Skip to main content

Posts

Showing posts with the label விருந்தினர்

பொடிடப்பா – புஷ்பா ராகவன்

இவர் எழுத ஆரம்பித்த போது இவருக்கு வயது 56. தற்போது இவருக்கு வயது 58! இவர் கதைகள் பாக்கியா, குமுதம், சிநேகிதி, ராணி nilacharal.com போன்ற பத்திரிக்கைகளில் வந்துள்ளது. இவர் எழுதிய நாவல் பெண்மணி மாத இதழில் வந்துள்ளது. இவரது சிறுகதைகளை இவரே வானொலியில் வாசித்துக்காட்டியுள்ளார்.  'குழந்தை தொழிலாளர்கள்' பற்றி இவர் எழுதிய கதைக்கு தமிழக அரசு இரண்டாம் பரிசு கொடுத்து கவுரவித்துள்ளது. கர்னாடக சங்கீதம் பிடித்த இவருக்கு எழுத எல்லா ஊக்கமும் தந்தவர் இவர் கணவர் ராகவன். இவ்வளவு எழுதும் திருமதி புஷ்பா ராகவ்ன் படித்தது 8ஆம் பகுப்பு மட்டுமே. இந்த பதிவில் தன் 'nostalgia' நினைவுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறார்...     ( தொடர்ந்து என் வலைப்பதிவில் எழுதுவார் என்று எண்ணுகிறேன்) பொடிடப்பா - புஷ்பா ராகவன் நான் எப்போதாவது  தனிமையில் அமர்ந்திருக்கும் போது  என் இள வயது நினைவுகளில்; மூழ்கிவிடுவேன். இனிமையும்,குறும்பும் நிறைந்த பருவம் அது. எனக்கு எட்டு வயது. எனக்கு கீழ் ஏழு ,ஆறு ,ஐந்து ,வயது நிரம்பிய தங்கை தம்பிகள், பள்ளியில் முழுப்பரிட்சை முடிந்து விடுமுறை வந்துவிட்டால் எங...

பட்டக்காரர் சப்ளை – எஸ்.வி.ராமகிருஷ்ணன்

மொட்டைக் கடுதாசியை தொடர்ந்து மேலும் ஒரு கட்டுரை - பட்டக்காரர் சப்ளை - எஸ்.வி.ராமகிருஷ்ணன் தாராபுரம் போர்டு ஹைஸ்கூலில் வருடத்திற்கு ஒரு முறை எங்கள் (மாணவர்களின்) பார்வையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஒன்று வரும். அதுதான் 'பட்டக்காரர் சப்ளை'. பட்டக்காரர் என்றால் என்னவென்று கொங்கு நாட்டிற்கு வெளியே பிறந்து வளர்ந்தவருக்குத் தெரியாமல் இருக்கக்கூடும். பட்டக்காரர் என்பவர் கொங்கு மண்ணின் பிரதான மைந்தர்களான கவுண்டர்களின் சமூகத்தலைவர் எனலாம். நிலப்பிரபுத்துவ காலத்திலிருந்து வந்த ஒரு பட்டம், பதவி. பழைய கோட்டைப் பட்டக்காரர் நல்ல சேனாதிபதி சர்க்கரை மன்றாடியார் காமராஜர் மந்திரிசபையில் அங்கம் வகித்தது பலருக்கும் நினைவிருக்கலாம். தாராபுரத்தில் இருந்தவர் சங்கரண்டாம்பாளையம் பட்டக்காரர். அவருக்குத் தாராபுரம் அனுமந்தராயர் அக்கிரஹாரத்தில் மாளிகை போன்றதொரு வீடு உண்டு. பட்டக்காரர் அவ்வப்போது அங்கே வந்து போவாரே ஒழிய அவர் வசித்தது சங்கரண்டாம்பாளையத்தில்தான். வங்காளம் போல் நிலப்பிரபுக்களும் ஜமீந்தார்களும் தங்கள் சிற்றூரில் வதியாது நகரங்களிலேயே உல்லாசமாக் காலங்கழிக்கும் வழக்கம் அந்தக் காலத்தில் தமி...

எஸ்.வி.ராமகிருஷ்ணன் கட்டுரைகள் – 0 1

கும்பகோணம் சென்ற போது ஒரு ஹோட்டலில் திரு எஸ்.வி.ராமகிருஷ்ணனை எதேச்சையாக சந்தித்து கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தேன். "நீங்கள் சமீபத்தில் எழுதிய கட்டுரைகளை எனக்கு அனுப்பினால் சந்தோஷப்படுவேன்" என்றேன். மறக்காமல் அவைகளை எனக்கு மூன்று கட்டுரைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைத்தார். என் வலைப்பதிவில் அவைகளை பதிவு செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.  முதலில் 'மொட்டைக் கடுதாசி' மொட்டைக் கடுதாசி - எஸ்.வி.ராமகிருஷ்ணன் சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் கவர்னர் ஜெனரல் டல்ஹெளஸி பிரபு மலிவுத்தபால் முறையை அறிமுகப்படுத்தியதிலிருந்து தொடங்கி இந்தியா முழுவதும் செழித்து வளர்ந்ததொரு பயிர் மொட்டைக் கடுதாசி. சுமார் நான்கு தலைமுறைகளுக்கு (120 வருடங்கள்) ஆயிரக்கணக்கான திருமணங்களை வெற்றிகரமாக நிறுத்தியும் பல்லாயிரக்கணக்கானவர்களின் (குறிப்பாகப் பெண்களின்) வாழ்க்கையை நாசமாக்கியும் அட்டகாசமாகக் கொடிகட்டி பறந்தது இந்தப் பழம்பெரும் institution. பின்னர் பிரதாபம் மங்கத் தொடங்கிய மொட்டைக் கடிதம் இன்று மட்கி மட்கி மடியும் தருவாய்க்கே வந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனாம்? ஆராய்ந்து பார்த்தால் கிடைக்கும் பத...

நேர்மை

சமிபத்தில் படித்த நல்ல பதிவு நண்பர் பிரதீப் எழுதியது .தலைப்பு நேர்மை. இதை தமிழ் கூறும் நல்லுலகம் கவனித்ததா என்று தெரியவில்லை. இதை இங்கு பிரசுரிக்கிறேன். அனுமதி தந்த பிரதீபுக்கு நன்றி. இப்போது கூட லேட் இல்லை நாம் மாறலாம். Rental Reciept, Medical Bill, Savings proof என்று எல்லா officeகளிலும் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் இடத்திலும் மார்ச் 15க்குள் எல்லாவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனங்களை ஒப்பிட்டால் இது கொஞ்சம் சர்வ ஜாக்கிரதையான நிறுவனம் ஆகத் தான் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் அத்தாட்சிகளைப் பெறும் முறையையும் ஒழுங்கையும் வைத்துத் தான் சொல்கிறேன். மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் HRA, Medical Allowanceக்காக ஒரு நயா பைசா வரி கட்டாமல் அனைத்தையும் அடைய நடத்தும் நாடகங்கள் இருக்கிறதே..7 பேர் சேர்ந்து ஒரு வீட்டில் 6,000 வாடகைக்கு தங்கிக் கொண்டு, rent reciept என்றவுடன் ஆளாளுக்கு 6,000 போட்டுக் கொள்வதும், இவனுக்கு அவன் கையெழுத்து இடுவதும், அவனுக்கு இவன் கையெழுத்து இடுவதும் சர்வ சாதாரணம். ...

கல்யாண ஊர்வலம்

கல்யாண ஊர்வலம் - எஸ்.வி.ராமகிருஷ்ணன் [%image(20050921-svr_image1.jpg|375|238|கல்யாண ஊர்வலம்-1)%] ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் கல்யாண ஊர்வலம் என்று ஒரு கண்கொள்ளாக் காட்சி அடிக் கடி காணக் கிடைத்தது, ஆடி மாதம், மார்கழி மாதம் போன்ற சில காலங்களைத் தவிர. கல்யா ணத்துக்கு முன் தினம் ‘மாப் பிள்ளை அழைப்பை’ (ஜான வாசம் என்றும் சொல்வதுண்டு) ஒட்டி மாப்பிள்ளையைத் திறந்த காரில் 1   உட்கார வைத்து ஊர்வலமாக (வழக்குச் சொல்லில் இது சில சம யம் ‘ஊர்கோல’மாகவும் திரிந்தது) அழைத்துச் செல்வார்கள். நன்றாக இருட்டின பின்னர் தான் ஊர்வலம் நடைபெறும். பெண்கள் கலர்கலரான பட்டுப் புடவைகள் சரசரக்க, அவற்றின் ஜரிகையானது கியாஸ் விளக்கின் ஒளியில் பளபளக்க, மல்லிகைப் பூவின் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டு காருக்குப் பின் நடப்பார் கள். கார் இரண்டாவது கியரில் ஆமை வேகத்தில் நகர்ந்துகொண் டிருக்கும். முன்னாலும் பின்னாலும் கியாஸ் விளக்குகளைச் சுமக்க முடி யாமல் சுமந்துகொண்டு கூலிக்காரர் கள் நடப்பார்கள். அது ஒரு பெரிய சைஸ் பெட்ரோமாக்ஸ் விளக்கே. மிகவும் பிரகாசமான ஒளியையும் மண்ணெண்ணை மணத்தையும் ஒருங்கே பரப்பிக...

ஸ்ரீரங்கத்தில் சொக்கப்பானை

இந்த வாரம் விருந்தினர் ஸ்ரீரங்கத்து பெண் லக்ஷ்மியை அறிமுகப் படுத்துவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. லக்ஷ்மி தற்போது ஹைதராபாதில் ஒரு software கம்பெனியில் பணிபுரிகிறார். போன வாரம் "ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதம் நடைபெறும் சொக்கப்பானை பற்றி எழுதுங்களேன்" என்றார். "எனக்கு நேரம் இல்லை நிங்கள் எழுதுங்களேன்" என்று ஜகாவாங்கினே. உடனே பேப்பர் பேனாவை எடுத்து, ராமஜெயம் போட்டு, எழுதி, ஸ்கேன் செய்து, ஈ-மெயிலில் எனக்கு அனுப்பிவிட்டார்! எதையும் மாற்றாமல் ( மாற்ற முடியாது என்பது வேறு விஷயம்!) அப்படியே போடுவதில் ஒரு விதமான அழகு கலந்த nativity இருக்கு என்பதால் அவர் எழுதியதை அப்படியே போட்டுள்ளேன். அன்புடன் தேசிகன் [%popup(20050809-lakshmi_letter_1.jpg|750|1031|Lakshmi Letter ( Page 1 ))%] [%popup(20050809-lakshmi_letter_2.jpg|750|1031|Lakshmi Letter ( Page 2 ))%]      Old Comments from my previous blog. எங்க ஊர்லயும் இந்த சொக்கப்பனை கொளுத்துறது, டயர் கொளுத்துறது உண்டு. ஆனால் சாமியை முன்வைத்தல்ல, (இன்றுவரை, ஏனென்றே தெரியாமல் - அல்லது இவங்க கடிதத்தை படிக்கும்வரை, கார்த்த...

Memories of Dr.TSS Rajan

I am pleased to introduce Professor G.Rangarajan (GR), IIT Madras through my blog this week. Mr.GR has spent his first 25 years in Srirangam and was educated at The High School for boys, Srirangam and later at St.Joseph's College,Trichy. Prof GR can be reached at rangavijaya@yahoo.com Last week Mr.GR has sent me a mail which read ...."A friend and classmate of my father, by name Sri Ramaswamy, donated an autobiography by the late TSS Rajan called Ninaivu Alaigal to me.This contains an account of Srirangam as it was about a century ago.So I have translated the relevant portions into English and have sent you the word file containing this translation.TSS Rajan was a minister in the erstwhile Rajaji ministries holding charge of the portfolios of Health and Hindu Religious and Charitable endowments.He was a congressman who left a lucrative practice as a surgeon in Tiruchy to join the freedom struggle.Earlier he went to England to study medicine and was harassed by the orthodox vai...