Skip to main content

Posts

Showing posts from May, 2018

அப்பாவின் சர்குலேஷன் லைப்ரரி

என் அப்பா பாரத மிகு மின் நிலையத்தில்(BHEL) வேலை செய்த போது தொடர்ந்து ’சார்குலேஷன் லைப்ரரி’ ஒன்றை நடத்திக்கொண்டு வந்தார். வாராந்திர, மாதாந்திர பத்திரிகைகளின் அறிமுகம் அதில் தான் எனக்குக் கிடைத்தது. குமுதம், விகடன், ஜூனியர் விகடன், பக்தி, சக்தி, மஞ்சரி, சாவி, குங்குமம், பேசும்படம், பொம்மை… என்று அடுக்கிவைத்துப் படித்திருக்கிறேன். நிறையப் பேர் அந்த லைப்ரரியில் இருந்ததால் எல்லாப் புத்தகமும் இரண்டு, மூன்று பிரதிகள் முதலில் புதுசாக எங்கள் வீட்டுக்குத் தான் முதலில் வரும். புத்தகங்களை அவர் பேருந்தில் செல்லும் போதே படித்து முடித்துவிடுவார். ஒரு முறை அவர் ஒரு கதையை படித்துவிட்டு பக்கத்தில் இருந்தவரிடம் “இது எல்லாம் என்ன கதை… இதைப் பத்திரிக்கையில் எப்படிப் பிரசுரித்தார்கள்…. எல்லோரும் சுஜாதா மாதிரி ஆகிவிட முடியாது…” என்று கமெண்ட் அடித்தார். பின்னாடி இருந்தவர் “சார் என்ன கதை ?” இதோ இந்தக் கதை தான் என்று புத்தகத்தை பிரித்து அவரிடம் கொடுத்தார். பஸ்ஸிலிருந்து கீழே இறங்கும் போது பின் சீட்டு நபர் “சார் புத்தகம்” என்று திரும்பி கொடுத்துவிட்டுக் கூடவே இன்னொரு விஷயத்தைச் சொல்லிவிட்டு இறங்கினார்.

பண்டரீபூதம் !

25 வருடங்களுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளின் உபன்யாசம் ஒன்றில் பண்டரீபுரத்தில் பாண்டுரங்கனாக அடியார்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்கும் விட்டலனை விவரிக்க விவரிக்க பண்டரீபூருக்கு உடனே செல்ல வேண்டும் என்று தோன்றியது. உடனே போக முடியாவிட்டாலும், பதினைந்து வருடம் கழித்து அம்மாவை அழைத்துக்கொண்டு சென்றேன். சில வாரங்களுக்கு முன் குடும்பத்துடன் மீண்டும். பண்டரீபுரம் கர்நாடகத்திற்கும் மஹாராஷ்டிரத்திற்கும் மத்தியில் சந்திரபாகா நதிக்கரையில் அமைத்திருக்கிறது. பாத்ம புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி குறிப்பு இருக்கிறது. பண்டரீபுரம் என்று வழி கேட்டால் “பந்தர்பூர் ?” என்று கேட்டுவிட்டு வழி சொல்லுகிறார்கள். சந்திரபாகா நதிக்கரையில்... பண்டரீபூர் ( படம் D.Prabhu ) பண்டரீபூர் என்ற பெயர் எதனால் வந்தது என்பதற்கு ஸ்தல புராணம் இருக்கிறது. சுருக்கமாக நான் கேட்ட கதையை உங்களுக்குச் சொல்லுகிறேன். புண்டரீகன் என்ற பக்தன் தீர்த்தயாத்திரையாகக் காசிக்கு போகவேண்டும் என்று புறப்பட, அவனுடைய வயதான பெற்றோர்களும் மனைவியும் தாங்களும் வருகிறோம் என்று சேர்ந்துகொண்டார்கள். சரியான உணவு இல்லாமல், மிகுந்த சி