Skip to main content

Posts

Showing posts from March, 2017

சீட்டு பெற்ற சீமாட்டி

பலர் தேடிப்படிப்பார்கள் என்ற நோக்கத்தில் நம்பிள்ளை கட்டுரையில் கடைசியில் ஒரு பெண்மணி பற்றிய கதை என்று முடித்திருந்தேன். ஆனால் அதை  எப்போது எழுதுவீர்கள் என்று பலர் கேட்பதால் அந்த சம்பவம் இங்கே.  நம்பிள்ளை திருமாளிகை சிறியதாக இருந்தது. பலபேர் வந்து காலஷேபம் கேட்க அது சௌகரியமாக இல்லை. நம்பிள்ளையின் அகத்தையும் சேர்த்தால் பலர் வந்து காலஷேபம் கேட்க வசதியாக இருக்கும் என்று நினைத்தார்கள். பக்கத்து அகத்தில் ஓர் அம்மையார் இருந்தார். ஸ்ரீவைஷ்ணவர். நம்பிள்ளையின் சிஷ்யர் ஒருவர் அந்த அம்மையாரிடம் சென்று “நம் ஆசார்யன் திருமாளிகை இடம் பற்றாமல் சிறியதாக இருக்கிறது உமது அகத்தை ஆசார்யனுக்கு சமர்பித்துவிடுமே” என்றார். அதற்கு அந்த அம்மையாரோ “கோயிலிலே(ஸ்ரீரங்கம்) சாண் இடம் யாருக்கு கிடைக்கும் ? நான் பகவான் திருவடியை அடையும்வரை இவ்விடத்தை ஒருவருக்கும் கொடுக்க முடியாது” என்று சொல்லிவிட்டார். இந்த விஷயத்தை சிஷ்யர் நம்பிள்ளையிடம் சொன்னார். நம்பிள்ளை அந்த அம்மையாரை வேறு ஒரு சமயம்  பார்த்த போது “காலஷேபம் கேட்க வருபவர்கள் கஷ்டப்படுகிறார்கள் உமது இடத்தைத் தரவேண்டும்” என்று விண்ணப்பம் செய்தா

ஹார்ட் டிஸ்க் ஃபெய்லியரும், நம்பிள்ளை ஈடும் !

நம்பிள்ளை - பின்பழகராம் பெருமாள் சீயரோடு - ஸ்ரீரங்கம் வடுக நம்பிகள் பற்றிய கட்டுரை எழுதி முடிக்கும் சமயம். கணினி கண்ணனை போல நீலமானது. கூடவே சர சர என்று எழுத்துக்கள் வரத் தொடங்கியது. கீதையோ என்று படிக்க ஆரம்பித்தேன். கீதை இல்லை,  ஹார்ட் டிஸ்க்கில் ஏதோ பிரச்சனை என்றது அந்த எழுத்துக்கள். கிட்டதட்ட நான்கு நாளாக எழுதிக் கட்டுரை  ஒரு நொடியில் போய்விட்டதோ! என்று கொஞ்சம் பதறினேன். ஃபைல் அல்லோகேஷன் டேபிளில் பிரச்சனையா அல்லது ஏதாவது மெக்கானிக்கல் பிரச்சனையா என்று யோசிக்கத் தோன்றவில்லை. நினைவுக்கு வந்தது நம்பிள்ளை தான்!. நம்பிள்ளை ஞாபகம் ஏன் வந்தது என்று தெரிந்துகொள்ள நம்பிள்ளை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். . நம்பிள்ளை என்றவுடன் நமக்குக் கூடவே நினைவுக்கு வருவது  ‘ஈடு’ என்ற வார்த்தை தான். ’ஈடு’ என்ற வார்த்தை எதனுடனாவது சேர்ந்து தான் வரும். உதாரணம் - காப்பீடு, குறியிடு, முறையீடு, முதலீடு, தலையீடு, வெளியீடு, இழப்பீடு. நம்பிள்ளை ’ஈடு’ பகவத் விஷயமான திருவாய்மொழியுடன் எப்போதும் சேர்ந்தே வரும். ஈடு என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கிறது. திருவாய்மொழிக்கு ஈடான உரை அதனால் ஈடு; த

வடுக நம்பியும் ஸ்ரீவைஷ்ணவ நம்பியும்

ஓவியம் ! சிலவற்றை பார்க்கும் போது ’கண்டதும் காதல்’  மாதிரி ஒர் ஈர்ப்பு வந்துவிடும். ஏன் என்று தெரியாது.  இயற்கை காட்சியாக  இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம். அது ஓர் உணர்வு. சில நாள்களுக்கு முன் வாட்ஸ்-ஆப்பில் அப்படி ஒரு படம் வந்தது. ஸ்ரீராமானுஜர் பெருமாளுக்கு ஸ்ரீசூர்ணம் சாத்துவது மாதிரி. கண்டதும் காதலித்து, தூரத்தில் ஷெனாயில் தேஷ் ராகம் கேட்ட உணர்வை அது ஏற்படுத்தியது.   பெருமாளுக்கு பல கல்யாண குணங்கள் இருக்கிறது என்று படித்திருக்கிறோம். அதில் ’சௌலப்யம்’ என்பது ஒன்று.  எளிமையான விளக்கம் - பெருமாள் எளிமையானவர் என்பது தான்.  மனித உருவில் வந்து நம் கண்களுக்கும் காட்சி கொடுக்கும் எளிமையானவன்.  படத்திலும்  அதே எளிமை!.  அதே போல பெருமாளின் இன்னொரு குணம் ’வாத்சல்யம்’ அதாவது தாய் பசு கன்றிடம் நக்கிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது மாதிரி.  படத்தில் இருக்கும் ஸ்ரீரமானுஜரிடம் அதை பார்க்கலாம். இந்த படத்தில் இருக்கும் பெருமாள்  திருகுறுங்குடி அழகிய நம்பி ! உள்ளே ஒன்றும் இல்லை என்றாலும் குழந்தைகள் அடிக்கடி ஃபிரிட்ஜை திறப்பது மாதிரி பெரியவர்கள் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் என்று பிஸியாக இருக்கும் இந்த க

சென்னை அனுபவங்கள்

சென்னையில் இரண்டு வருடம் குப்பையுடன் முகநூலில் இதையும் கொட்டினேன். ஒரு இடத்தில் இருக்கட்டுமே என்று இங்கே. படிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை. ---------- ”கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து” என்று தொடங்கும் திருப்பாவை பாடல் காலை 4 மணிக்கு நினைவுக்கு வந்தது. இன்று கறந்த பாலில் காபி சாப்பிடுவது என்று முடிவு செய்தேன். வீட்டுக்கு எதிரில் இருக்கும் ஆவின் பூத்தில் விசாரித்தேன். “கறந்த பால் தான்... சார் ஆனா பாக்கெட்டில் இருக்கு” கூடவே ஒரு கொசுறு கேள்வி “எதுக்கு சார்... ஏதாவது மருந்துக்கா?” என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல்.. ”சும்மா டிரைப் பண்ணலாம் என்று.. உடம்புக்கு நல்லது” “அப்போ ஆரோக்கியா பால் வாங்கிக்கோங்க.. திக்கா இருக்கும்.” பாக்கெட் பால் வாங்க வந்திருந்த ஒரு தாத்தா உதவ முன்வந்தார். “இங்கிருந்து ஸ்ட்ரெயிட்டா மூன்றாவது ரைட் அங்கே உள்ளே போனா ஒரு வீட்டில் கிடைக்கும்” சரியாக மூன்றாவது ரைட் போன போது அங்கே ஒரு மாடு இருந்தது. அந்த வீடாக தான் இருக்கும் என்று அங்கே சென்றேன். என்னை பார்த்த மாடு சூடாக ஒன்றுக்குப் போனது. என் பாட்டி அதைக் கையில் எடுத்துத் தலையில் தெளித்

கேமரா கனவுகள்

அப்பாவின் திருமண ஆல்பத்தை நான் பார்த்ததில்லை. காசி யாத்திரை மை கன்னத்துடன் எப்படி இருந்திருப்பார் என்று யோசித்ததுண்டு. “கல்யாணத்தின்போது ஏதோ சச்சரவு. அதனால் புகைப்படம் ஒன்று கூடக் கிடையாது” என்றார். ஒரே ஒரு புகைப்படம் பீரோவில் இருந்தது. அதில் அப்பாவின் முதுகு மட்டும் தெரிந்தது. அம்மாவை முழுசாக யாரோ மறைத்துக்கொண்டு இருந்தார்கள். இதனாலோ என்னவோ, அப்பாவிற்கு கேமராவில் படம் எடுப்பதும், போட்டோவிற்கு போஸ் கொடுப்பதும் மிகவும் விருப்பம். எங்களைத் தன் கேமராவில் படங்களாக எடுத்துத் தள்ளினார். என்னுடைய சிறுவயதுப் படங்கள் கருப்பு வெள்ளையில் எல்லாம் கொள்ளை அழகு. பொதுவாகக் குழந்தைகள் அழகாக இருக்கும். கடந்த நாற்பது வருடங்களாகப் பல கேமராக்கள் என்னுடன் பயணம் செய்திருக்கின்றன. நான் முதன்முதலில் உபயோகித்த கேமராவை இன்று செல்ஃபி எடுக்கும் கேமராவுடன் ஒப்பிட்டால் அது சரியான  ‘டப்பா கேமரா’ என்றுதான் சொல்ல வேண்டும். நிஜமாகவே ‘டப்பா கேமரா’தான். பள்ளியில் அறிவியல் பாடம் படிக்கும்போது ஊசித்துளைக் கேமரா (Pinhole Camera) செய்து, அதில் தலைகீழாக மரங்களைப் பார்த்திருக்கிறேன். என் அப்பாவுடன் இருந்த கேமராவும் அ

கிடாம்பி ஆச்சானும், ராகு கேது தோஷமும் - சில விளக்கங்கள்

கிடாம்பி ஆச்சானும், ராகு கேது தோஷமும் என்று அடியேன் போன வாரம் எழுதிய கட்டுரை பலரை சென்று அடைந்துள்ளது. ’தானான திருமேனி’யின் மீது கொண்ட அன்பினாலும், ஸ்ரீராமானுஜரின் கொள்கைக்கு விரோதமாக ( தோஷ நிவர்த்தி ) இருப்பதாலும் எழுதிய பதிவு அதில் யாரையும் புண்படுத்தவோ குற்றம் சொல்லவோ அடியேனின் நோக்கம் கிடையாது. விழுப்புணர்வு கருதி எழுதிய பதிவு. இருந்தாலும்  சில விஷயங்களை தெளிவுப்படுத்த விரும்புகிறேன். 1. அன்பர் AMR கண்ணன் அவர்கள் எனக்கு அனுப்பிய மடலில் ஜோதிடர் AMR அவர்கள் ’பாக்கெட்’ பால் உபயோகப்படுத்தியதை கண்டித்துள்ளார் என்றும் குமுதம் ஜோதிடம் 2014ல் அதை பற்றியும் எழுதியுள்ளார் என்றும் அதன் பிரதியை அடியேனுக்கு அனுப்பியுள்ளார். அவருக்கு என் நன்றி. ( அதை இங்கே பகிர்ந்துள்ளேன் ). 2. மேலும், பல வருடம் முன்பு வரை ஸ்ரீபெரும்புதூரில் கூட்டமே இருக்காது ஆனால் திரு AMR அவர்கள் குமுதம் ஜோதிடத்தில் ஸ்ரீராமானுஜர் பற்றி எழுதிய பின் கோயிலுக்கு பலர் விஜயம் செய்து, அதனால் பல திருப்பணிகள் நடந்தது என்றும் கூறியிருக்கிறார். 2. ஸ்ரீபெரும்புதூரில் என் நண்பர்கள் சிலர் ’தானான திருமேனி’யான உடையவர் திரும

படியாய் கிடந்து..

ஸம்பிரதாயத்தில் ஸ்ரீராமரை பெருமாள் என்று தான் அழைப்பர்.எல்லா வியாக்கானங்களிலும் ராமரை ‘ராமர்’ என்று பூர்வாச்சாரியகள் யாரும் பெயர் சொல்லி அழைக்க மாட்டார்கள். பெருமாள் என்று தான் அழைப்பார்கள். ஆனால் கண்ணனை பெருமாள் என்று யாரும் அழைக்க மாட்டார்கள்! சில நூற்றாண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் என்று ஊரில் யாரும் பெயர் சொல்லிஅழைக்க மாட்டார்கள். எல்லோரும் பெரிய பெருமாள் என்று தான் அழைப்பார்கள், அதே போல் பெரிய பிராட்டி. குலசேகர ஆழ்வார் சேரநாட்டில் ஆட்சி புரிந்த மன்னன். ஸ்ரீராமர் கதை கேட்கும் போது தாம் யார் என்பதும் மறந்து, ராமருக்கு தன் படையுடன் புறப்பட்டார். ஆழ்வார் ஸ்ரீராமன் இடத்தில் மிகுந்த பக்தி கொண்டதால் அவரைக் குலசேகர பெருமாள் என்று பெயர். ஸ்ரீவைஷ்ணவ அடியார்கள் இடத்து மிகுந்த பக்தி கொண்டு ”அஞ்சலெனக் குடப்பாம்பி லங்கையிட்டான் வாழியே” என்கிறது வாழி திருநாமம். அந்த கதை பற்றி பலருக்குத் தெரிந்திருக்கும். அதே போல் அவர் எழுதிய ஒரு பாடல் மிக பிரசித்தம் ஸ்ரீநிவாசன் என்று ஏதாவது பாடல் பாட வேண்டும் என்றால் உடனே இந்த ஒரு பாசுரத்தை விருத்தமாகப் பாடிவிட்டு மெயின் பாட்டுக்கு சென்றுவ

கிடாம்பி ஆச்சானும், ராகு கேது தோஷமும்

எம்பெருமானார் ஸ்ரீரங்கத்துல் கத்ய த்ரயம் சாதித்து, கோயிலில் பல மாறுதல்களை செய்து உயர்ந்து நின்ற சமயம். ஸ்ரீரங்கத்தில் சிலருக்கு இது மிகுந்த பொறாமையையும், எரிச்சலையும் கொடுத்தது. அந்த அஸுயை அவர்களை கொலை செய்யவும் தூண்டியது. அவரது பிக்ஷையில் விஷம் கலந்து கொடுக்க அதிலிருந்து தப்பினார். அமைதியாக நஞ்சு கலந்த அன்னத்தை திருக்காவிரியில் கரைத்து உபவாசம் மேற்கொண்டார். இதை கேள்விப்பட்ட திருகோட்டியூர் நம்பி உடனே திருவரங்கம் விரைந்தார். தனக்கு உபதேசம் செய்த ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்க காவேரிக் கரைக்கு எழுந்தருளினார் எம்பெருமானார். கொதிக்கும் வெயிலில் கொதித்துக்கொண்டு இருந்த மணலில் நம்பிகள் திருவடிகளிலே தண்டம் சமர்பித்தார். ஆசாரியன் “எழுந்திரு” என்று சொல்லும் போது தான் எழுந்திருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நம்பியோ ஒன்றும் சொல்லாமல் அப்படியே இருக்க அங்கிருந்த கிடாம்பி ஆச்சான் “ஐயோ இது என்ன ஆசாரிய சிஷ்ய லட்ஷணம் ? நெருப்பில் இட்ட இளந்தளிர்போல சூடு மணலில் கிடக்க அதை பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா ? “ என்று ஓடி பரிவுடன் அவரைத் தூக்கிவிட நம்பி “ஆச்சான், உம்மை போல் தான் அவர் திருமேனியில் பரி