Skip to main content

Posts

Showing posts with the label அஞ்சலி

டெல்லி கணேஷ்

  டெல்லி கணேஷ் முன்பு கல்கி கடைசிப்பக்கத்தில் ‘பாயசம்’ பற்றி எழுதியது. .....77 வயதான டெல்லி கணேஷ் ’சாமநாது’ கதாபாத்திரத்துக்கு அளவு எடுத்துத் தைத்த சட்டை போலக் கச்சிதமாக பொருந்துகிறார். ஜீனிலேயே நடிப்பு கலந்திருக்கிறது. இயக்குநர் சொல்லுவதை உள்வாங்கி சற்றும் மிகைப்படுத்தாமல் மனித உணர்ச்சியின் பல குவியல்களை நமக்குத் திரையில் உடல் மொழியுடன் கூடிய நடிப்பில் வழங்குவதால் இந்தப் படம் தனித்து நிற்கிறது. அவர் தோன்றும் காட்சிகளில் நம் பார்வை வேறு எங்கும் செல்லாமல் கடிவாளம் போட்ட குதிரை மாதிரி அவரிடமே நிற்கிறது. முதல் காட்சியில் ‘பிள்ளையாரப்பா’ என்று மாடுலேஷனில் பேசுவதும், கல்யாண வீட்டுக்குச் செல்லும் போது போகிற போக்கில் துண்டை சும்மா உதறிவிட்டு அக்குள் அடியில் தட்டிவிட்டுப் போட்டுக்கொள்ளுவது, அவர் அண்ணன் மகன் அவருக்குக் கோட் போட்டுவிட்டு காலில் விழும் போது ‘நல்லா இரு நல்லா இரு’ என்று ‘நல்ல்ல்லா இரு’ என்று அவரை தட்டிக்கொடுப்பதில் அவர் காண்பிக்கும் வெறுப்பு எனப் பல இடங்களை வியக்காமல் இருக்க முடியவில்லை..... சில வருடங்களுக்கு முன் ”சார் நீங்க தேசிகனா?” என்று எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தத...

ரோஜாவுடன் பார்த்தசாரதி

ரோஜாவுடன் பார்த்தசாரதி பல வருடங்களுக்கு முன் புகுந்த வீட்டுக்குள் காலடி வைக்கும் புதுமணப்பெண் போல் முகநூலில் நுழைந்த சமயம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பன்னீர் ரோஜாவுடன் பிரமாதமாகக் காட்சி அளித்தார். யாரோ ஓர் அன்பர் அந்தப் படத்தைப் பகிர்ந்திருந்தார். படத்தை ஆராய்ந்ததில் ஓரத்தில் ’Vishnumayam’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. படத்தை யார் எடுத்தார் என்று விசாரித்தேன். யார் என்று தெரியவில்லை. பிறகு சில வருடங்கள் கழித்து ’Vishnumayam’ முகநூல் பதிவரிடம் “உங்கள் படங்கள் அருமை” என்று மெசேஜ் அனுப்பினேன். பதிலுக்கு “மிக்க நன்றி. உங்கள் எழுத்தை நான் விரும்பிப் படிப்பேன் என்றார்” பிறகு அவர் பகிரும் படங்களை ரசித்து “படங்கள் அருமை” என்று இரண்டு வார்த்தைப் பாராட்டுவேன். ஒரு நாள் இருவரும் தொலைப்பேசியில் பேசினோம். அப்போது அவரிடம் அந்த ரோஜா பார்த்தசாரதி படங்களைக் குறித்துச் சொன்னேன். அதைப் பெரிய அளவில் பிரிண்ட் செய்து அறையில் மாட்டிக்கொள்ள ஆசை என்றேன். சந்தோஷமாகக் கேட்டுக்கொண்டார். பிறகு பல வருடங்கள் அவ்வப்போது அவர் படங்களை ’லைக்’ செய்து அவருடைய தொடர்பைப் புதுப்பித்துக்கொண்டேன். சென்ற வருட...

ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அண்ணா

 ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அண்ணா பத்து வயது இருக்கலாம். சென்னை ஐஸ் அவுஸ் அருகில் இருந்த கல்யாண மண்டபத்தில் ஸ்ரீகிருஷ்ண பிரேமி அவர்களுடைய உபன்யாசத்துக்கு என் அப்பா அழைத்துச் சென்றார். நல்ல கூட்டம். கதவு பக்கம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தேன். சுவாரசியமாக எதுவும் இல்லாமல் ஸ்ரீ பக்த மீரா கதையைக் கேட்க ஆரம்பித்தேன். என்னையும் அறியாமல் கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது. ஒரு விதையை மண்ணில் விதைத்தால் முளைக்காது. முளைவிடத் தண்ணீர் சூரிய ஒளி இரண்டும் தேவை. அது போலத் தான் பக்தியும். நாம் விதைகளாக இந்த உலகில் புதைந்து கிடக்கிறோம். ஸ்ரீ கிருஷ்ண பிரேமி போன்ற தண்ணீரும், சூரியன் போன்ற பெருமாள் கருணையும் சேர்ந்தால் தான் பக்தி முளைவிடும். கிருஷ்ணப் பக்தி உண்டாவதற்குக் கோடி ஜன்மம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பார்கள். பக்தி என்பதற்கு definition கோகுலத்துக் கோபிகைகள். இதைப் படிக்கும் போது இன்னும் ஒரு கோடி ஜன்மம் எடுத்து புண்ணியம் செய்ய வேண்டுமே என்று தோன்றும். சுலபமான வழி எதுவும் கிடையாதா ? இருக்கிறது. அது ஸ்ரீ கிருஷ்ண பிரேமி போன்றவர்களின் உபன்யாசத்தைக் கேட்பது. கிருஷ்ணப் பக்தியை என் போன்று பலருக...

பதம் பிரித்த பிரபந்தமும், பெருமாள் பாதம் பிடித்த பி.எஸ்.ஆரும்

பதம் பிரித்த பிரபந்தமும், பெருமாள் பாதம் பிடித்த பி.எஸ்.ஆரும்  உலக புத்தகத் தினம் அன்று எனக்கு ஸ்ரீ பி.எஸ்.ரங்கநாதன் அவர்கள் தயாரித்த ‘பதம் பிரித்த பிரபந்தம்’ புத்தகம் நினைவுக்கு வந்தது. அதைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுத உலகமே அந்தப் புத்தகம் வேண்டும் என்று கேட்டு எனக்கும் கடுகுக்கும் கடிதமும், தொலைபேசியிலும் தொடர்பு கொண்டார்கள். . எழுத்தாளர் கடுகு எனக்குச் சுஜாதா ஆசாரியன் திருவடியை அடைந்த பின் தான் அறிமுகம். 2008ல் ஒரு மெயில் அனுப்பியிருந்தார் உங்களை அன்று சுஜாதாவின் வீட்டில் அடையாளம் தெரிந்துகொள்ளவில்லை என்று எழுதிக் கூடவே அவருடைய போன் நம்பரையும் கொடுத்திருந்தார். அதன் பிறகு அவருடன் பல உரையாடல்கள். மெயில் மூலமாக, நேரில், தொலைப்பேசியில் நிகழ்ந்தது. . முதல் முறை அவரைச் சந்தித்தபோது அவரைச் சேவித்து பதம் பிரித்த புத்தகம் ஒன்று வாங்கிக்கொண்டேன். ஒரு சமயம் என் கதையைப் படித்துவிட்டு “அடுத்த நாள்” என்று எழுதியிருக்கிறீர்கள் அது “மறுநாள்” என்று எழுத வேண்டும் என்று கதையைச் செதுக்கி கொடுத்தார். எப்போது வீட்டுக்குச் சென்றாலும் “பஜ்ஜி இல்லை போண்டா சாப்பிடுகிறீர்களா ?” வேண்டும் என்றால் என...

ஜே.எஸ்.ராகவன் - அஞ்சலி

ஜே.எஸ்.ராகவன் - அஞ்சலி  எழுத்தாளர் சுஜாதா மறைந்தபோது எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது.  அதில்  ‘தமாஷா வரிகள் (304)’ – ’வைகுண்டம் டைம்ஸில்’ சுஜாதாவின் ‘கேள்வி பதில்கள்’ என்று ஒரு நகைச்சுவை பகுதி இணைக்கப்பட்டிருந்தது. கடைசியில் விகடனில் உங்கள் சுஜாதா கட்டுரை படித்தேன், ‘டச்சிங்’ – ஜே.எஸ்.ராகவன் என்று இருந்தது. அதற்குப் பிறகு அவருடன் சில மின்னஞ்சல் பரிமாற்றங்களுடன் எங்கள் தொடர்பு மங்கிப் போய், நான்கு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பெங்களூர் குளிரில் துளிர் விட்டது. ஒரு நாள் காலை தொலைப்பேசியில் “நான் ஜே.எஸ்.ராகவன் பேசுகிறேன். நினைவிருக்கிறதா?  என் பையன் பெங்களூரில் இருக்கிறான். வந்திருக்கிறேன். சந்திக்கலாமா?” என்றார். “நல்லா நினைவு இருக்கிறது சார். பெங்களூரில் எங்கே?” விவரமாக விலாசத்தை சொல்லிவிட்டு “நீங்க எங்கே இருக்கேள் ? வரமுடியுமா?” என்றார். “உங்க ஃபிளாட்டை விட்டு கீழே இறங்கி வந்தால் வாசலில் ஒரு ஃபௌண்டன் இருக்கிறதா?” “ஆமாம்” “பத்து நிமிஷத்தில் நான் அங்கே இருப்பேன். நீங்க ‘C’ பிளாக் நான் ‘A’ பிளாக்” என்றேன். “நான் தமாஷா வரிகள் எழுதி மாம்பலம் டைம்ஸுக்கு அனுப்ப வேண்டும். அதன...

‘சிறுமாமனிசர்’ பாரதி மணி

‘சிறுமாமனிசர்’  பாரதி மணி சுஜாதா மறைவதற்கு சில மாதங்களுக்கு முன் “பாரதி மணி எழுதிய  ‘தில்லியில் நிகம்போத் காட்(சுடுகாடு)’  என்ற கட்டுரையைப் படித்தீர்களா தேசிகன்? எப்பவாவதுதான் இதுபோல நல்ல கட்டுரை கிடைக்கும்” என்றார். ‘பாரதி மணி’ என்ற பெயரை முன்பு கேள்விப்பட்டிருந்தாலும் அறிமுகம் அப்போது தான் கிடைத்தது. சுஜாதா மறைந்தபோது, இந்த நிகழ்வை நான் எழுதிய சுஜாதாவின் அஞ்சலிக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இந்தப் பகுதி அச்சில் பிரசுரம் ஆகவில்லை. சுஜாதாவிற்கு அஞ்சலிக் கூட்டம் ஒன்று நாரத கான சபாவில் நடந்தது. அதில் நான் கலந்துகொண்டேன். கூட்டம் முடிந்த பிறகு பார்வையாளர்கள் வரிசையில் ஓர் ஓரத்தில் திரு பாரதி மணியைப் பார்த்தேன். அவரிடம் சென்று என்னை அறிமுகம் செய்துகொண்டு “சுஜாதா உங்கள் கட்டுரையைப் பாராட்டினார்” என்று கூறியவுடன் அவர் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தார். அந்த நிகழ்வைத் திரு பாரதி மணி, “……..பிப்ரவரி 27-ம் தேதி மறைந்த சுஜாதாவுக்குக் காலம் தாழ்த்தாமல், மார்ச் 2-ம் தேதியே ஒரு நினைவஞ்சலியை நாரத கான சபாவில் உயிர்மை பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்தது. நெகிழ்வான நிகழ்ச்சி....

ஸ்ரீ வர்த்தமான முதலியாண்டான் ஸ்வாமி

ஸ்ரீ வர்த்தமான முதலியாண்டான் ஸ்வாமி  இன்று மத்தியம் வர்த்தமான முதலியாண்டான் ஸ்வாமி திருநாடு அலங்கரித்தார் என்று கேள்விப்பட்டு மனம் கலங்கியது.  இவர் முதலியாண்டான் வம்சம்.  ஒரு முறை ஸ்ரீபெரும்புதூரிலிருந்து முதலியாண்டான் அவதார ஸ்தலமான புருஷமங்கலம் சென்றிருந்தேன். ஸ்ரீ முதலியாண்டான், ஸ்ரீராமானுஜரின் அவதரித்துப் பத்து வருடங்களுக்குப் பின் கிபி 1027ல் பூவிருந்தவல்லிக்கும் திருமழிசைக்கு இடையே புருஷமங்கலம், வரதராஜபுரம் என்ற ஊரில் அவதரித்தவர். இன்று இந்த ஊர் பெயர்களைச் சொல்லிக் கேட்டால் யாருக்கும் வழி சொல்ல தெரியாது. தற்போது நாசரத்பேட்டை என்று இந்த ஊர் பெயர் மாறியிருக்கிறது. ஸ்ரீராமானுஜரின் சகோதரியின் மகனான முதலியாண்டான் உடையவரின் சிஷ்யர்கள்(முதலிகள்) அனைவருக்கும் முதல்வர் என்பதால் முதலியாண்டான் என்று பெயர் பெற்றார். எம்பெருமானுடைய திருவடி ஸ்தானமாக இருந்து அவருக்கு அந்தரங்க கைங்கர்யங்கள் செய்தமையால் எம்பெருமானுடைய திருவடியை முதலியாண்டான் என்றே அழைப்பது இன்றும் வழக்கமாக உள்ளது. எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளியபோது அங்கே அவருக்கு வரவேற்பு அவ்வளவாக இல்லை. மேல்கோட்டை பக்கம் ...

25ஆம் பட்டம் திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி

 25ஆம் பட்டம் திருக்கோவலூர் ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்வாமி  'எம்பெருமானார் தரிசனம்’ என்று நம்பெருமாள் பேரிட்டு நாட்டி வைத்த தரிசனத்தை உலகெங்கும் பரவிட 74 சிம்மாசனாதிபதிகளை ஏற்படுத்தினார் ஸ்ரீராமானுஜர். அதில் ’திருக்கோவலூர் ஆழ்வான்’ ஸ்வாமிகள் ஒருவர்.  ’சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்’ என்று  பொய்கையாழ்வார் அருளியபடி திருக்கோவலூர் சந்நிதி மற்றும் தர்சன நிர்வாகங்களைச் செய்து, பக்தி சிரத்தையுடன் ஆசாரிய பீடமாக விளங்கினார். திருக்கோவலூர் திருக்கோயிலில் உள்ளக் கல்வெட்டு இக்கோயிலை நிர்வாகம் செய்து வந்த திருக்கோவலூர் ஆழ்வான் திருமாளிகை மடத்தைச் சேர்ந்த அடியார்களுக்கு உணவு அளிக்க ஒரு வேலி நிலம் விலைக்கு வாங்கப்பட்டதாகத் தெரிவிக்கிறது. பிறகு நடந்த சமய கலவரத்தில் பல மடங்கள் இடிக்கப்பட்டன. அதில் திருக்கோவலூர் மடமும் ஒன்று. அந்தக் காலத்தில் அங்கே வசித்து வந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள் என்ற  தகவலும் கல்வெட்டில் இருக்கிறது.  பிறகு திருவரங்கத்தில் பெரும் புகழுடன் விளங்கிய ஸ்ரீ வேதவியாச பட்டரை எழுந்தருளிச் செய்து, சமயவாதிகளை வாதத்தில் வென்று, கோ...

கடைசியாக வந்த ‘க்ரேஸி’

கடைசியாக வந்த ‘க்ரேஸி’ 47  நாட்கள் முன் ( மே-1 அன்று) சென்னையில் இருந்தேன். மதியம் வெயிலில் வெளியே போக முடியாமல் பேப்பரை பார்த்துக்கொண்டு இருந்தபோது “CPL” Crazy Premeir League என்று நண்பர் க்ரேஸி மோகனின் நாடகம் கிருஷ்ண கான சபாவில் மாலை 7 மணிக்கென்று அறிவிப்பு இருந்தது.  க்ரேஸி மோகனிடம்  பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டதே என்று அவருக்குப் போன் செய்தேன். பதில் இல்லை. பள்ளி படிக்கும்போது எங்கள் வீட்டில் தினமும் க்ரேஸிமோகன், எஸ்.வி.சேகர் நாடகத்தைத் தினமும் இரவு தூங்க போகும்போது கேட்போம். ”க்ரேஸிதீவ்ஸ் இன் பாலவாக்கம்”, அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மேரேஜ் மேட் இன் சலூன்,மாது பிளஸ் டூ, மீசை ஆனாலும் மனைவி என்ற நாடகன்களின் வசனம் எல்லாம் மன்ப்பாடம். இரவு தூங்க போகும் முன் மிகுந்த மன நிறைவு தந்தது. நானும் அமுதனும் கிளம்பிகொண்டு இருந்தபோது க்ரேஸிஅழைத்தார் “தேசிகன்.. எப்படி இருக்கீங்க… சொல்லுங்க” என்றார். “சார் இன்னிக்கு உங்க டிராமா பார்க்க வருகிறேன்..” “என் சீன் எல்லாம் லேட்டாகத் தான் வருது.. அதனால் நான் கொஞ்ச லேட்டா வருவேன்.. அங்கே பார்க்கலாம்” என்றார். டிராமாவில் இரண்டு இடத்தில் பலத்த க...

பண்டிட் ஜஸ்ராஜ் என்ற இசை

பண்டிட் ஜஸ்ராஜ் என்ற இசை  பண்டிட் ஜஸ்ராஜ் என்றால் எனக்கு யார் என்று தெரியாது.  சென்னையில் ஒரு முறை நமக்குக் கர்நாட்டிக் சிஸ்டர்ஸ் சகோதரர்கள் இசை போதும் என்று இருந்தவனைக் கிருஷ்ண கான சபாவில் ஜஸ்ராஜ் கச்சேரி ஒரு டிக்கெட் இருக்கிறது என்று என்னை இழுத்துக்கொண்டு சென்றார்கள். இந்த ஹிந்துஸ்தானி எல்லாம் நமக்கு எங்கே ரசிக்கப் போகிறது என்று வேண்டா வெறுப்பாகக் கிளம்பினேன். ரஜினி படம் முதல் நாள் முதல் ஷோ மாதிரி உள்ளே நுழைய முடியாத கூட்டம்.  மேடையில் அவர் வந்த உடனேயே மொத்தக் கூட்டமும் எழுந்து நின்றது. தொண்டை சரி இல்லை என்று ஆங்காங்கு கனைத்துக் கொண்டு தான் பாடினார். முதல் பாட்டுப் பாடிய போதே இது வேற லெவல் என்று தெரிந்துகொண்டேன். முதல் பாட்டு முடிந்த பின் மொத்த ஆடிட்டோரியமும் எழுந்து கைதட்டியது. இப்படி ஒவ்வொரு பாடலுக்கும் எழுந்து கைதட்டினார்கள்.  பாசாங்கு இல்லாத எழுத்துபோல் அவர் பாடும் பாடல்கள் பாசாங்கு இல்லாத இசை.  அன்று ஏதோ பிரம்மத்தை அறிந்துகொண்ட திருப்தி ஏற்பட்டது. அதற்குப் பிறகு எந்தக் கர்நாடகச் சங்கீதக் கச்சேரிக்கும் இசை கேட்க போகவில்லை.   பிறகு ஜஸ்ராஜ் காஸட், ...

பித்துக்குளி முருகதாஸ்

இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது. 1981-82 என்று நினைக்கிறேன். என் சித்தி பையனின் உபநயனத்துக்கு சென்றிருந்தேன். குமார போஜனத்துக்கு என்னை உட்கார வைத்தார்கள். என் மனம் முழுவதும் இலையில் இல்லாமல், சற்று நேரத்துக்கு முன் உபநயனத்துக்கு வந்திருந்த ஒருவர் கையடக்க டேப்ரிக்கார்டரின் மீது இருந்தது. அப்போது டேப்ரிகார்டர் புதுசாக வந்திருந்த சமயம். குமார போஜனம் போட்டோவிற்கு போஸ் கொடுத்த பின் ”பசி இல்லை” என்று எழுந்து அந்த டேப்ரிக்கார்டர் மாமாவை தேடி போனேன். “என்ன என்றார்?” “டேப்ரிக்கார்டர்... “ “ஆமாம் டேப்ரிக்கார்டர்.. அதுக்கு என்ன?” “இப்ப போட்டீங்களே அந்த பாட்டு யார் பாடியது?” “எந்த பாட்டு ?” என்று தன் பையை பெருமையாக திறந்து தன் கலக்‌ஷனை காண்பித்தார் அதில் ஏகபட்ட கேஸ்சட்... இதில் எப்படி தேடுவது ? “அலைபாயுதே கண்ணா...” “ஓ அதுவா அது பித்துக்குளி முருகதாஸ்.. “ என்று கேஸ்சட் படத்தை காண்பித்தார். டேப்ரிக்கார்டரை பார்க்காமல் அந்த கேஸ்சட்டை பார்த்தால் அவருக்கு கொஞ்சம் ஏமாற்றம்... தாம்பூலப் பையை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார் ”Lord Krishna - Pithukuli Murugadas" பித்துகுளி என்ற பெயர...

திருச்சி பாப்பு

’திருச்சி பாப்பு’ என்று செல்லமாக அழைக்கப்படும் என் அம்மா ஆசார்யன் திருவடி அடைந்து இரண்டு வாரம் ஆகிறது. டிசம்பர் மாதம், பெனடிரிலுக்கு இருமல் அடங்காமல் மருத்துவரிடம் சென்ற போது “எதற்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்துவிடலாம்” என்றார். எக்ஸ்ரேயைப் பார்த்த போது டாக்டருக்கும் எங்களுக்கும் அந்த அதிர்ச்சி காத்துக்கொண்டு இருந்தது. அதில் ஒரு நுரையீரல் தெரியவில்லை. ”அம்மாவிற்கு வந்திருப்பது நுரையீரல் புற்றுநோய் லாஸ்ட் ஸ்டேஜ்” என்று டாக்டர் சொன்ன போது, தினமும் அலுவலகம் செல்லும் வழியில் ”கேன்சர் ஒரு சாபம் அல்ல குணப்படுத்த முடியும்” என்று எழுதியிருக்கும் அந்த பிங்க் நிற பலகை ஞாபகத்துக்கு வந்தது.

ஆழ்வார்கள் விஜயம்

ஒன்றாம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு ஆழ்வார்கள் அறிமுகமானார்கள். அந்த வயதில், திருப்பாவை முதல் இரண்டு பாடலும், கடைசி இரண்டு பாடலும் மனனம். அப்பாவுடன் சைக்கிளின் முன்சீட்டில் உட்கார்ந்து பயணிக்கும் போது, திருப்பாவை, ஆழ்வார்களின் திருநட்சத்திரம், அவர்களுடைய அவதார ஸ்தலம், அவர்களைப் பற்றிய கதைகள் எல்லாம் சொல்லிக்கொண்டே வருவார். கல்லூரி நாள்களிலும் தொடர்ந்து ஆழ்வார்களின் பாசுரங்களில் உள்ள அழகு, பக்தி பற்றிய பேச்சு, அப்பாவுடன் அவதார ஸ்தல விஜயம் என ஆழ்வார்கள் கூடவே வந்தார்கள். ஸ்ரீரங்கத்தில் ஒரு முறை (இருபது வருடம் இருக்கும்) வைகுண்ட ஏகாதசி பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தில் எல்லா ஆழ்வார்களையும் வரிசையாகப் பார்த்த போது அதுபோலவே வீட்டிலும் சின்னதாக மாடல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அதே மாதிரி மாடல் செய்ய-- கூகிள் இல்லாத காலத்தில்-- ஆழ்வார்கள் அவதார ஸ்தலத்தில் உள்ள உற்சவர் படங்களை சேகரிக்கத் தொடங்கினேன். பதினாறு வருடங்கள் முன்பிருந்தே ஆழ்வார்களின் அவதார ஸ்தலத்தில் உள்ளது போலவே சின்னதாக யார் செய்து கொடுப்பார்கள் என்று தேடத் தொடங்கினேன். ஆழ்வார்கள் கோஷ்டி பல இடங்கள...