Skip to main content

Posts

Showing posts from March, 2011

என்னே இந்த சமூகத்தின் கொடுமை!

திருச்சியில் என் அறைக்கு எதிரில் குடை மாதிரி மரம் ஒன்று என்னை வருடம் முழுக்க பார்த்துக்கொண்டு இருக்கும். முழுவதும் பச்சையாக இலைகளுடன், முருங்கைக்காய் போன்ற காய்களுடன். சில மாதங்களில் மரம் முழுவதும் மொட்டுவிட்டு ஒரு நாள் இலைகளே இல்லாமல் முழுவதும் திராட்சை கொத்து போன்ற மஞ்சள் பூக்களுடன்... ஒரு வாரத்தில் உன்னால் முடியும் தம்பி படத்தில் பூக்கள் உதிர்வது போல உதிர்ந்து கீழே இருக்கும் பெரிய கற்களுக்கு ஸ்டென்ஸில் போட்டுவிடும். பிறகு முழு மரமும் மொட்டையாகி திரும்ப இலைகள் வரும். படிக்கும் காலத்தில் அந்த மரத்தின் பெயர் தெரியவில்லை. ஒரு முறை ஒரு கோயில் அர்ச்சகர் சைக்கிள் கேரியர் மீது ஏறி சில பூக்களை பறித்துக்கொண்டு இருந்தது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. அந்த மரம் இருந்த இடம் அண்ணன் தம்பிக்கு பங்கு போடப்பட்டு சில நாட்களில், இரண்டு பேர் சில மணி நேரத்தில் மரத்தை மாட்டுவண்டியில் எடுத்துக்கொண்டு போனார்கள்.

பிப்ரவரி மழை

"An unexpected but welcome shower caught the dry city by surprise on Monday late evening. There were reports of unscheduled power cuts in Koramangala, Viveknagar, Bannerghatta and MG Road for 6 to 8 hours. In some areas, power wasn’t restored till late at night"  -- டைம்ஸ் ஆப் இந்தியா, சென்ற வார செவ்வாய்கிழமை செய்தி..  பிப்ரவரி மாதம் பெங்களூரில் மழை பெய்யாது. ஆனால் போன திங்கட்கிழமை யாருக்கும் சொல்லாமல் மழை வந்துவிட்டது. அன்றிரவுதான் திவ்யா அலுவலகத்திலிருந்து புறப்பட்டாள். இரவு இல்லை; விடியற்காலை 2:35. அமெரிக்க இன்ஷூரன்ஸ் கம்பெனி பேக் ஆபிஸ் வேலை. ஹெப்பால் பக்கம் ஒரே மாதிரி இருக்கும் பல கட்டிடங்களில் ஏதோ ஒரு கட்டிடத்தில் இருக்கிறது அவளது அலுவலகம். வெளியே வந்து பார்த்தபோது,  டாட்டா சூமோ அணிவகுப்பு வெளிச்சத்தில் மழை மத்தாப்பு மாதிரி பெய்துகொண்டு இருந்தது. தன்னுடைய வண்டியைக் கண்டுபிடித்து, கைப்பையை தற்காலிகக் குடையாக்கிக்கொண்டு ஒரே ஓட்டமாக வண்டியில் ஏறிக்கொண்டாள். காலை செய்த அலங்காரம் கொஞ்சம் மீதி இருந்தது. கதர் மாதிரி துணியில் வெள்ளை நிற குர்த்தா. கணுக்கால் தெரியும் அளவ