'என் பேர் ஆண்டாள்' கட்டுரை தொகுப்பு வந்துவிட்டது. எல்லோரிடமும் தாங்கள் பார்த்த, படித்த எதையாவது சுவாரஸியமாக சொல்ல வேண்டும் என்ற ஆர்வமும் ஆசையும் இருக்க தான் செய்கிறது. இந்த புத்தகத்தில் உள்ள காட்டுரைகள் அப்படி எழுதியது தான். சொல்லும் போது ( அறிவியல் கட்டுரைகளை தவிர) கொஞ்சம் மிகைப்படுத்தி பொய்யும் சேர்ந்துவிடுகிறது. போன ஜெம்னத்தில் பக்கத்து வீட்டு பூனைக்கு தச்சிமம்மு போட்ட புண்ணியமோ என்னவோ "நல்ல கதை, கட்டுரைகளைப் பார்த்தால் ஆசிரியர் சாவி 'என்னமா கல கல என்று இருக்கிறது!' என்று பாராட்டிச் சொல்லுவார். நானும் அதையே சொல்லுகிறேன் என்று எழுத்தாளர் கடுகு அவர்கள் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளதைப் பார்க்கும் போது, என்னை போலவே அவரும் மிகைப்படுத்தி சொல்பவர் என்று தெரிந்துக்கொண்டேன்!. கட்டுரை தொகுப்பில் என் சொந்த அனுபவங்கள், சுஜாதாவுடன் என் அனுபவங்கள், கொஞ்சம் அறிவியல், பயணக் கட்டுரைகள் என்று வகைப்படுத்தியிருக்கிறேன். அட்டைப்பட ஓவியம் என் மகன் அமுதன். அவனுக்கு என் ஸ்பெஷல் நன்றி!. என் பேர் ஆண்டாள் கட்டுரைகள் பத்து பைசா பதிப்பகம் பக்கம் 240 விலை ரூ 150/= கிடைக்க