Skip to main content

Posts

Showing posts from June, 2015

பிராண்டிங் நம்பிக்கை

பிராண்டிங் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம். மக்கள் மனதில் பதிய வைக்க வேண்டும். அந்த பொருளின் மீது மக்களுக்கு ஒரு வித நம்பிக்கை ஏற்பட வேண்டும். பன்னாட்டு நிறுவனங்கள் கோடிகளை இதில் கொட்டுகிறார்கள். எம்பிஏ படித்து இந்த களத்தில் பல லட்சம் சம்பாதிக்கிறார்கள். அப்படி இருக்க பல வருடங்களாக கட்டிக்காத்த ”இரண்டு நிமிட” நூடுல்ஸ் நம்பிக்கை இரண்டே நிமிஷத்தில் நூடுல்ஸ் ஆனது. இன்னும் கொஞ்ச நாளில் ஒரு நடிகர் அல்லது நடிகையை அழைத்து திரும்பவும் அதே பொய்யை சொல்லி அவர்களுடைய பிராண்ட் இமேஜை மீட்க பல கோடிகள் செலவாகும். போன வாரம் இரவு 11:45மணிக்கு தனியாக காரில் வந்து கொண்டிருந்தேன். கொஞ்ச தூரத்தில் சிகப்பு, நீல நிற விளக்கு சிமிட்டிக்கொண்டு நின்ற காவல்துறை வண்டி. அதிகாரிகள் கை அசைத்து கார், பைக்கில் பயணம் செய்யும் எல்லோரையும் குடிபோதையில் வண்டி ஓட்டுகிறோமா என்று ஒரு ஸ்டிராவில் ஊதச் சொல்லி பரிசோதனை செய்துக்கொண்டு இருந்தார்கள். எனக்கு முன்னால் ஓர் ஆடி கார் ஊதிவிட்டு புறப்பட்டது. அடுத்து நான். என்னை பார்த்துவிட்டு நீங்க ஊத வேண்டாம் போகலாம் என்று அனுப்பிவிட்டார். என் நெற்றியில் நான் தரித்துக் கொண்டிருந்த ஸ்ரீ

நகரம் - க்யூவும் க்யூ சார்ந்த இடமும்

என்னுடைய ஒரு நாளை எப்படிக் கழிக்கிறேன்? சுருக்கமாக இரண்டு மதிப்பெண் கேள்விக்கான விடை மாதிரி சொல்ல வேண்டும் என்றால் ”வாகன நெரிசலில் கார் ஓட்டிக்கொண்டு, வழியில் சுமாரான வரிசையைத் தேர்ந்தெடுத்து சுங்கச் சாவடியில் கட்டணம்கட்டிக் கடந்து, கூட்டத்தோடு கூட்டமாக மின்தூக்கியின் (அது தாம்பா லிஃப்ட்) உதவியுடன் ஐந்தாவது மாடியில் இருக்கும் என் அலுவலகம் வந்தடைகிறேன். இதே மாதிரி வீடு திரும்பும்போது வழியில் எக்ஸ்டரா பழமுதிர்ச் சோலையில் காய்கறி வாங்குகிறேன்” கொஞ்சம் விளாவாரியாக (பத்து மதிப்பெண் மாதிரி) இப்படி விவரிக்கலாம். வாகன நெரிசலில் வண்டியை ஓட்டிக்கொண்டு போகும் போது நம்மையறியாமலே முன் செல்லும் கார், பைக் என்று எதையும் விட்டு வைக்காமல் முந்துகிறேன் பின்னால் வரும் வண்டிகளும் அப்படியே. எங்கேயும் எல்லோரும் யாரையாவது முந்திக்கொண்டே செல்கிறார்கள். அடுத்தவர் நம்மை முந்திக்கொண்டு செல்லும் போது நமக்கு ஒரு விதமான எரிச்சல் வருகிறது. நம்மை முந்திக்கொண்டு சென்றவர், பின்னாடி வருபவர் எல்லோரும் அடுத்த போக்குவரத்து சிக்னல் முன் ஒன்றாக பச்சைவரக் காத்து நிற்கிறோம். எல்.ஈ.டி 5.4.3.2.1 பச்சை விளக்கு வந்தவுடன் திர