கண்ணன் கதைகள் - 10 30 வருடங்களுக்கு முன் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளின் உபன்யாசம் ஒன்றில் பண்டரீபுரத்தில் பாண்டுரங்கனாக அடியார்களின் அன்புக்குக் கட்டுப்பட்டு இருக்கும் விட்டலனை விவரிக்க விவரிக்க கண்களில் கண்ணீர் வர, உடனே பண்டரீபூருக்கு உடனே செல்ல வேண்டும் என்று தோன்றியது. உடனே போக முடியாவிட்டாலும், பதினைந்து வருடங்களுக்கு பிறகு சென்றேன். விட்டலனை ‘தொட்டு’ சேவிக்கலாம் என்பதால் எதிர்பார்ப்பும் ஆவலும் அதிகமாகியது. காரில் சென்ற போது, மாலை ஏழு மணிவரை சூரியன் பிரகாசித்து வழி காண்பித்தது. எட்டு மணிக்கு பண்டரீபுரம் வந்தடைந்த போது வெளிச்சம் சித்ரா பௌர்ணமி உபயத்தால் “கதிர் மதியம்” போலத் தொடர்ந்தது. இரவு ஒன்பது மணிக்கு கியூவில் சென்று நின்றுகொண்டோம். பண்டரீபுரத்தில் இருப்பது ஒரே கியூ தான்; பணம் கிடையாது. திருப்பதி மாதிரி பெரிய கியூ இல்லை என்றாலும் அதே போல் கூண்டும், உட்காரத் திண்ணையும் உண்டு. இன்ஸ்டண்ட் எனர்ஜிக்கு ஐந்து ரூபாய்க்கு ஆரஞ்சு கலர் புளிப்பு மிட்டாய், கூடவே பக்தர்கள் பாடும் அபங்கங்களும் போதும். ஸ்ரீ ஏகநாதர் அவர்கள் அபங்கம் ஒன்றின் பொ...