முனிவாகன போகம் - திருப்பாணாழ்வார் திருநட்சத்திரம் ஸ்வாமி தேசிகன் திருப்பாணாழ்வாரின் அமலனாதிபிரானுக்கு ’முனிவாகன போகம்’ என்ற ஆச்சரியமான உரையை அருளியிருக்கிறார். ‘முனிவாகன போகம்’ என்ற பெயரை ஏன் தேர்ந்தெடுத்தார் என்று யோசிக்கலாம். முதலில் முனிவாகனம் அமலனாதிபிரானுக்கு இரண்டு தனியன்கள் இருக்கிறது பெரியநம்பிகள் அருளிய ‘‘ஆபாதசூட மநுபூய’ என்று தொடங்கும் தனியனில் “முநிவாஹநம்’ என்ற வார்த்தை வருகிறது. லோக சாரங்க மஹாமுநியை வாகனமாகக் கொண்ட திருப்பாணாழ்வாரை மனசாலே துதிக்க வேண்டும் என்கிறார். அடுத்து திருமலை நம்பிகள் அருளிச்செய்த தனியனில் ‘முனியேறித் தனிபுகுந்து’ என்று இதிலும் லோகஸாரங்க முனிவரைத் தனது வாகனமாகக் கொண்டு என்ற அர்த்தத்தில் வருகிறது. அடுத்த ‘தனிபுகுந்து’ என்ற வார்த்தை மிக முக்கியம். அதிலிருந்து தான் போகம் என்ற வார்த்தை வருகிறது. தனிபுகுந்து - பெரிய பெருமாளுடைய அனுபவம் என்னும் உயர்ந்த ’போகம்’ பெற்றார் ஆழ்வார் என்கிறார்கள் பூர்வாசாரியார்கள். இப்போது ’போகம்’ என்ற வார்த்தையைக் கொஞ்சம் ஆராயலாம். போகம் என்பதற்கு சரியான தமிழ், ஆங்கில வார்த்தை இல்லை. Pleasure, happiness; இன்பம் என்று வார