Skip to main content

Posts

Showing posts with the label பெண் பிள்ளை கதைகள்

(7) தாய்க் கோலம் செய்தேனோ அனசூயை போல!

(7) தாய்க் கோலம் செய்தேனோ அனசூயை போல! மீண்டும் ராமாயண கதை. என்று அந்தச் சின்னப் பெண் கதை சொல்ல ஆரம்பித்தாள். ராமருக்கு முடிசூட்டு விழா, ஆனால் கைகேயி, கூனியின் சூழ்ச்சியால் ராமர் காட்டுக்குச் சென்றுவிட்டார். ராமர் சித்திரகூடத்திலிருந்தபோது, பரதன் ராமரைத் தேடிக்கொண்டு வந்து “ராமா !மீண்டும் நாட்டுக்கு வர வேண்டும்” என்று கேட்க, அதற்கு ராமர் தந்தை சொல்லைத் தட்ட மாட்டேன், பதினான்கு வருடம் காட்டிலிருந்துவிட்டுத் தான் வருவேன் என்றார். பரதன் எவ்வளவு சொல்லியும் ராமர் மறுத்துவிட, பரதன் உங்கள் பாதுகையாவது கொடுங்கள்.  உங்கள் சார்பாக அந்தப் பாதுகை நாட்டைக் காத்து ஆளட்டும் என்று தலைமேல் சுமந்து அயோத்திக்கு திரும்பினார். பரதன் சென்றபிறகு ராமருக்குப் பரதன் நினைவு அடிக்கடி வந்தது. வேறு இடத்துக்குச் செல்லலாம் என்று புறப்பட்டார். போகும் வழியில் ஒரு ஆசிரமம் இருந்தது. அது அத்திரி முனிவரும் அவருடைய மனைவி  அனசூயை வசித்த ஆசிரமம். ராமர், சீதையைப் பார்த்தவுடன் முனிவரும், அனசூயையும் மிகவும் மகிழ்ந்தார்கள். முனிவர் அனசூயையைச் சீதைக்கு அறிமுகம் செய்து வைத்து “அனசூயை தர்மத்தில் மிகச் சிறந்தவள். முன்பு ஒரு ம...

(6) பிண விருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப் போல !

(6) பிண விருந்து இட்டேனோ கண்டாகர்ணனைப் போல !  பெண் பிள்ளை கதை சொல்ல ஆரம்பித்தாள்.   கண்டாகர்ணன் ஒரு பிசாசு. அந்தப் பிசாசு பிணத்தைத் தான் சாப்பிடும்.  சிறந்த சிவபக்தியுடையது ஆனால் அதற்கு நாராயணனைப் பிடிக்காது. அதனால் போகும் இடம் எல்லாம் காதில் மணியைக் கட்டிக்கொண்டு போகும். ”மணிக்கும் நாராயணனுக்கு என்ன சம்பந்தம் குழந்தாய் ?” என்று ராமானுஜர் கேட்க அதற்கு அந்தச் சுட்டிப் பெண்  ”சொல்கிறேன் சாமி” என்று தொடர்ந்தாள். கண்டா என்றால் மணி என்று பொருள். கர்ணம் என்றால் காது என்று பொருள். மணிகட்டிய காதை உடைய பிசாசு. அதனால் அதற்குப் பெயர் கண்டாகர்ணன். நடக்கும்போது காதில் தொங்கவிட்ட மணி ‘டங் டங்’ என்று சத்தம் போடும். அப்போது யாராவது நாராயணா என்று சொன்னால் அதன் காதில் அது விழாது அல்லவா ?. பல காலம் பிசாசாக இருந்து அதற்கு அலுத்துவிட்டது. ஒரு நாள் சிவபெருமானிடம் “ஐயனே எனக்கு இந்தப் பிசாசு வாழ்க்கை போதும், எனக்கு வைகுண்டம் போக வேண்டும்”  என்று கேட்டது. அதற்குச்  சிவன் “பிசாசே, உன்னை வைகுண்டம் அனுப்பும் சக்தி என்னிடம் இல்லை. நாராயணன் ஒருவனுக்குத் தான் அந்தச் சக்தி உண்டு, அவர...

(5) பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!

(5) பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே! ”பிள்ளாய்!, இந்தக் கதையில் கண்ணனா ? ராமரா  ?” என்றார் ராமானுஜர்  “சாமி, இது தொண்டைமான் சக்கரவர்த்தியின் கதை”  ”அப்படி என்றால் அது திருமலை சம்பந்தப்பட்ட கதை!” என்று ராமானுஜர் சிஷ்யர்களைப் பார்த்தார். சிஷ்யர்கள் புன்னகையுடன் கதையைக் கேட்க ஆரம்பித்தார்கள்.  குட்டிப் பெண் கதையைத் தொடர்ந்தாள். தொண்டைமான் சக்கரவர்த்தி  திருமலை ஏழுமலையானின் தீவிர பக்தன். கோபுரம், மதில், மண்டபங்கள் எல்லாம் கட்டினான். அவற்றைத் தங்கமும், ரத்தினங்களும் கொண்டு அழகு படுத்தினான்.  பெருமாள் மீது மிகுந்த அன்பு கொண்ட தொண்டைமானுக்குப் பெருமாள் நண்பனாகிவிட்டார்.  தினமும் பெருமாள் அவருடன் நேரில் பேசுவார். அடிக்கடி பெருமாளைப் பார்ப்பதற்கு அரண்மனையிலிருந்து கோயிலுக்கு ஒரு சுரங்கப்பாதை அமைத்தான்.  அதன் வழியே தினமும் பெருமாளுடன்  பேசிவிட்டு வருவான். .அப்படிப் பேசும் போது பெருமாள் இவருக்குப் பல நல்ல உபதேசங்கள் செய்வார். ஒரு முறை இந்த தொண்டைமானின் ராஜ்யத்தின் மீது எதிரி நாட்டு அரசன் படையெடுத்தான்.  அப்போது தொண்டைமானுக்கு என்ன செய்வது எ...

(4) தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

(4) தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே  சின்னப் பெண் கதை சொல்ல ஆரம்பித்தாள். இது ராமாயண கதை. தசமுகன் என்றால் பத்து தலை ராவணன். சீதையை ராவணன் இலங்கைக்குக் கொண்டு சென்று சீதையை ஒரு அழகிய வனத்தில்  சிறை வைத்தான். அந்த இடத்துக்கு அசோகவனம் என்று பெயர்.  ராமனைப் பிரிந்த துக்கத்தால் சீதை  முகம் வாடி அழுதுகொண்டு இருக்கிறாள். ராவணன்  “சீதை நீ ராமரை விட்டு விட்டு என்னுடன் வந்துவிடு, நான் பலசாலி, என்னிடம் பல தெய்வங்கள் தோற்றுவிட்டது. உனக்கு என் சொத்து முழுவதும் தருகிறேன். பல வேலையாட்களை உனக்குப் பணிவிடை செய்யச் வைக்கிறேன். என் பட்டத்து ராணியாக்குகிறேன்.” என்று ஆசை வார்த்தைகளைக் கூறி மயக்கப் பார்க்கிறான்.  சீதை கண்கள் சிவந்து கண்களிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது. அப்போது ராவணனைப் பார்த்துக் கீழே ஒரு கிடக்கும் புல்லை எடுத்து அவன் முன்னே போடுகிறாள் ஏன் தெரியுமா ? என்று அந்தப் பெண் ராமானுஜரைப் பார்த்துக் கேட்டாள்.  “பிள்ளாய் ! நீயே சொல்லு, உன் வார்த்தையில் கேட்கவே விரும்புகிறேன்” என்கிறார் அந்தச் சின்னப் பெண் தொடர்கிறாள். “ராவணா நீ இந்தப் புல்லுக்குச் சமானம்!” ராவணனு...

(3) தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே!

 (3) தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே! ”சாமி ! இதுவும் ஒரு கண்ணன் கதை தான்” என்று அந்தக் குட்டிப் பெண் சொல்ல ஆரம்பித்தாள். கண்ணன் தினமும் தன் தோழர்களுடன் மாடு மேய்க்கப் போவான். அவன் போகும் இடம் காடு. அங்கே தான் மாடுகளுக்குப் புல் கிடைக்கும். ஒரு நாள் நடுப் பகல் அது அவர்களுக்குச் சாப்பிடும் சமயம். எல்லோரும் அவரவர் வீட்டிலிருந்து கொண்டு வந்த உணவைப் பகிர்ந்து கொண்டு சாப்பிடுவார்கள். “டேய் எனக்குக் கொஞ்சம் தோசை கொடு” “எனக்கு அதிரசம்” “தயிர்சாதத்துக்கு என் அம்மா ஊறுகாய் வைக்க மறந்துவிட்டாள், கொஞ்சம் ஊறுகாய் கொடு” என்று தனமும் விதவிதமாகச் சாப்பிடுவார்கள்.  எல்லோரும் வழித்து, நக்கி சாப்பிட்டு முடித்தார்கள். ஆனால்  அவர்களுக்கு அன்று பசி தீரவில்லை. இன்னும் பசித்தது. ”கண்ணா இன்னும் பசிக்கிறதே?” என்றார்கள். கண்ணன் சுற்றி முற்றும் பார்த்தான். “அங்கே புகை வருகிறதே தெரிகிறதா ? “ “ஆமாம் ஆமாம்” என்றார்கள் சிறுவர்கள் “அங்கே யாகம் நடக்கிறது என்று நினைக்கிறேன். அங்கே உணவு கிடைக்கும் போய்க் கேளுங்கள்” “கேட்டால் கொடுப்பார்களா ?” என்றான் ஒருவன் சந்தேகமாக.  “அந்தணர்கள் கோபக்காரர்கள் ...

(2) அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே !

(2) அகம் ஒழித்து விட்டேனோ விதுரரைப் போலே ! ”சாமி ! இது விதுரரின் கதை” என்று சொல்ல ஆரம்பித்தாள் அந்தக் குட்டி பெண்.  விதுரர் திருதராஷ்டிர மன்னனின் தம்பி. சிறந்த அறிவாளி. எது சரி, எது தப்பு என்று நன்றாகத் தெரிந்தவர். விதுரர் எது சொன்னாலும் அது நீதி. கண்ணனிடம் ஆழ்வார்களைப் போல மிகுந்த அன்பு அவருக்கு. அதனால் இவரை விதுராழ்வான் என்பார்கள். துரியோதனனுடைய சபையில் மந்திரி. பாண்டவர்கள் கௌரவர்களிடம் சூதாட்ட பந்தயத்தில் ராஜ்யத்தை இழந்தார்கள்.  பந்தயப்படி பன்னிரெண்டு வருடம் காட்டிலிருந்துவிட்டு மீண்டும் ராஜ்யத்தைக் கேட்டபோது துரியோதனன் மறுத்துவிட்டான். பாண்டவர்கள் சமாதானத்தையே விரும்பினார்கள்.  கண்ணனைத் தூதாக அனுப்பினார்கள். கதை சொல்வதை நிறுத்திவிட்டு அந்தக் குட்டிப் பெண் ராமானுஜரைப் பார்த்து “சாமி, விதுரர் உங்களைப் போல நல்ல முகப் பொலிவுடன் இருப்பார் என்று நினைக்கிறேன்” என்றாள் ராமானுஜர் ”பிள்ளாய் என்னைப் போல் முகப் பொலிவா ? புரியவில்லையே!” என்றார் அந்தப் பெண் ராமானுஜரைப் பார்த்து “சாமி, அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்லுவார்கள்.. உங்கள் உள்ளத்தின் வெளிச்சம் முகத்தில் பிரகா...

(1) அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே !

 (1) அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே ! ”சாமி இது அக்ரூரரின் கதை!”  என்று சொல்ல ஆரம்பித்தாள் அந்தக் குட்டிப் பெண்.  ரமானுஜர் அவருடைய சீடர்களும் ஆர்வமாகக் கேட்கப் பெண் பிள்ளை தொடர்ந்தாள்.  கண்ணனின் தந்தை நந்தகோபன். அவருடைய உறவினர் அக்ரூரர்.  அக்ரூரர் என்றால் வடமொழியில் சாது என்று பொருள். இவரும் சாது, நல்லவர். குட்டி கண்ணனிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார். குட்டி கண்ணனின் மாமா கம்சன். கெட்ட மாமா. கண்ணனைக் கொல்ல நினைத்தான். கெட்ட மாமா கம்சனிடம் அக்ரூரர் வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்தார். கம்சன் கண்ணனைக் கொல்ல பல சதித் திட்டம் தீட்டித் தோற்றுப் போனான்.  மீண்டும் ஒரு சதித் திட்டம் தீட்டினான். ஒரு விழா ஏற்பாடு செய்தான். அதற்குக் கண்ணனை அழைத்துக் குவலயாபீடம் என்ற மத யானையை விட்டு அழித்துவிடலாம் என்று முடிவு செய்தான்.  இதிலும் கண்ணன் தப்பிவிட்டால் ? இன்னொரு திட்டம் வைத்திருந்தான். சாணூரன், முஷ்டிகன் என்ற மல்லர்களைக் கொண்டு மல்யுத்தத்தில் கொன்றுவிடலாம் என்ற இன்னொரு அதி பயங்கரமான திட்டம். அவனுக்கு ஒரே பிரச்சனை கண்ணனை இந்த விழாவிற்கு எப்படி அழைத்து...

ஸ்ரீராமானுஜருக்கு புகும் ஊர், பெண் பிள்ளைக்கு போகும் ஊர் !

ஸ்ரீராமானுஜருக்கு புகும் ஊர், பெண் பிள்ளைக்குப் போகும் ஊர் ! ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர் ஆழ்வார்திருநகரியில் பெருமாளைச் சேவித்துவிட்டு திருக்கோளூருக்குச் சென்றார்.  ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் பிறந்த இடம். அவருடைய சிஷ்யர் மதுரகவி ஆழ்வார் பிறந்த ஊர் திருக்கோளூர்  ஸ்ரீ ராமானுஜர் திருக்கோளூருக்குள் நுழையும்போது, எதிரே ஒரு சின்னப் பெண் வந்தாள். ராமானுஜரை வணங்கினாள்.  ராமானுஜர் “பெண்ணே எங்கிருந்து வருகிறாய் ?” என்று கேட்டார். “சாமி நான் திருக்கோளூரிலிருந்து வருகிறேன்” என்றாள் அந்தக் கிராமத்துப் பெண்.  ”அடடா..! இப்பொழுது தான் நம்மாழ்வாரைச் சேவித்துவிட்டு வருகிறேன்.. நம்மாழ்வார் இந்த ஊரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா ? “தெரியும் சாமி... எல்லோரும் போக வேண்டிய ஊர் திருக்கோளூர் என்கிறார் ஆழ்வார்” என்று அந்தப் பெண் சட்சென்று பதில் கூறினாள்.  “ஆனால் பிள்ளாய் ! நீ அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறாயே ?”  “இந்த ஊரில் இருக்கும் தகுதி எனக்கு இல்லையே!”  “அப்படி என்னமா தகுதி வேண்டும்?” “நான் ஒன்றும் அறியாதவள்! பெருமாளிடம் பக்தி கொண்ட பெரியவர்களை நினைக்கும்போது நா...