Skip to main content

Posts

Showing posts from June, 2025

சடகோபன் அருள்

சடகோபன் அருள் மதுரகவி ‘கண்ணி நுண்சிறுத்தாம்பில்’ மூன்று இடங்களில் சடகோபன் என்ற சொல்லை உபயோகிக்கிறார். சடகோபன் நம்பி என்று இரண்டு இடத்திலும் ஒரு இடத்தில் ‘சடகோபன் அருளையே’ என்கிறார். ‘சடகோபன் அருள்’ என்றால் என்ன ? நாதமுனிகளுக்குச் சடகோபன் அருளியதால் தான் இன்று நமக்கு நாலாயிரமும் கிடைத்தது. தற்காலத்தில் திரு.உ.வே.சா தமிழ் ஓலைகளைச் சுவடிகளைத் தேடிக்கொண்டு ஆழ்வார்திருநகரியில் மனம் உருகி ஆழ்வாரை வேண்டிக்கொண்டதால் அவருக்கு வேண்டியது கிடைத்தது ( இதைப் பற்றித் தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன் ). அதே போல் யோகா ஆசான் திரு கிருஷ்ணமாச்சாரியார் ஆழ்வார்திருநகரியில் சம்பந்தத்தால் அவருக்கு யோக ரகசியம் கிடைத்தது. ( இதைப் பற்றியும் அடியேன் தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன்). பல வருடங்கள் முன் லிப்கோ ஸ்தாபகத்தார் நாதமுனிகள்போலப் பல ஆயிரம் முறை கண்ணி நுண்சிறுத்தாம்பு அனுசந்திக்க முடிவு செய்து ஒரு குழுவாக அதைச் சேவிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சேவித்துக்கொண்டு இருக்கும் இடத்துக்கு. அருகில் ஒரு கல்யாண மண்டபம். விழாக்கோலமாக இருக்கக் கோயில் மாலை பிரசாதமாக வருகிறது. ஏதோ காரணம் கல்யாணம் நின்றுவிட்டது. கோயில் ம...

அவுட்லைன்

அவுட்லைன்  ஒரு வண்ண ஓவியம் தீட்டும் போது அதற்கு அவுட்லைன் மிக முக்கியம். அது சரியாக வந்தால் தான் அதற்கு மேல் வாட்டர், ஆயில், ஏன் பென்சில் என்று எதைக் கொண்டு வண்ணம் தீட்டினாலும் அது அழகாக அமையும். 'முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என்பது போல அவுட்லைன் சரியில்லை என்றால் எந்த மாதிரி உயர்ந்த வண்ணத்தைக் கொண்டு தீட்டினாலும் அது எடுபடாது. ’எல்லாம் நல்லா இருக்கு ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங்’ என்ற விமர்சனத்தை நான் எதிர்கொண்டுள்ளேன். பள்ளியில் படிக்கும் போது ஓர் ஓவியரைச் சந்தித்து, என்னிடம் உள்ள விலை உயர்ந்த வாட்டர் கலர் வண்ணங்களைக் காண்பித்து, இது எல்லாம் என்னிடம் இருக்கிறது, எனக்கு வாட்டர் கலர் அடிக்கச் சொல்லிக் கொடுங்கள் என்றேன். அவர் குழந்தைகள் வைத்திருக்கும் பல்லாங்குழி போன்ற பத்து ரூபாய் சமாசாரத்தை வாங்கி வரச் சொன்னார். அதை வைத்துக் கொண்டு ஒரு மிக அருமையான ரோஜா பூ படத்தை வரைந்து முடித்தார். அவர் என்னிடம் சொன்னது, விலை உயர்ந்த கலர் முக்கியம் இல்லை, படத்தின் அவுட்லைன் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் என்பது தான். நான் வரைந்த சில படங்களை அவரிடம் காண்பித்த போது மூக்குக்குக் கீழே ஒரு கோடோ...