Skip to main content

Posts

Showing posts with the label டயபட்டீஸ்.

நோ நான்சென்ஸ் டாக்டர்

இரண்டு வருஷம் முன்வேலை நிமித்தமாக, சென்னைக்கு வந்தவுடன் தொண்டை கட்டிக் கொண்டு, ஜுரம் வந்தது. தி.நகரில் பதினைந்து வருஷத்துக்கு முன் எனக்குப் பழக்கப்பட்ட டாக்டர் விஜயராகவனிடம் சென்றேன். கிளினிக் பெரிதாக மாறவில்லை, காத்துக்கொண்டு இருந்தபோது, பலகையில் இரண்டு வரி எழுதியிருந்ததைப் படித்து ஆச்சர்யப்பட்டேன். ‘Sulphonylurea போன்ற டயபட்டீஸ் மருந்துகளைக் கொண்டு வரும் மெடிக்கல் ரெப்களுக்கு இங்கே அனுமதி இல்லை.’ அடுத்த வரி இன்னும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. உங்களுக்கு டயபட்டீஸ் இருக்கா அதை ரிவர்ஸ் செய்யலாம்!” டாக்டரிடம் விசாரித்தேன். ஞாயிற்றுக்கிழமை இதைப்பற்றிப் பேசுவேன். வந்து கேளுங்களேன்” என்றார். ஞாயிறு அவர் பேச்சைக் கேட்டபோது தெளிவு பிறந்தது. வாழ்நாள் முழுக்க மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கூற்றை முழுவதும் நிராகரித்தார். மேலும் – தினமும் காலை பிரட் சாப்பிடுங்கள், இரவு சப்பாத்தி சாப்பிடுங்கள், நிறையப் பழங்கள் எடுத்துக்கோங்க, வாக்கிங் போங்க, தினமும் ஆறு வேளை சாப்பிடுங்கள் போன்ற எல்லாவற்றையும் நிராகரித்தார். அவருடைய இரண்டு மணி நேரம் பேச்சின் சாராம்சம் இதுதான். மனிதன் நூறு வயது வா...