Skip to main content

Posts

Showing posts from December, 2015

சந்திரஹாசம் - புத்தக விமர்சனம்

”சந்திரஹாசம் புத்தக வடிவில் ஒரு சினிமா!” என்று கடந்த இரண்டு மாதங்களாக ரஜினி, கமல், இளையராஜா ... என்று பல பிரபலங்கள் கையில் வைத்துக்கொண்டு விளம்பரப்படுத்தினார்கள். சினிமாகாரகள் அடாச தமிழ் படத்தையே இந்த மாதிரி படத்தை பார்த்தில்லை என்று சொல்பவர்கள்... ... ஆனால் காமிக் படிப்பவர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என்று எல்லொரும் புகழ ... 1500 புத்தகம் வெறும் 1000 ரூபாய்க்கு ... ஒரு வித பிரஷர் - ஆடர் செய்து சில வாரங்களுக்கு முன் வந்து சேர்ந்தது. பேக்கிங் அருமையாக. இந்த மழை வெள்ளத்திலும் ஓரம் நசுங்காமல் கற்புடன் வந்தது வியப்பை தந்தது. ஆர்வமாக பிரித்தேன். வடிவமைப்பு நன்றாக இருக்கிறது. சரசரவென்று பிரித்து படிக்க ஆரம்பித்தேன். முதலில் ஓவியங்கள் நன்றாக ...போக போக சுமாராக பிறகு ரொம்ப சுமாராக இருப்பதாக எனக்கு தோன்றியது. ஒரே ஓவியம் சில இடங்களில் கட் & பேஸ்ட் எரிச்சலை தந்தது. கொடுத்த காசுக்கு தரமான ஒரு புத்தகத்தை எதிர்ப்பாப்பது தவறு இல்லையே. லாங் ஷாட் ஓவியங்கள் நிறைய. ஆனால் அது மட்டும் நிறைய இருந்தால் ஏதோ ஆல்பம் பார்க்கும் எண்ணமே வருகிறது. உற்று நோக்கினால் எல்லா ஓவியங்களிலும் ஏதோ ஒன்று ரிப்லிகே

நகர்வலம்! - சிறுகதை சுஜாதா

( இந்த கதையை மீண்டும் இன்று ஒரு முறை படித்தேன் ). அந்தப் படகு மிகப் பெரிதாக இருந்தது. எனினும், அதைக் கப்பல் என்று சொல்ல முடியவில்லை. கேளிக்கையும் சந்தோஷமும் நிறைந்த பிரயாணங்களுக்காக ஏற்பட்ட பெரிய படகு அது. அதன் மேல்தளத்தில் மிகவும் இயல்பான நிலையில் நின்றுகொண்டும் உட்கார்ந்து கொண்டும் சூரிய வெளிச்சத்தில் படுத்துக்கொண்டும் ஒரு கனவுச் சதுரம் போலிருந்த சிறிய நீச்சல்குளத்தில்(வெந்நீர்) சோம்பேறித் தனமாக நீந்திக்கொண்டும் இருந்த சந்தோஷ மனிதர்களில் ஆத்மா நித்யாவுக்காகக் காத்திருந்தான். தன் கையில் இருந்த புத்தகத்தில் கவனம் இல்லாமல்... எதிரே நீந்திக்கொண்டு இருந்த நித்யாவின் அவ்வப்போது தெரிந்த உடல் வடிவ அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தான். படகு அத்தனை வேகத்தில் செல்வது தெரியவே இல்லை. அதன் வயிற் றில் இருந்த சிறிய அணு மின்சார நிலையத்தின் சக்தியில் அது கடல் பரப்பின்மேல் ஒரு காற்று மெத்தையில் மிதந்து சென்றது. ஆத்மாவுக்கு அந்தப் பிரயாணம் அவன் வாழ்வின் ஆதர்சங்களில் ஒன்று... இன்னும் பதினைந்து நிமிடங்களில் படகு சென்னையை அடையப்போகிறது. சென்னை! அவன் முன்னோர்களின் ஊர்! அவன் தாத்தாவுக்குத் தாத்தாவு

ரெய்னி டே’ சினாரியோ

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் சென்று சேர் திருவேங்கட மா மலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே ( திருவாய்மொழி ) போன வாரம் அலுவலகத்துக்கு போன போது ஒருவரை ஒருவர் “உங்க ஏரியா எப்படி சார் ?” “எங்க ஏரியா பரவாயில்லை” “வீட்டை விட்டு வெளியிலேயே வர முடியல ஒரே தண்ணீ... ” ”மழையே இல்லாத மாதிரி எழுதியிருக்கீங்க ?” ”நீங்க சென்னை வந்தா மழை நின்றுவிடுகிறது” என்ற கமெண்ட் இன்று பொய்யானது. இன்று காலை 4.30மணிக்கு எழுந்து போது மழை. குடையுடன் வாக்கிங் போனேன். லேசான மழை தான். காபி ஒன்று குடித்துவிட்டு வெளியே வந்தால் ஏண்டா வெளியில் வந்தோம் என்றாகிவிட்டது. அழகிய லைலா பாடலில் ரம்பா பாவாடை மாதிரி என் சின்ன குடை பறந்து ஆட்டம் போட்டது. மழை ஒரு பொருட்டாகவே கருதாமல் சிலர் வேலை செய்துகொண்டு இருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. டிவிஎஸ் 50ல் பெரிய சூட்கேசில் நியூஸ் பேப்பர் வைத்துக்கொண்டு தான் சொட்ட சொட்ட நனைந்தாலும் பேப்பர் நனையாமல் பார்த்துக்கொள்ளும் அந்த சிறுவன். ஒரு குடையுடன் பெரிய அலுமினிய பாத்திரத்தில் பால் பாக்கெட்டை சுமந்துக்கொண்டு தூக்க முடியாமல் தூக்கிக்கொண்