திரு பாவை துதி - 2 கோதா ஸ்துதி - 2 - கோதையின் குணங்கள் துதிக்கத் தூண்டுதல் வைதேசிக: ச்ருதிகிராமபி பூயஸிநாம் வர்ணேஷு மாதி மஹிமா ந ஹி மாத்ருசாம் தே| இத்தம் விதந்தமபி மாம் ஸஹஸைவ கோதே மௌநத்ருஹோ முகரயந்தி குணாஸ்த்வதீயா|| .2 எளிய தமிழ் விளக்கம் கோதையே! எண்ணிறந்த வேத வாக்கியங்களால் கூட அறிய முடியாது எட்டாத உயரத்தில் இருக்கும் உன் பெருமையை எங்களைப் போன்ற அறிவிலார் துதிகளில் எப்படி அடக்கிவிட முடியும்? இதை நன்கு உணர்ந்து வாய்பேச முடியாமல் இருக்கும் போது, உன் குணங்கள் என் மௌனத்தைச் சிதறச் செய்து, சடக்கென உன்னைத் துதிக்கும்படி தூண்டுகிறது! சற்றே பெரிய விளக்கம் முதலில் திருமங்கையாழ்வாரின் திருக்குறுந்தாண்டகத்தில் இந்தப் பாசுரத்தை மெதுவாகப் படியுங்கள். பேசினார் பிறவி நீத்தார் பேருளான் பெருமை பேசி, ஏசினார் உய்ந்து போனார் என்பதிவ் வுலகின் வண்ணம், பேசினேன் ஏச மாட்டேன் பேதையேன் பிறவி நீத்தற்கு, ஆசையோ பெரிது கொள்க அலைகடல் வண்ணர் பாலே. இதில் ஆழ்வார் சொல்லுவது : ஒரு கோஷ்...