NaOH + H2SO4 --> Na2SO4 + H2O போன்ற சமன்பாடு (equations) இன்றும் எனக்கு சமன்படுத்த்த (balance) தெரியாது. ஏன் என்று சொல்வதற்கு முன் கெமிஸ்டரி வாத்தியார் நட்ராஜன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். வவீபூதி இட்டுக்கொண்டு பார்க்க பளிச்'சென அழகாக இருப்பார். . என்னைக் கண்டால் அவருக்குக் கொள்ளைப் பிரியம். வகுப்பறைக்குள் நுழைந்தவுடன் நான் எங்கே உட்கார்ந்திருந்தாலும், கண்டுபிடித்துவிடுவார். விடை தெரியாத கேள்வியாகக் கேட்பார். முழிக்கக் கூட அவகாசம் கொடுக்காமல் உடனே வெளியே அனுப்பிவிடுவார். வெளியே என்றால் ஒரேயடியாக உல்லாசமாக உலாத்தமுடியாது. வகுப்பறைக்கு வெளியே கதவின் பக்கத்தில் நின்றுகொண்டே பெருமாள் சேவை மாதிரி பாடத்தைக் கவனிக்க வேண்டும் (அல்லது கவனிப்பதுபோல் பாசாங்கு செய்யவேண்டும்). எதிர்ப்பக்க ஜன்னல் வெளிச்சத்தில் கிளார் அடிக்கும். கரும்பலகை பாதி கருப்பாகவும், பாதி வெளுப்பாகவும் தெரியும். சிவபெருமானுக்கு முன்பு நந்தி உட்கார்ந்துகொண்டு இருக்கும், நான் நடராஜனுக்கு முன் நின்றுக்கொண்டு இருப்பேன் அவ்வளவு தான் வித்தியாசம். நாளடைவில் ஸ்டாஃப் ரூமிலிருந்து சக வாத்தியார்கள் எட்டிப் பார்த்