பொன்னியின் செல்வன் - 1 - சில எண்ணங்கள் ’கல்கியின்’ பொன்னியின் செல்வனை மணியன் ஓவியங்களுடன் படித்திருக்கிறேன். பிறகு ம.செ அழகான ஓவியங்களுடன், அடுத்து பத்ம வாசன் ஓவியங்களுடன், . கடைசியாக விகடன் பிரசுரம் செய்த அழகான புத்தகத்தை வாங்கி படித்திருக்கிறேன். இதைத் தவிர காமிக்ஸ் புத்தகம் போல் வந்தவற்றையும் விட்டுவைக்கவில்லை. பொன்னியின் செல்வன் நாடகமாக 2014ல் வந்த போது மியூசிக் அகடமியில் பிளாக்கில் டிக்கெட் வாங்கி பார்த்தேன். பாம்பே கண்ணன் அவர்கள் ஒலிச் சித்திரமாக வந்த போது முழுவதையும் அலுவலகம் செல்லும் போது, வாக்கிங் போது கேட்டு மகிழ்ந்தேன். மணிரத்தினம் இதைப் படமாக எடுக்கிறார் என்ற போது அதையும் விட்டு வைக்காமல் முதல் நாள் பார்க்க வேண்டும் என்று இன்று காலை சென்று வந்தேன். கல்கியின் பொன்னியின் செல்வனைப் படம் எடுக்கிறேன் என்று கிளம்பியவர்களில் மணிரத்தினம் மட்டும் அதைச் செய்து முடித்திருக்கிறார். அதற்காக முதலில் அவருக்கு வாழ்த்துகள். பொன்னியின் செல்வனைப் படம் எடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது. - சில/பல இளம் பாட்டிகள் நான் இன்னும் பொ.செ படிக்கவில்லை என்று ஸ்டைலாக சொல்லுவதிலிருந்து சிக்கல்கள