Skip to main content

Posts

Showing posts with the label விமர்சனம்

தமில் வாழ்க!

  தமில் வாழ்க! ‘மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்!’ என்ற புதுக்கவிதை வரிகள் ‘சுஜாதா’வால் பிரபலமாகி, பின்னாளில் புத்தகத் தலைப்பாகவே மாறியது. ஆங்கில மொழிக்குக் கிடைக்காத ஒரு பெருமை தமிழுக்குக் கிடைத்திருக்கிறது – தமிழ் ஒரு ‘பெண்’. அதனாலோ என்னவோ, பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளையே இதற்கும் இழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் அவியல் செய்யப் போதுமான தலைப்புகள் கிடைக்கவில்லை என்றால், அவர்கள் கையில் முதலில் எடுப்பது தமிழைத்தான். தமிழுக்கு புடவை கட்டி ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ சர்ச்சை, சுடிதார் போட்டு இந்து எதிர்ப்பு அல்லது மும்மொழிக் கொள்கை என எதையாவது உளறிவிட்டு, கடைசியில் ‘தமில் வாழ்க’ என்று முடித்தால் போதும் – திராவிட சித்தாந்தவாதி என்று சுலபமாக அடையாளப்படுத்திக் கொள்ளலாம்! இப்படிப் பல காலமாக அரசியல்வாதிகளின் வெறும் வாய்க்கு அவலாக இருந்துகொண்டிருக்கிறாள். சொல்ல மறந்துவிட்டேனே, அவ்வப்போது திடீரென்று கருப்பு பெயிண்ட் டப்பாவைத் தூக்கிக்கொண்டு தமிழ் அல்லாத எழுத்துக்களை அழிக்கும் 'அரும்பணி' இருக்கவே இருக்கிறது. இவற்றையெல்லாம் செய்து, தமிழகத்தில் தமிழ் வளர்ந்துவிட்டதா? தமிழகத்தில் தமிழ் வளரவே...

புருஷோத்தம நாயுடுவின் வைணவத் தமிழ்தொண்டு

கற்போரைக் கைப்பிடித்துச் செல்லும் புருஷோத்தம நாயுடுவின் வைணவத் தமிழ்தொண்டு (1) ஒரு சிறுவனின் கதை: நூறு ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் புவனகிரியில் ஒரு சிறுவன், தன் வீட்டுத் தொழுவத்திலிருந்த கன்றுக்குட்டியை யாருக்கும் தெரியாமல் விற்றுவிட்டான். அப்பா எதிர்பார்த்ததைவிட அதிக விலைக்குத்தான் விற்றிருந்தான் என்றாலும், சொல்லாமல் செய்ததால் கோபமடைந்த தந்தை அவனை அடித்து விரட்டினார். வெள்ளாற்றின் மறுகரையில் இருந்த கீரப்பாளையம் கிராமத்திற்கு ஓடிப்போன அந்தச் சிறுவன், அங்கே வசித்த தன் பெரியப்பா வீட்டுக்கு சென்று தஞ்சம் புகுந்தான். பெரியப்பா சிறந்த வைணவ அறிஞர். ஸ்ரீமத் அழகிய மணவாள ராமானுஜ ஏகாங்கி சுவாமிகள் என்பது அவர் திருநாமம். அங்கேயே தங்கி, தன் பெரியப்பாவிடமே தமிழ் இலக்கியத்தையும் வைணவத்தையும் கற்கத் தொடங்கினான். பெற்றோர் எவ்வளவோ அழைத்தும் அந்தச் சிறுவன் மீண்டும் வீட்டிற்குச் செல்லவில்லை. (2) என் சொந்தக் கதை: முப்பது வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்த புதிதில், எழுத்தாளர் சுஜாதாவுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை ஆழ்வார் பாடல்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் திரு. புருஷோத்தம நாய...

ஸ்ரீராமர் என்ற ரக்ஷகன்

ஸ்ரீராமர் என்ற ரக்ஷகன் ஸ்ரீராம ஜன்ம பூமியில் குழந்தையான ’ஸ்ரீராம லல்லா’ எழுந்தருளுவதற்கு பல நூற்றாண்டுகளாக பலர் போராடினர். கடைசியாக அந்த வழக்கு முடிவுக்கு வந்து, பிராணப் பிரதிஷ்டையை டிவியில் தரிசித்த அன்று அதன் முன் விழுந்து சேவித்தது இன்றும் நினைவில் இருக்கிறது. எல்லோர் இல்லங்களிலும் ஒரு குழந்தை பிறந்த சந்தோஷத்துடன் இனிப்பு செய்து, வழங்கி இந்த பாரத தேசமே கொண்டாடியது. அயோத்தியில் ஸ்ரீராமரை சேவிப்பதற்கு முன், சென்னைக்கு சென்று காலணி கூட அணியாமல் வாதிட்ட வழக்கறிஞர் ஸ்ரீ பராசரனை சந்தித்து சேவித்தேன். (“நான் என்ன ஜீயரா? இவ்வளவு முறை சேவிக்கிறீர்கள்”). ’போற்றப் பறைதரும் புண்ணியன்’ என்று ஆண்டாள் கொண்டாடும் ஸ்ரீராமபிரானின் ஆலயத்தை இந்தப் புண்ணிய பூமியில் தரிசிக்க முடிந்ததே நம் மேலையார் செய்த புண்ணியத்தின் பயன். சமீபத்தில் ஒரு தலையங்கத்தில், அயோத்தி ராமர் சந்நிதியின் கருவறை முகப்பில், வால்மீகி ராமாயணத்தில் இல்லாத 'ஸ்ரீராமர் லிங்க பூஜை செய்தார்' என்ற கதைக்குரிய சிற்பம் தவறாக அமைக்கப்பட்டுள்ளது என்று கண்டித்துள்ளார்கள். 'நாம் வணங்கும் ராமரே, தம் ஆலயத்தில் சிவலிங்கத்துக்குப் பூஜை செய்...

காந்தாரா சாப்டர் 1

காந்தாரா சாப்டர் 1  பள்ளியில் படித்தபோது, மலையாளப் படங்கள் ‘பிட்’டாகவும், தெலுங்குப் படங்கள் வெறும் மசாலாவாகவும் மட்டுமே பார்க்கப்பட்டன. கன்னடப் படங்கள் திரைப்படங்களே இல்லை என்று ஒதுக்கப்பட்டன. அவை தமிழ்நாட்டுக்குள் வந்ததில்லை. மற்ற திராவிடப் பிரதேசங்களில் தமிழ்ப் படங்கள் ’வேற லெவல்’ என்று கோலோச்சிக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. ஆனால் இன்று நிலைமை தலைகீழ். சேட்டன்களின் கதைக்களம் எல்லாம் யோசிக்கக்கூட முடியாதவையாக, கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, திரைக்கதையும் கதைச் சொல்லும் விதத்தையும் அடுத்தக்கட்டத்துக்கு நகர்த்தியுள்ளார்கள். தெலுங்குப் படம் ‘பாகுபலி’ வந்த பிறகு ஒரு தனி அந்தஸ்து கிடைத்துவிட்டது. எந்த அந்தஸ்து கிடைத்தாலும், படம் ஆரம்பிக்கும் முன் மங்களகரமான மஞ்சள் எழுத்தில் திருவேங்கடமுடையானுடன் பக்தியுடன் ஆரம்பிக்கிறார்கள். கன்னடப் படங்கள் மெதுவாகத் தவழ்ந்து ‘யூ டர்ன்’ என்ற படம் வந்த போது ‘அட’ என்று சொல்ல வைத்து, ‘காந்தாரா’ வந்த பிறகு ‘அடடா’ என்று சொல்லவைத்தார்கள். இன்று காந்தாராவின் அடுத்த பாகமாக வந்திருக்கும் ‘காந்தாரா சாப்டர் 1’ பாகுபலிக்கே போட்டி என்று பெயர் வாங்கியிருக...

புதிய தலைமுறைக்கு ஓர் அட்வைஸ்

 புதிய தலைமுறைக்கு ஓர் அட்வைஸ் புதிய தலைமுறை என்ற சேனல் அரசு கேபிளிலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்பது செய்தி. இதில என்ன சார் ஆச்சரியம், இதே போல் கடந்த காலங்களிலும் நடந்திருக்கிறது என்று பரவலாக பேசப்படுகிறது. ஏன் இப்படி நடந்தது என்று எல்லோருக்கும் தெரிந்தாலும், எந்த பிரதான ஊடகமும் இதை தைரியமாக சொல்லப் போவதில்லை. சொன்னால் அவர்கள் சேனல் எங்கோ தொலைந்துவிடும்.  தமிழக மொத்த மீடியாவும் இன்று ஜெயா / சன் டிவி என்ற குழுமங்களுக்குள் ஏதோ ஒன்றில் அடங்கிவிடும். அதனால் புதிய தலைமுறை குறித்து எனக்கு வருத்தம் இல்லை. சும்மா வேடிக்கை பார்க்கலாம். இந்தப் பதிவு இன்றைய இந்தியப் புதிய தலைமுறை குறித்து.   ‘அரசு’ கேபிள் நிறுவனம், பெயருக்கு ஏற்றார் போல அரசு நடத்துகிறது. அதனால் மீடியாவின் சிகை அவர்கள் கையில். முடக்கவோ, தொலைந்து போக செய்யவோ முடியும். இதே போல தான் ஆண்டராய்ட், ஆப்பிள், கூகுள், ஜீ.மேயில், வாட்ஸ்-ஆப் போன்ற இன்ன பிற வஸ்துக்களும். கூகுள் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோர் எல்லாம் வெளிநாட்டு அரசு கேபிள் நிறுவனம் போன்றவை. நாளை காலை, கூகுள், ஜீமெயில் இல்லை என்றால் உங்கள் நிலையை யோசித்துப் பாருங்கள்...

1,00,000 டாலர் வீசா - புலம்பெரும் இந்தியர்களின் புலம்பல்

1,00,000 டாலர் வீசா - புலம்பெரும் இந்தியர்களின் புலம்பல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலராக (சுமார் 88 லட்சம் ரூபாய்) உயர்த்தி புதிய மகாளய அமாவாசை அன்று முதல் இது அமலுக்கு வரும் என்ற உத்தரவை வெளியிட்டார். எனக்குப் பெரும் அதிர்ச்சியைத் தரவில்லை. சமீப காலங்களில் மோடியின் ‘நண்பர்’ டிரம்ப், அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோக் குடிக்க, டாஸ்மாக் போலக் கூடுதலாக 10$ கொடுக்க வேண்டும் என்று சொன்னாலும் நம்பக்கூடிய மனநிலைக்கு வந்துவிட்டேன். பையன் அனுப்பிய ‘சிஸ்கோ’ முண்டா பனியனைப் போட்டுக்கொண்டு, மேற்கு மாம்பலத்தில் கோதண்ட ராமன் க்யூவில் என் பையன் ‘சான் ஹோசே’வில் இருக்கிறான் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் அப்பாக்களின் நிலை என்னவாகுமோ என்று தெரியவில்லை.  இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக் கொள்ளக் கொடுக்கும் ‘கேரட்’தான் இந்த H1B விசா. இன்றைய செயற்கை நுண்ணறிவு (AI) மாற்றங்களுக்கு இடையில் இந்த யதார்த்தத்தை இனி எல்லோரும் எதிர்கொள்ள வேண்டும்; வேறு வழியில்லை. H1B விசா வைத்திருப்பவர்கள் தங்கள் பெற்றோர் ஐசியூவில் இருந்தாலும் (இருக...

கம்பன்‌ சில‌ வார்த்தைகள்‌…

கம்பன்‌ சில‌ வார்த்தைகள்‌… ஸ்ரீராமரைக்‌ குறித்து சிலர் பேசிய காணொளிகளைப்‌ பார்க்க‌ நேர்ந்தது. ஒன்று நான்‌ பெரும்‌ மதிப்பு வைத்திருக்கும்‌ திரு. தமிழருவி மணியன்‌ அவர்களின்‌ பேச்சு. அவர்‌ ஓர்‌ ஆத்திகர்‌. பொது வாழ்வில்‌ காமராஜர்‌ போல்‌ எளிமையையும்‌, நேர்மையையும்‌ கடைப்பிடிப்பவர்‌.  ஸ்ரீராமர்‌ சீதையைத்‌ தேடிக்கொண்டு செல்லும்‌ போது சுக்ரீவனைச்‌ சந்தித்து உதவி கேட்கிறார்‌. சுக்ரீவனைச்‌ சந்திக்கும்‌ இடத்தை வால்மீகி எப்படி அமைத்திருக்கிறார்‌? கம்பன் எப்படி கூறியிருக்கிறார் என்பதை விவரிக்கிறார். அவர்‌ கூறியதைச்‌ சுருக்கமாக‌ இங்கே தருகிறேன்‌. ராமனும்‌ லக்ஷ்மணனும்‌ சுக்ரீவனைத்‌ தேடிக்கொண்டு செல்கையில்‌, அனுமனைச்‌ சந்திக்கிறார்கள்‌. அனுமனைச்‌ சந்தித்த‌ போது லக்ஷ்மணன்‌ நடந்த‌ கதையை எல்லாம்‌ சொல்கிறான்‌. இதைக்‌ கேட்ட‌ அனுமன்‌ ராம லக்ஷ்மணர்களைத்‌ தன்‌ முதுகில் ஏற்றிக்கொண்டு சுக்ரீவன்‌ இருக்கும்‌ இடத்தை அடைகிறார்‌. இதே காட்சியைக் கம்பன் இதை மாற்றி அமைத்திருக்கிறார்‌. அனுமனுடன் சந்திப்பு நிகழ்ந்த‌ பின்‌, "நீ போய்‌ சுக்ரீவனை அழைத்துக்‌ கொண்டு வா" என்று கூற‌, அனுமன்‌ ஓடிச்‌ சென்று சுக்ரீவனை அழை...

குழப்பிக் கொட்டின கூழ்

குழப்பிக் கொட்டின கூழ் இது ஒரு அரிய சமையல் குறிப்பு. முதலில் இதை செய்ய தேவையான பொருட்கள் என்ன என்று பார்த்துவிடலாம். சென்னை ஃபில்டர்‌ காபி – தலையில் நுறையுடன், சுண்டி இழுக்கும்‌ நறுமணத்துடன்‌ ஒரு பழைய பாத்திரம்‌ நிறைய‌. ஹைதராபாத்‌ பிரியாணி – தேவையான‌ அளவு‌, அசைவப்‌ பிரியர்களைக்‌ கவரும்‌ வீரியத்துடன்‌ (ரத்தம் சொட்ட சொட்ட) மலபார்‌ பரோட்டா – சில‌ மெல்லிய‌ அடுக்குகளாக‌, சில‌ சமயம்‌ பிரிந்து செல்லும்‌ தன்மையுடன்‌ மைசூர்‌ பாக்‌ – இனிப்புச்‌ சுவைக்கு ஏற்றவாறு‌, கனமான‌ கட்டியாக ஒன்று. வடா பாவ்‌ – ஒரு அசாதாரண‌ தனித்துவமான‌ சுவைக்கு சமையல்‌ கருவிகள்‌: பெரிய‌ அகலமான‌ பாத்திரம்‌(கதிரவன் ஸ்டோர்ஸ்). அனைத்தையும்‌ கலக்க‌ ஒரு பெரிய‌ கரண்டி(LCU பிரண்ட்). மின்சார இண்டக்‌ஷன் அடுப்பு. ஒரு தங்க வாட்ச் ( டைம் பார்க்க). ஒரு பெரிய நாற்காலி (சமையல் முடிந்த உடன் உட்கார ). முழு சமையல் நேரம் - சுமார் 2.50 நிமிடம். செய்முறை. ஃபில்டர் காபியை சற்றே பெரிய பழைய பாத்திரத்தில் ஊற்றவும். நம் சமையலுக்கு ஒரு கிளாசிக்‌ துவக்கத்தைக்‌ கொடுத்து, 'ஆஹா' போட‌ வைக்கும்‌. அடுப்பை மிதமான‌ தீயில்‌ வைத்து, சுமார்‌ 30 நிமி...

அமரன் - ஒரு மகத்தான படைப்பு

  அமரன் - ஒரு மகத்தான படைப்பு கோடம்பாக்கத்துக்கும் காஷ்மீருக்கு வெகுதூரம். எப்போதுமே அது ஒரு ‘long distance relationship’ பொதுவாக நாற்றுப்பற்று படங்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் கண்டுகொள்ளுவதில்லை. இதற்கு முன் வந்த சில நல்ல தேசப்பற்று (ஹிந்தி) படங்களைத் திரையிடக் கூட இல்லை. தமிழ்த் திரையுலகம் செய்த பூர்வ ஜென்மப் புண்ணியம் அமரன் வந்திருக்கிறது. 'பயோபிக்’ எடுப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது. இது மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாறு. மொத்தமாக 31 வருடங்களே நாட்டுக்காக வாழ்ந்து நாட்டுக்காகவே தன் உயிரை நீத்த ஒரு துணிவான ராணுவ வீரனின் கதை. கதை சொல்லும்போது பெயர்களை மாற்ற முடியாது, தேவையில்லாத காட்சிகளைப் புகுத்த முடியாது ஒரு கட்டமைப்புக்குள் படத்தை எடுத்தாக வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகத் தேசிய உணர்வோடு ’ஜெய் ஹிந்த்’ போன்ற வாக்கியங்கள் ஒலிக்கத் தமிழில் கதை சொல்லுவது சவாலான விஷயம். அதைச் செய்திருக்கிறார்கள். இதை எல்லாம் கவனமாகவும் நேர்த்தியாகச் செய்திருக்கிறார்கள். ”India’s Most Fearless True Stories of Modern Military Heroes” என்ற பென்குயின் புத்தகத்தில் முகுந்த் வரதராஜன் பற்றிய ( ...

இந்தியன் - 2 - (பார்க்க ) ஜீரோ டாலரன்ஸ் தேவை

இந்தியன் - 2 - (பார்க்க ) ஜீரோ டாலரன்ஸ் தேவை இந்தியன் - 2 டிரைலர் பார்க்கும் போதே நிச்சயம் ஊத்திக்கும் என்று தெரிந்தது. எப்படி ஊத்த போகிறது என்று பார்க்க இன்று காலை சென்றிருந்தேன்.  படம் ஆரம்பிக்கும் போது பரவாயில்லையே என்று தோன்ற ஆரம்பிக்கும் போது சொதப்பல் ஆரம்பிக்கிறது. பார்த்த காட்சியையே பார்த்துக்கொண்டு இருப்பது போல ஒரு பிரமை ஏற்பட்டு கைக்கடிகாரத்தைப் பார்க்க ஆரம்பிக்க, பெங்களூர் சென்னை ரயில் பேசின் பிரிட்ஜ் முதல் செண்ட்ரல் ஸ்டேஷன் வரை ஊர்ந்து செல்வது போலப் படமும் செல்கிறது. திரைக்கதை என்ற ஒன்று படத்தில் இல்லவே இல்லை. பலர் காட்சிக்குக் காட்சி நடித்துவிட்டுச் செல்கிறார்கள். ஒரு காட்சியுடன் இன்னொரு காட்சி ஒட்டவே இல்லை.  சங்கர் போன்றவர்களுக்கு சுஜாதா இல்லாதது ஒரு ஹேண்டிகேப் என்று இப்படத்தில் மீண்டும் இன்னொரு நிரூபணம் ஆகிறது. படம் முழுவதும் பிராஸ்தடிக் மேக்கப் உள்ளேயே கமல் நடிப்பதால் அவருடைய அரசியல் நிலைப்பாடு போல நமக்கு வெளியே தெரிவதில்லை. படம் ஆரம்பிக்கும் முன் ஆகஸ்ட் வெளியீடு என்று பிரஷாந்த் நடித்த அந்தகன் டிரைலர் போட்டார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு வரும் படம், அதே போல நீ...

ஐந்து நிமிடங்கள் யோசியுங்களேன்!

ஐந்து நிமிடங்கள் யோசியுங்களேன்! கோவிட் வருவதற்கு ஒரு வாரம் முன்  அமெரிக்கா சுற்றுலா விசா வாங்கச் சென்றிருந்தேன். பராக்குப் பார்க்கும் போது ஒன்றைக் கவனித்தேன். எல்லோரும் ஒழுங்கான  உடை, திருத்தப்பட்ட  முகமண்டையுடன், நாற்றம் அடிக்காத ஷூ-சாக்ஸ் கையில் ஒரு ஃபைல் என்று ஒழுங்காக வந்திருந்தார்கள். பெரும்பாலோர் முகத்தில் கனவுகளுடன் பதற்றமாகக் காணப்பட்டார்கள் ( விசா ரிஜக்ட் ஆகிவிடுமோ ?). டோக்கன் நம்பர் கூப்பிட்ட சமயம் சிலர் கை கூப்பி வேண்டிக்கொண்டு சென்றார்கள். அமெரிக்காவிற்குள் போவதற்குத் தடையாக நம்மை அறியாமல் ஏதாவது பாவம் செய்திருப்போமோ என்று பயந்துகொண்டு, கேட்ட வேள்விகளுக்கு எப்படியாவது போக வேண்டும் என்ற துடிப்பில் பதில் கூறினார்கள். இவர்களுடைய அடுத்த இலக்கு பச்சை அட்டை வாங்கி அந்தச் சொர்க்கப் பூமியில் நிரந்தரமாக வாசம் செய்வது தான். அமெரிக்காவுக்குப் போவதற்கே இந்த மாதிரி தயார் செய்துகொண்டால், பரமபதம் செல்ல எப்படி எல்லாம் நம்மைத் தயார் செய்துகொள்ள வேண்டும் ?  ஸ்ரீமத் முக்கூர் அழகிய சிங்கரின் அமுத மொழி ஒன்றில் நம்மைத் தனியாக ஓர் இடத்தில் உட்கார்ந்து கொண்டு ‘இந்த மானிடப் பிறவி...

ராக்கெட்ரி சமாசாரம்

ராக்கெட்ரி சமாசாரம்  2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்துக்கான விருதை ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’ வென்றுள்ளது. இந்தப் படத்தை குறித்து கல்கி கடைசிப் பக்கத்தில் 2022ல் எழுதியது.  நடிகர் மாதவன் நடித்து இயக்கிய ’ராக்கெட்ரி’ படத்தை நானும் என் பையனும் சென்றோம். எப்படிப் பட்ட படம் என்பதைப் பலர் விமர்சனம் செய்துவிட்டார்கள். கல்யாணச் சத்திரத்திலிருந்து தாம்பூலப் பையுடன் வெளியே வருவது மாதிரிப் படத்தின் முதல் பகுதி ‘ஒரே டெக்னிக்கல்’ விஷயம் என்று பலரும் விமர்சித்துவிட்டார்கள்.  படத்தின் முதல் பகுதியில் ராக்கெட் என்ஜின் பற்றி கிட்டத்தட்ட ஓர் ஐஐடி மாணவர் போல  நடிகர் மாதவன் பொறியாளர் வகுப்பு எடுத்துவிட்டார். இடைவெளியின் போது டெஸ்ட் வைத்து அதில் பாஸ் செய்தால் தான் அடுத்த பகுதி படம் பார்க்கலாம் என்று சொல்லிவிடுவாரோ என்று பலரும் பாப்கார்ன் கூடச் சாப்பிடாமல் இருந்தார்கள்.  எழுத்தாளர் சுஜாதா இருந்திருந்தால் நிச்சயம் இந்தப் படத்தில் தன் பங்களிப்பைக் கொடுத்து கடினமான விஷயத்தைச் சாதாரண சோளப்பொரி ரசிகரும் புரிந்துகொள்ளும் விதமாக சொல்லியிருப்பார் என்று தோன்றுகிறது.  ராக்கெட்ரி படத்...

வீரப்பன்: பொய்களுக்கு இடையில் சில உண்மைகள்

 வீரப்பன்: பொய்களுக்கு இடையில் சில உண்மைகள் ஏழு வருடங்கள் முன் கார் ஓட்டிக்கொண்டு பெங்களூரிலிருந்து வயநாடு வழியாகக் கேரளாவுக்குச் சென்றேன். போகும் வழியில் பந்திப்பூர் காட்டைக் கடந்து வரும் வழியில் சாலை குறுக்கே ஒரு பெரிய யானை கடக்க கொஞ்சம் நேரம் காத்திருந்தேன். சத்தியமங்கலம் வந்தபோது செக் போஸ்ட்டில் காரை நிறுத்தினார்கள். எங்கே போகிறேன் போன்ற விசாரிப்புகளுக்குப் பின் பயணத்தைத் தொடர்ந்தேன். என் பக்கத்திலிருந்தவர் “சார் இங்கேதான் ஒரு காலத்தில் வீரப்பன் நடமாடிக்கொண்டு இருந்தான்” என்றார். அந்த அடர்ந்த காட்டை மீண்டும் பார்த்தபோது அதன் நிசப்தம் ஒரு வித பீதியைக் கிளப்பியது. யானை கடந்து போன பந்திப்பூரில்தான் 1994ம் வருடம் க்ருபாகர் சேனனி (Krupakar Senani) என்று இரண்டு பிரபல வனவிலங்குப் புகைப்படக்காரர்களை ‘பெரிய அதிகாரிகள்’ என்று நினைத்து வீரப்பன் கடத்தினான். பதினான்கு நாட்களுக்குப் பிறகு விடுவித்தான். (இருவரும் Birds, Beasts and Bandits - வீரப்பன் பிடியில் பதினான்கு நாட்கள் என்று புத்தகம் எழுதியிருக்கிறார்கள்.) பந்திப்பூர் யானையும், நாங்களும் அன்று பயம் இல்லாமல் காட்டைக் கடந்து சென்றதற்கு...