Skip to main content

Posts

Showing posts from September, 2017

ராயர் மெஸ்

எம்.ஜி.ஆர், சோ என்று பல பிரபலங்கள் சாப்பிட்ட இடம். சனி ஞாயிறு தான் உகந்த நாள். எக்கச்சக்க கூட்டம் இருக்கும். வெளியே உங்க பேர் கொடுத்துவிட்டுக் காத்திருக்க வேண்டும். உள்ளே எட்டிப்பார்த்தால் சமையல் செய்யும் இடம் பக்கம் சரியாக 2.5 டேபிள் ஸ்டூல். மொத்தம் 13 பேர் உட்காரலாம். ஒரு கிரைண்டர் எப்போதும் சட்னி அரைத்துக்கொண்டு இருக்கும். மெனு கார்ட் கூட கிடையாது. சீட் கிடைத்தவுடன் ஆனந்ததுடன் வாழை இலை வரும். ஒரு கிண்ணம் நிறையத் ’கெட்டி’ சட்னி வரும் - கெட்டி என்றால் நிஜமாகவே கெட்டி. அந்த கெட்டி சட்னியை கொஞ்சம் டேஸ்ட் செய்துவிட்டு அதை இலையில் கொட்டுவிட்டு, கிண்ணத்தை காலியாக வைக்க வேண்டும். ( ஏன் என்று பின் சொல்லுகிறேன் ) இப்ப கார சட்னி கம்மிங் . கார சட்னி பச்சையாக நாக்கில் பட்டவுடன் ’டேஸ்ட் பட்’ எல்லாம் மலர்ந்துவிடும். மிளகாயைவிடக் காரமாக இருக்கும். மிளகாய்ப் பொடி( வாயில் போட்டால் கடுக்கு முடுக்கு என்று இருக்கும்) கூடவே நல்லெண்ணெய் ( வாசனையாக ). டயட்டில் இருபாவர்களுக்கு நெய்யும் உண்டு. இந்த வர்ணம் பாடி கச்சேரியை துவக்கினால் ( கச்சேரி ரோட்டில் தான் ராயர் மெஸ் இருக்கிறது ), பொங்கல் ஆலாபனை ஆரம்ப

மாடு மேய்க்கும் கண்ணா

வாத்சல்யம் என்றால் என்ன என்று கூகிளில் தேடினால் கிடைப்பது இது “வாத்சல்யம் என்றோர் சமஸ்கிருதச் சொல் உண்டு. மனதிற்குள் உச்சரித்தாலும் காதுகளுக்குள் இனிமையாக ஒலிக்கக் கூடிய பிரியமான சொல் அது. வாத்சல்யம் என்றால் அன்பு என்று நேரடியாகப் பொருள் கூற முடியாதபடி, அன்பு, அக்கறை, வாஞ்சை, மிகப்பிரியம், குற்றம் காணாத் தன்மை எனப் பல்வேறு அர்த்தங்களில் தொனிக்கும் அடர்த்தியான அதே சமயம் மிக மிருதுவான சொல்லாக விளங்குவது” ஆங்கிலத்தில் “Parental Love” என்று சொல்லலாம். இவை எல்லாம் கஷ்டம் என்று நினைப்பவர்கள் கீழே உள்ள படத்தை பார்க்கலாம். நேற்று இந்தப் படம் ‘வாட்ஸ் ஆப்’ , ஃபேஸ்புக்கிலும் பலர் பகிர்ந்தார்கள். அடியேனின் ஆசாரியனான ஸ்ரீ அஹோபில மடம் 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் கன்றுக்குட்டியுடன் ‘வாத்சல்யத்துடன்’  இருக்கும் காட்சி.