Skip to main content

Posts

Showing posts from January, 2016

’ஜல்லி’ கட்டுக்கதை

"ராம் நிச்சயம் நீ போய் தான் ஆக வேண்டுமா ?” என்றாள் சிந்து ”நிச்சயமாக. ராசியுடன்... இதில் என்ன சந்தேகம்.. ?” “ராசியுமா ?” “ஆமாம்.!“ “அது குழந்தை.. இந்த மாசிக்கு தான் பதினைந்து வயசு முடிகிறது... அதை எதற்கு ?” “தமிழருடைய வீர விளையாட்டை அது எப்போழுது தெரிந்துகொள்ளும் ?.. “ “இதில் என்ன வீரம் இருக்கிறது...? இந்த நூற்றாண்டில் பலருக்கு தமிழே தெரிவதில்லை” ராம் கைகடிகாரத்தை பார்த்த போது ரத்த அழுத்தம் 140 என்று காட்டியது. “நான் போகப் போகிறேன்! இதற்கு மேல் இந்த டாப்பிக் வேண்டாம்!” என்றான் தீர்மானமாக

மயில் குயில் ஆச்சுதடி!

உடையாத முந்திரியை எக்ஸ்போர்ட் செய்வதுமாதிரி, அனுபமா கல்யாணத்திற்குப் பின் அமெரிக்காவிற்கு எக்ஸ்போர்ட் செய்யப்பட்டாள். போன சித்திரை மாதம் இருபதாவது திருமண தினத்தை பிட்ஸ்பர்க் பாலாஜி கோயில் புளியோதரையுடன் கொண்டாடினார்கள். நடிகர்கள் நாட்டை விட்டுப் போவதால் பிரபலம் ஆவது மாதிரி அனுபமாவும் பிரபலம் ஆனாள். “அமெரிக்கா போகிறாயாமே ?.. எங்களை எல்லாம் மறந்துடாதே!” என்ற விசாரிப்புகளுக்கு இடையில் அப்பா “பாட்டை மட்டும் விட்டுவிடாதே..” என்று நாரத கான சபா பக்கம் இருக்கும் மியூசிக்கல் கடையில் கை நிறைய எம்.எஸ்.ஸும், லால்குடியையும் வாங்கித் தந்தார். அம்மா தேங்காய் எண்ணையில் வறுத்த நேந்திரங்கா சிப்ஸ்(மாப்பிள்ளைக்குப் பிடிக்குமாம்), பருப்பு பொடி, குழம்பு பொடி, சுமித் மிக்ஸி என்று அடுக்க ஆரம்பித்தாள். அனுவின் அப்பா மஹாதேவன் ஐ.ஓ.சியில் அந்தக் காலத்து என்ஜினியர்; தற்போது ஓய்வு பெற்றுவிட்டார். வேலையில் இருக்கும்போதே ஒன்றரை கிரவுண்டில் மேலும் கீழுமாக இரண்டு மாடி கட்டிக்கொண்டு கோட்டூர்புரத்தில் 'கோட்டூர் கார்டன்ஸ்' காலனியில் பின்பக்கம் வாழையும், வாசலில் மாமரம், மாடியில் அனுபமாவிற்கு சங்கீத டியூச

சினிமாவும் எழுத்தும்

1ஆம் தேதி சம்பளம் முக்கியம். வேலை முக்கியம். வேலை போக மற்ற நேரத்தில் கதை கட்டுரை எழுதலாம். என்னையே எடுத்துக்கொள் நான் வேலை பார்த்துக்கொண்டு தான் கதை எழுதினேன். முழு நேரமும் எழுதினால் குடும்பம் நடத்த முடியாது. ஒரு முறை சுஜாதவிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவர் எனக்கு கொடுத்த அறிவுரை. மா.வே.சிவகுமார் பற்றி பல அஞ்சலி கட்டுரைகள் படிக்கும் போது இது நினைவுக்கு வருகிறது. தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் எப்படியாவது சினிமாவுக்கு போக வேண்டும் என்ற துடிப்பு ஏன் வருகிறது ஏன் என்பது இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. அப்படி சென்றவர்கள் தங்கள் எழுத்து திறமையை வீணாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது என் எண்ணம். ஐந்து வருடம் முன் ஒரு இயக்குனர் என்னை தி.நகரில் ஒர் இடத்துக்கு வர முடியுமா எங்கள் படத்துக்கு நீங்கள் தான் வசனம் எழுத வேண்டும் என்றார். ”உடனே வர முடியாது, நான் பெங்களூரில் இருக்கிறேன், சனி ஞாயிறு முடியும்” என்றேன். “சார் ஒரு மாசம் லீவு போட்டுவிட்டு வாங்க முழுசா டிஸ்கஷன் பக்க செய்திடலாம்.. ” “ஒரு மாசம் எல்லாம் முடியாது.. டிசம்பர் மாசம் இரண்டு வாரம் முழுசா லீவு கிடைக்கும்” “ஓ. அப்பட