என் அப்பா தான் எனக்கு சுஜாதாவின் கதைகளை அறிமுகம் செய்து வைத்தார். (இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான்). குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் வரும் சுஜாதாவின் தொடர்கதைகளை மிகவும் விரும்பிப் படித்து என்னிடம் அதைப் பற்றி சிலாகித்துப் பேசுவார். நானும் ஏதோ சொல்கிறார் என்று கேட்டுக்கொள்வேன். நான் படித்தது ஆங்கிலோ இந்தியன் பள்ளியில். அங்கு தமிழ் சுமாராகத் தான் கற்றுத் தருவார்கள். நானும் ரொம்ப திக்கித் திணறி பாஸ் செய்வேன்; எழுத்துக் கூட்டி எழுத்துக் கூட்டிப் படிப்பேன். கோனார் நோட்ஸுக்கே ஒரு நோட்ஸ் எனக்குத் தேவைப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நான் காலேஜில் படிக்கும் போது ஒரு நாள், அப்பா அடிக்கடி ஏதோ 'சுஜாதா, சுஜாதா' என்று சொல்கிறாரே என்னதான் எழுதுகிறார் பார்க்கலாமே என்று, திருச்சி ஜங்ஷனுக்குப் போய் ஒரு லெண்டிங் லைப்ரரியில் சுஜாதா புத்தகம் ஒன்று எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். முன்பே சொன்னது போல் என் தமிழ் புலமை அதிகம் ஆதலால் மிகவும் மெதுவாகப் படித்தேன். ஒரு வாரத்தில் படிக்க வேண்டிய புத்தகத்தை இரண்டு மாதத்தில் படித்து முடித்தேன். அந்த புத்தகம் படித்தவுடன், சுஜாதாவின