குடியரசு தினத்திற்கு சில நாள்கள் முன் ஒரு காலையில் எனக்கு தொலைப்பேசி அழைப்பு வந்தது. பேசியவர் திருமதி. சுஜாதா "தேசிகன், சாருக்கு உடம்பு சரியில்லை, அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஐ.சியூவில் இருக்கார்." "மாமி என்ன ஆச்சு?" "புத்தகக் கண்காட்சி, சிவாஜி திரைப்பட விழாவுக்கெல்லாம் போனதா என்னன்னு தெரியலை, நிமோனியா வந்து, அதுக்கு சாப்பிட்ட மாத்திரைனால கிட்னி affect ஆகி, இப்ப மூச்சுச் திணறல் வந்து ஆக்ஸிஜன் வெச்சிருக்காங்க" "யார் பாத்துக்கரா?" "யாருக்கும் தெரியாதுப்பா. ஏதோ உன்கிட்ட சொல்லணும்னு தோணித்து, சொன்னேன், அவர் தம்பிக்குக் கூட தெரியாது" அந்த வாரம் சென்னை சென்று அவரை அப்பல்லோ மருத்துவமனை ஐ.சி.யுவில் பார்த்தேன். உடம்பு மெலிந்து, குழந்தை போல இருந்தார். குழந்தை மாதிரியே பேசினார். "என்ன தேசிகன் எப்படி இருக்க. இப்ப என்ன கிறுஸ்துமஸ் லீவா ?" "சார் கிறுஸ்துமஸ் முடிஞ்சு, பொங்கல் முடிஞ்சு இன்னிக்கி குடியரசு தினம்" "ஓ. ஆமாம். உள்ளே இருந்ததால ஒண்ணும் தெரியலை. முதல்ல வெளியே வரனும் தேசிகன். இங்கே போர் அடிக்குது. இப்ப இந்த வாக்மென் தான