ஸ்ரீஉடையவர் சன்னதி - ஓவியம் தேசிகன் சில ஆண்டுகள் அமெரிக்காவில் இருந்துவிட்டு திரும்பியதும், சித்திரை மாதம், ஸ்ரீரங்கத்துக்குச் சென்றிருந்தேன். ராஜகோபுரத்தைச் சுற்றியுள்ள கடைகள், மாடுகள், நெட்டிலிங்க இலைமேல் வைத்துக் கொய்யா பழம் விற்கும் கிழவி, மத்தியான வேகாத வெயிலில் சமயபுரம் பஸ்ஸிலிருந்து இறங்கும் சந்தனம் தடவிய மொட்டைத் தலை 'கோவிந்தா'க் கூட்டம் என்று எதுவுமே மாறவில்லை. 'மைசூர் போண்டா ரெடி!'யைக் கடந்து சென்றால், 'ரங்கா ரங்கா' கோபுரத்திற்கு முன் 'ரின் சோப் உபயோகியுங்கள்!' பனியன் போட்டுக் கொண்டு ஒருவர் பரோட்டா மாவுடன் மல்யுத்தம் செய்து கொண்டுடிருந்தார். அவரிடம் அடிவாங்காமல் கடந்தால், ரெங்கவாசல் கடைகள் ஜொலிப்பில் நூறு வாட் என்றது. ரங்க வாசல் கடையில் தொங்கிய குஞ்சலத்தை பார்த்த ஒரு வெள்ளைக்காரர்.. "வாட்டிஸ் திஸ்?" "குஞ்சலம் சார், ஹெட் டெக்கரேஷன்" "ஹொவ் மச்" "ஃபிப்டீன் ரூப்பீஸ் சார்" பணம் கொடுத்து, குஞ்சலத்தை வாங்கித் தலையில் வைத்துப் பார்த்துக் கொள்பவரைக் கடந்து வந்தால் சக்கரத்தாழ்வார் சன்னதி. எதிர