Skip to main content

Posts

Showing posts with the label அரசியல்

தமிழன் என்று சொல்லடா

தமிழன் என்று சொல்லடா ’Her Mother's Killer’ என்ற ஸ்பானிஷ் தொடர் ஒன்றை முன்பு பார்த்திருக்கிறேன். அதில் அரசியல்வாதிகள் பதவிக்கு வருவதற்கு எவ்வளவு கேவலமான விஷயங்களைச் செய்வார்கள் என்று காட்டியிருப்பார்கள். அதனால் இன்று தமிழக அரசியலில் நடந்துகொண்டிருக்கும் விஷயங்கள் எனக்கு வியப்பை ஏற்படுத்தவில்லை. திராவிடக் கட்சிகள் சினிமாவைத் தங்கள் பிரச்சாரக் கருவியாகச் சுதந்திரம் கிடைப்பதற்கு முன்பே பயன்படுத்தத் தொடங்கிய காலத்திலிருந்து தமிழ்நாட்டில் சினிமாவும் அரசியலும் பின்னிப் பிணைந்தது. ‘முன்னேற்றக் கழகம்’ என்ற வார்த்தை கட்சிகளை மட்டும் முன்னேற்றப் பயன்பட்டது. மக்கள் முன்னேறினார்களா ? சமீபத்திய உதாரணம் – அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் இதைச் செய்தார்கள், அதைச் செய்தார்கள் என்று விழா எடுத்தார்கள். அதை வியப்புடன் சினிமாப் பிரபலங்கள் பார்த்துக் கைதட்டினார்கள். வெளிநாடுகளில் அரசுப் பள்ளிகளில் இடம் கிடைப்பது என்பது கனவு. இங்கே அப்படி இல்லை. இன்றும் அந்த அரசுப் பள்ளிகளின் நிலையை ஐந்து வருடத்துக்கு ஒரு முறை அங்கே வாக்களிக்கும் போது பார்க்கலாம்.  வாக்களிக்கும் ஒவ்வொருவரும் அந்த அரசுப் பள்ளிகளின் நிலை...

உங்கள் ஓட்டு யாருக்கு ?

உங்கள் ஓட்டு யாருக்கு ? தமிழகத்தில் நாற்பது தொகுதிக்குத் தேர்தல் என்பதை மறந்து, கோவையில் அண்ணாமலை என்ற ஒற்றை மனிதரின் தேர்தலாகி கோவை இன்று பேசும் பொருளாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிடுவதாக இருந்தது. அவர் அங்கே போட்டியிட்டால் கூட இந்த மாதிரி ஓர் எதிர்பார்ப்பு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. மக்கள் மீது நம்பிக்கை வைத்து பணம் கொடுக்க மாட்டேன் என்று தைரியமாக அடித்துச் சொல்லுகிறார் அண்ணாமலை. அவருடைய அந்த நம்பிக்கையைக் கோவை மக்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். கோவை மக்கள் இன்று ஒட்டுமொத்த தமிழ்மக்களின் பிரதிநிதியாகவிட்டார்கள். நாளைய தமிழகம் நன்றாக விடிய இந்தியாவோ கோவையை எதிர்நோக்கியுள்ளார்கள். கோவையில் பாஜக என்ன நிகழ்த்துகிறதோ அதே தான் தமிழகம் முழுக்க 2026ல் புரட்சியாக வெடிக்கப் போகிறது. அந்த மாற்றத்தின் அலை கோவையிலிருந்து உருவாகக் காத்துக்கொண்டு இருக்கிறது. கோவை மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியைக் கேட்டு ஓட்டுப் போட்டாலே போதும் அண்ணாமலை வெற்றி பெற்றுவிடுவார். சமீபத்தில் ஒரு காணொளியைப் பார்த்தேன். அதில் ஒரு ”ஆட்டோ ஓட்டுநரிடம் உங்கள் ஓட்டு யாருக்கு?” என்...

அரசியல், அவியல், அண்ணாமலை - ஒரு சங்கியின் பார்வையில்...

அரசியல், அவியல், அண்ணாமலை - ஒரு சங்கியின் பார்வையில்... செல்வி ஜெயலலிதா இருந்த வரைக்கும் எப்போதும் அதிமுக கூட்டணிக்குத்  தான் ஓட்டுப் போட்டிருக்கிறேன். 1996’ல் ரஜினி குரல் கொடுத்த போது ஜெ செய்த செயல்களால் சற்று முகம்சுளித்தாலும் அப்போதும் கூட அம்மாவிற்குத் தான் ஓட்டுப் போட்டேன். தமிழகத்தில் நாத்திகம், தேச விரோத,  ஹிந்து துவேஷம், குறிப்பாகப் பிராமணத் துவேஷம் செய்யும் கட்சிகளுக்கு நான் எப்போதும் நான் ஓட்டுப் போட்டதில்லை என்று கூறிக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஏன் என்றால் நான் ஒரு சங்கி!  ஜெ என்னை வசீகரித்த தலைவர். ஒரு பெண் என்றும் பாராமல் பத்திரிக்கைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை ஆபாசமாகத் தூற்றி பத்திரிக்கை அட்டைப் படத்தில் கேவலமாகச் சித்தரித்த போது அவர்களை ஒரு பெண் சிங்கமாக எதிர்கொண்டார். தமிழர் வீரம், ஜல்லிக் கட்டு என்று வீரம் பேசுபவர்கள் கூட, தங்களால் ஒருவரை வீழ்த்த முடியவில்லை என்றால் உடனே அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் வேலோ கத்தியோ இல்லை. பிராமணர்கள் என்றால் அவர்களுடைய பூணூலும் குடுமியையும்,  மற்றவர்கள் என்றால் ஜாதி, இனம் அல்லது இருக்கவே இருக்க...