வீடு மாற்ற சரியான தருணம் எது? 1. வீட்டில் பாத்ரூம் சரியில்லை 2. பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை 3. அடுத்த மாதம் புத்தகக் கண்காட்சி விடை - 3. போன வருட இறுதியில் கொஞ்சம் பெரிய வீட்டுக்குப் போனால் நன்றாக இருக்குமே என்று எண்ணி, எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் 100 அடி தள்ளி வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்தோம். புது வீட்டுக்குப் போவது என்பது கிட்னிக்கு டயாலிசிஸ் மாதிரி. வீட்டில் இருக்கும் குப்பைகள் எல்லாம் ஒழிந்தன. என்றோ காணாமல் போன வஸ்துக்கள் புதையலாகக் கிடைத்தன. “அட நான் ஸ்கூல் படிக்கும் போது உபயோகித்த பேனா, ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன்”. சில பொருட்கள் புதையலாக மறைந்து போகும். “என் காது தோடோட திருகை எங்கே போட்டீங்க, எங்க அம்மா கல்யாணத்துக்கு வாங்கித் தந்தது”. ”புது வீட்டுக்கும் எல்லா புத்தகங்களையும் அள்ளிக்கட்டிண்டு வந்தீங்கன்னா..” என்ற சின்ன எச்சரிக்கையே சப்வே ”எதை எடுத்தாலும் பத்து ரூபா” பிளாஸ்டிக் சாமான் விற்கும் வியாபாரி போல ஆக்கியது. எல்லாப் புத்தகங்களயும் பரப்பிப் பார்த்த போது எனக்கே மலைப்பாக இருந்தது. எவ்வளவு புத்தகங்கள் படிக்காமல் அப்படியே இருக்கின்றன என்று. பல புத்தகங்கள் நான்