பற்றி எழுதிய பதிவுக்கு ( http://sujathadesikan.blogspot.in/2010/01/blog-post_8257.html )    ஒரு கமெண்ட் போட்டிருந்தார். உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.  அவர் எழுதிய பதிவை இங்கே போட்டிருக்கிறேன்.  Today evening was seeing photos on Facebook – Mr Rajagopalan Madhavan had posted some good photos of Acharyar Thirukachi Nambigal Uthsavam – a couple of photos attracted me … for I had read about that particular place in a blog post. 'மாசி மிருகசீர்ஷம்'  - திருக்கச்சி நம்பிகளின் அவதார திருநாள்.   திருக்கச்சி நம்பிகள் - எம்பெருமானாருக்கு ஆசார்யர் ஆவார்.  இவர் சௌம்ய வருஷம்,  1009 ஆம் ஆண்டு,  வைசிய குல திலகரான வீராரகவருக்கும் கமலைக்கும் அவதரித்தார். இவரது அவதார ஸ்தலம் : பூவிருந்தவல்லி. இந்த பதிவு ஒரு  மகிழ்சி அளிக்கும் விஷயம் பற்றியது. சுஜாதா தேசிகன் என்பவர்  2004 முதல் தமிழ் வலைத்தளம் அமைத்து எழுதி வருபவர்.  மிக்க புகழ்மிகுந்த எழுத்தாளர் சுஜாதாவின் நண்பர்.  அவரது 'திருக்

கல் சொல்லும் கதை – பாகம் 2

கல் சொல்லும் கதை என்று ஒருவருடம் முன்  நம்பெருமாளை முகமதியர்களிடமிருந்து காத்த ஸ்ரீ பிள்ளைலோகாச்சாரியர் பற்றியும், நம்பெருமாள் ஜோதிஷ்குடியில் தங்கிய இடம் அங்கே சென்ற அனுபவத்தை கட்டுரையாக அடியேன் எழுதியிருந்தது நினைவிருக்கலாம். (இந்த கட்டுரையை படிக்கும் முன்பு எழுதிய கட்டுரையை ஒரு முறை படித்துவிடுங்கள் ) அந்த கட்டுரையை படித்த சிலர் ”ஏன் அதில் ஸ்ரீ வேதாந்த தேசிகரின் பங்கை நீங்கள் குறிப்பிடவில்லை?”  என்று கேட்டிருந்தார்கள். நியாயமான கேள்வி, குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால், சரியான தகவல்களை சேகரித்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதை சற்றே தள்ளிப்போட்டேன். ஸ்ரீவைஷ்ணவத்தில் ஒரே பிரச்சனை  கோயில் யானை மட்டும் இல்லை, புத்தகங்களிலும் தென்கலை, வடகலை சார்ந்தே இருப்பது தான்.  வடகலை  நித்யநு சந்தானத்தில் உபதேச சத்தின மாலை இருக்காது, தென்கலை புத்தகத்தில் பிள்ளையந்தாதி இருக்காது. ஸ்ரீபிள்ளைலோகாசாரியரும், ஸ்ரீ வேதாந்த தேசிகரும் சமகாலத்தவர்கள். ஆனால் சம்பிரதாயத்தை ஒட்டி, சரித்திர சம்பந்தமான விஷயங்களிலும் இந்த மகா புருஷர்களில் யாராவது ஒருவரை தவிர்த்துவிட்டு சரித்திரத்தை எழுதியுள்ளார்கள்.

அப்பா என்னும் நண்பன்

முன் குறிப்பு: சற்றே பெரிய கட்டுரை போன மாதம் திருச்சி விஜயத்தின் போது ’புத்தூர் நால்’ ரோடு பக்கம் என் அப்பாவுடன் கூட வேலை செய்த நண்பர் ஷஃபியை அகஸ்மாத்தாகச் சந்தித்தேன். “என்ன சார் எப்படி இருக்கீங்க ?” என்று கேட்டவுடன் “அட என்னப்பா தேசிகன்” என்று என்னை அடையாளம் கண்டுகொண்டார். “எங்கே இருக்க, என்ன செய்யற” என்ற சுருக்கமான நலம் விசாரிப்புக்குப் பின் அவர் சொன்னது இது தான்... “ரிடையர் ஆகிட்டேன்.  இப்ப நிம்மதியா இருக்கேன், காரணம் உங்க அப்பா தான். இன்னிக்கும் அலுவலக நண்பர்கள் ஒன்னா சேர்ந்தா உங்க அப்பா பத்தி பேசாம இருக்க மாட்டோம்.” சமீபத்தில் என் முகநூல் பக்கத்தில் வேறு ஒரு நண்பர் இவ்வாறு கமெண்ட் செய்திருந்தார் ”Your father used to tell me… now I am very happy to be in Srirangam” எனக்கு முகநூலில் நண்பராக அறிமுகமான ரிஷபன் அவர்களும் என் அப்பாவுடன் கூட வேலை செய்தவர். “உங்க அப்பாவுக்கு என் மீது தனி பிரியம். இன்றும் வீரபாஹுவை சந்தித்தால் உங்க அப்பாவைப் பத்தித் தான் பேசுவார்” என்றார்.  “வீரபாஹு என் அப்பாவிடம் ஈர்க்கப்பட்டு ஆழ்வார் பாசுரங்களைக் கற்றுக்கொண்டு அதை உங்க  அப்பாவிடம்