சேவடி சில குறிப்புகள் திருப்புல்லாணி ஸ்வாமி சந்தமிகு தமிழ்மறை என்ற புத்தகத்தின் சில பகுதிகளைச் சில நாட்கள் முன் பகிர்ந்தார். அதில் திருப்பல்லாண்டு தொடக்கத்தில் ‘செவ்வடி’ என்று அச்சடித்துள்ளதுக்கு அருகில் ‘சேவடி’ என்று பால்பாயிண்ட் பேனாவில் எழுதிய குறிப்பைப் பார்த்தேன். இதைப் பாடபேதம் என்பார்கள். ஸ்ரீ.உ.வே AV ரங்காசாரியார் பாடபேதங்களுக்கு 600 பக்கங்களில் தனிப் புத்தகமே போட்டுள்ளார். வியாக்கியானத்தில் செவ்வடி என்றும், சேவடி பாடாந்தரம் (சேவிக்கும் போது உபயோகப்படுத்துவது) என்று குறிப்பு உள்ளது. செவ்வடி - செவ்விய + அடி அதாவது சிவந்த அடி என்பது உரைகளில் உள்ளது. செவ்விய என்றால் செம்மையான, செம்மை என்ற பொருளிலும் வரும் என்பதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள். சேவடி - செ + அடி - செ என்ற ஒற்றைச் சொல் சிவப்பு என்ற பொருள் தரும் என்று நன்னூல், போன்ற இலக்கண நூல்கள் கூறியிருக்கிறது. ‘சேவடி’ என்ற சொல் ஆழ்வார்கள் எங்கெல்லாம் உபயோகித்துள்ளார்கள் என்று சொல்லடைவு புத்தகத்தைப் பார்த்த போது 26 இடங்களில் வருகிறது. சேவடி (26) :1/4, 47/1, 419/3, 469/2, 583/2, 660/4, 661/...