பெங்களூரில் வருடா வருடம் ’சித்திர சந்தே’ என்று அழைக்கப்படும் ஓவியக் கண்காட்சி கர்நாடகா சித்ரகலா பரிக்ஷத் வருடா வருடம் நடத்திவருகிறது. குமர க்ருபா சாலையை முழுவதும் கண்காட்சிக்காக ஒதுக்கப்பட்டு சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓவியர்கள் பங்கேற்கிறார்கள். சாலை இருபுறமும் மரங்கள் சூழ்ந்திருக்க மக்கள் கூட்டமாக குடும்பத்துடன் வந்து ரசிக்கிறார்கள். காண கண் கோடி வேண்டும் என்று சொல்லுவது இந்த கண்காட்சிக்கு பொருந்தும். மூன்று மணி நேரம் சாப்பாட்டை மறந்து பல சித்திரங்களை பார்த்துக்கொண்டு, கூடவே பொரி கடலை, குச்சி ஐஸ் சாப்பிட்டது இனிய அனுபவம். சின்ன வயது முதல் ஓவியத்தில் ஆர்வம் கொண் ட எனக்கு இந்த கண்காட்சியை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசை, ஆனால் ஒவ்வொரு வருடமும் கண்காட்சி முடிந்த பிறகு மறுநாள் நாளிதழில் வரும் செய்தியை பார்க்கும் போது ‘அடடே’ மிஸ் செய்துவிட்டோம் என்று வருந்துவேன். இந்த வருடம் நினைவு வைத்துக்கொண்டு சென்று வந்தேன். .. எவ்வளவு வண்ணங்கள்...எவ்வளவு எண்ணங்கள் !