Skip to main content

Posts

Showing posts from June, 2014

வணக்கம் சென்னை - 2

ஒரு மாலை, ரங்கநாதன் தெரு அன்பழகன் பழக்கடை முதல் ’தாயார் டைரி’ வரை ஊர்ந்து சென்றேன். பிளாஸ்டிக், துணி, மக்கள் என்று ரங்கநாதன் தெருவை சுலபமாக வகைப்படுத்திவிடலாம். கூண்டு மாதிரி இருக்கும் தாயார் டைரி கடையில் என்னென்ன பொருட்கள் இருக்கிறது என்று கடைக்காரருக்கே தெரியுமா என்பது சந்தேகம். ஒரே டிசைனில் புடவை கட்டிய பெண்கள் ஜவுளி கடைகளுக்கு முன் வடை, போண்டா, அல்வா விற்க தொடங்கியிருப்பது புதுசு. தி.நகர் முழுவதும் இப்போது ’சாஃப்டி’ ஐஸ்கிரிம் கடைகளும் பக்கத்திலேயே ஸ்வீட் கார்ன், லெமன் சோடா கடைகளும் நிறைய முளைத்திருக்கின்றன. பனகல் பூங்காவில் மகிழம்பூ மரம் ஒன்று இருப்பதைக் கண்டுபிடித்தேன். யாராவது பனகல் பூங்காவில் இருக்கும் மரங்களிலெல்லாம் அதன் பெயர்களை எழுதி வைத்தால் நன்றாக இருக்கும். பனகல், நடசேன், ஜீவா என்று எந்தப் பூங்காவிற்குச் சென்றாலும் காலையில் மக்கள் ஊர்வலமாக நடைபயிற்சி செய்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் சிக்னல் வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மதியம் பனகல் பூங்காவை மூடிவிடுகிறார்கள்! சென்ற வாரம் காலை பனகல் பூங்காவில் நடைபயிற்சி செய்துகொண்டிருந்த போது “எப்படி சார் இருக்கீங்க?” என்ற

வணக்கம் சென்னை - 1

கடந்த சில வாரங்களாகச் சென்னை வாசம். பெரிய மாற்றம் எதுவும் இல்லை என்றாலும், நுழையும் எல்லாச் சாலைகளிலும் ஒரு தடுப்பு வைத்து ஒத்தையடிப் பாதையாகவோ, அல்லது அம்பு குறிப் போட்டு ஒரு வழிப்பாதையாகவோ மாற்றுவழியில் திருப்பிவிடுகிறார்கள். மெட்ரோ, மேம்பாலம் பழுது என்று ஏதாவது காரணம் இருக்கிறது. கடைசியாக பசுல்லா சாலையில் திருப்பிவிடப்பட்ட போது அங்கிருந்த சங்கீதா ஹோட்டலைக் காணவில்லை. பக்கத்தில் இருக்கும் மரத்துக்குக் கீழே “மெட்ராஸ் காஃபி ஹவுஸ்” என்று சின்னதாக முளைத்திருக்கிறது. சென்னை பெங்களூர் நெடுஞ்சாலை முழுவதும், ”கும்பகோணம் காபி” கடை இறைந்து கிடைக்கிறது. யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்று கண்டுபிடிப்பது கஷ்டம். ஐயங்கார் பேக்கரி, தலப்பாக்கட்டி பிரியாணி, கோவை பழமுதிர் நிலையம் எல்லாம் இந்த வகை தான். அலுவலகம் செல்லும் போது பண்பலையில் தினமும் ஒரு முறையாவது கோச்சடையான் -மெதுவாகத்தான்; சைவம் - அழகு பாடல்களைக் கேட்டுவிட முடிகிறது. போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பித்தாலும் மஞ்சப்பை ”பாத்து பாத்து” பாடலிருந்து தப்பிப்பது கஷ்டம். கொசுக்களை விரட்டும் புதிய LG ஏஸி; ”கேரியர் ஏஸி பொருத்திய ராசி நான

பொன்னியின் செல்வன் - நாடகம்

அக்னி வெயில் நாளையுடன் முடிவடைகிறது என்பதை நம்பிச் சில வாரங்களுக்கு முன் சென்னை வந்த போது தலையில் தோசை வார்க்கும் அளவிற்கு வெயில் இருந்தது. அலுவலகம் செல்லும் வழி எல்லாம் பொன்னியின் செல்வன் நாடகம் பற்றி விளம்பரத்தைப் பார்த்து டிக்கெட் முன்பதிவுச் செய்யலாம் என்று முயற்சி செய்த போது டிக்கெட் எல்லாம் தீர்ந்துவிட்டது என்றார்கள். எப்படியும் பார்த்துவிட வேண்டும் என்று நேற்று மியூசிக் அகாடமிக்கு சென்ற போது டிக்கெட் கவுண்டர் பக்கம் ஒருவர் என்னை அணுகி “என்ன சார் டிக்கெட் வேணுமா ? என்றார் “ஆமாம்” “கொஞ்சம் எக்ஸ்டரா ஆகும்” “அவ்வளவு ?” “பார்த்துக் கொடுங்க... என்று ஒரு டிக்கெட் கொடுத்தார்” ( எவ்வளவு கொடுத்தேன் என்பது இங்கே தேவையில்லை என்பதால் அதை பற்றி நோ கமெண்ட்ஸ்) பிளக்கில் டிக்கெட் வாங்குவது குற்றம், படித்தவர்கள் இப்படிச் செய்யலாமா என்று உள் மனது சொன்னாலும், கல்கியின் பொன்னியின் செல்வனை பார்க்க வேண்டும் என்ற ஆவலால் இந்தத் தப்பை செய்தேன். நாடகம் எப்படி இருக்கும்... ஐந்து பாகங்களை எப்படிச் சுருக்க போகிறார்கள், காட்சி அமைப்பு எப்படி இருக்கும் என்ற கேள்வி வந்தவர்கள் பலர் மனதில் ஓடுவதைப