Skip to main content

Posts

Showing posts from February, 2018

தீக்குறளை சென்றோதோம்

தீக்குறளை சென்றோதோம் | சுஜாதா தேசிகன் ஆண்டாள் சம்பந்தமாக வைரமும் முத்துவுமாக இரண்டு சம்பவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். சம்பவம் 1: அனந்தாழ்வான் ஸ்ரீராமானுஜரின் பிரதான சீடர்களில் ஒருவர். ஸ்ரீராமானுஜரின் ஆசையைப் பூர்த்தி செய்ய, திருமலை திருவேங்கடப் பெருமாளுக்குப் புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார். ஒரு நாள் அவருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை சேவிக்க வேண்டும் என்று தோன்றியது. திருவேங்கமுடையானிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அவரும் “சரி” என்று உத்தரவு கொடுத்தார். அனந்தாழ்வான் உடனே அடியார்களுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தடைந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூர் குளத்தில் நீராடிவிட்டு மற்ற அடியார்கள் ஆண்டாள் நாச்சியாரை சேவிக்க உள்ளே சென்றபோது, கோயிலில் அனந்தாழ்வானைக் காணவில்லை. அவர்கள் அவரைத் தேடிக்கொண்டு திரும்ப வந்தபோது அனந்தாழ்வான் குளத்திலேயே கையைவிட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தார். “ஏதாவது தொலைத்துவிட்டீரா?” என்றார்கள் உடன் வந்தவர்கள். “இல்லை.. இங்கேதான் ஆண்டாள் தினமும் குளித்திருப்பாள். அவள் தேய்த்துக்கொண்ட மஞ்சள் ஏதாவது கிடைத்தால் திருவேங்கடமுடையானுக்குப் பரிசாகக் கொடு

ஸ்ரீ திருகுருகை காவலப்பன்

திருகுருகை காவலப்பன் 1914ஆம் வருடம் பதிப்பித்த ஐந்து அணா விலையுள்ள புத்தகத்தில் இரண்டு வரி இப்படி இருந்தது. “குருகை காவலப்பன் சன்னதி, ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து 7 மைல். இங்கிருந்து காட்டுமன்னார் கோயில் 8 மைல்”  2013ல் காட்டுமன்னார் கோயில் சென்ற போது இந்தத் தகவல் அடியேனுக்குத் தெரியாது. இதற்காகவே மீண்டும்  காட்டுமன்னார் கோயில் செல்ல வேண்டும்  ’குருகை காவலப்பன்’ என்ற பெயர்  எங்கோ கேட்ட பெயராக இருக்கிறதே என்று குழம்ப வேண்டாம். இவர் ஸ்ரீமத் நாதமுனிகளின் அபிமான சிஷ்யர். அவதார ஸ்தலம் திருக்குருகூர்.  ஸ்ரீமத் நாதமுனிகளுக்கு 11 சிஷ்யர்கள் அதில் முக்கியமான இருவர் உய்யக்கொண்டார் மற்றும்  குருகைக் காவலப்பன்.  குருகைக் காவலப்பன் திருக்குருகூரில் தை, விசாகத்தில் அவதரித்தவர். பெரும் செல்வந்தரான இவர் உய்யக்கொண்டார் மூலம் நாதமுனிகளை ஆச்ரயித்து அவராலே பஞ்ச சமஸ்காரம் செய்யப் பெற்று ஸ்ரீவைஷ்ணவர் ஆனார்.  குருகைக் காவலப்பன் பற்றி  ஐதீகத்திலும், பின்பழகிய பெருமாள் ஜீயர் தொகுத்த வார்த்தா மாலையில் குறிப்பு இருக்கிறது. மற்றபடி அவர் வாழ்க்கை வரலாறு போன்றவை இல்லை.  ஸ்ரீமந்நாதமுனிகள் சரமத்திருமேனியை நீத்த இடத்தில் (

கூரத்தாழ்வான் என்ற பெரியார்

கூரத்தாழ்வான் என்ற பெரியார் சென்ற வாரக் கடைசியில் கூரம் சென்று கூரத்தாழ்வானின் திருநட்சத்திரத்துக்கு ஆழ்வானைச் சேவிக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, சில காரணங்களால் அது முடியாமல் போனது. வார்த்த மாலை படித்துக்கொண்டு இருந்த போது ஒரு விஷயம் கண்ணில் பட்டு மன அமைதியைக் கொடுத்தது. அது என்ன என்பதைப் பற்றி கட்டுரையின் நடுவில் சொல்லுகிறேன். வழக்கமாகக் கோயிலுக்குள் நுழையும் போது அமுதனிடம் துவாரபாலகர்களை காண்பித்து ”இவர்கள் யார் ?” என்று கேட்பேன். “ஜெயன் விஜயன்” என்று பதில் சொல்லுவான். அதே போல உடையவர் சன்னதிக்குள் நுழையும் போதும் ஒரு கேள்வி கேட்பேன். அவனும் “கூரத்தாழ்வான், முதலியாண்டான்” என்பான். எப்படி கண்டுபிப்பது என்று கேட்டால் “தாடி வைத்தவர் கூரத்தாழ்வான்” அடுத்தவர் முதலியாண்டான்”. சென்ற முறை சென்ற போது பதிலை சொல்லிவிட்டு “கூரத்தாழ்வான் மட்டும் ஏன் தாடி வைத்துக்கொண்டு இருக்கிறார் ஏன் ?” என்று என்னிடம் கேள்வி கேட்க அதற்குப் பதில் தெரியாமல் முழித்தேன். ஸ்ரீரங்கம், ஸ்ரீபெரும்புத்தூர் என்ற பல திவ்ய தேசத்தில் உடையவர் சன்னதிகளிலும் இரண்டு பக்கமும் சித்திர ரூபத்தில் ஆழ்வானையும

திருநாராயணபுரத்து ஆனைச்சாத்தன்கள்

திருநாராயணபுரத்து ஆனைச்சாத்தன்கள் திருநாராயணபுரம் என்றால் உடனே நம் நினைவுக்கு வருவது - செல்லப்பிள்ளை, தமர் உகந்த மேனி தான். திருச்சி தொட்டியம் பக்கம் ஒரு திருநாராயணபுரம் இருப்பது சில வருடங்களுக்கும் முன் தான் அடியேனுக்குத் தெரியவந்தது. காரணம் பிள்ளை திருநறையூர் அரையர். உடனே போய் பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும், இந்த வருடம்(26.1.2018) குடியரசு தினத்துக்கு தான் அந்த வாய்ப்பு கிடைத்தது. திருச்சி - தொட்டியம் திருநாராயணபுரம் என்று கூகிளில் தேடினால் இரண்டு வழிகளைக் காண்பிக்கும்.எந்த வழியைத் தேர்ந்தெடுத்தாலும் கோயில் வாசலுக்குக் கொண்டு சென்று விட்டுவிடுகிறது. வழி எங்கும் தென்னை மரங்கள் மொட்டையாக காட்சி அளிக்க நடுவில் சந்தேகம் வந்து “திருநாராயணபுரம்” என்று வழி கேட்டால் “வளைவு வரும்..அதுக்குள்ளே போங்க” என்று எல்லோருக்கும் இந்தக் கோயிலுக்கு வழி சொல்லுகிறார்கள். சுமார் பதினோரு மணிக்குக் கோயிலில் யாரும் இல்லை. கோயிலுக்குள் செல்லும் போது, அங்கே இருந்த ஒரு அம்மா கம்பத்தடி ஆஞ்சநேயர் இவர் சேவித்துவிட்டு போங்க என்றாள். இப்பகுதியில் வசிக்கும் கிராமத்து மக்கள் தங்களுக்கு ஏதாவது பிர

ஊட்டத்தூர் ராமர்

ஊட்டத்தூர் ராமர் பகல் பத்து ஸ்ரீரங்கம் நம்பெருமாளைச் சேவித்துவிட்டு ’கனைத்து இளம்’ திருப்பாவை பாசுரத்துக்கு ’மனதுக்கு இனியானான’ ஸ்ரீராமரை பற்றி என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டு இருந்த சமயம் அந்தத் தொலைப்பேசி அழைப்பு வந்தது. “அடியேன் தாஸன் என்று மிகப் பவ்யமாக ஆனால் பரபரப்பாக “இப்ப பேசலாமா ?” என்றது மறுமுனை “உங்க பேர் என்ன ?” “ஸ்ரீநிவாசன்…... “ “சொல்லுங்கோ” “பல திவ்ய தேசம் சென்று உங்கள் அனுபவம் பற்றி எழுதுவதை எல்லாம் தவறாமல் படிப்பேன்…ஒரு விண்ணப்பம்…. “ என்று தயங்கி ஒரு நிமிஷத்தில் சொல்லி முடித்தார். “திருச்சி - சென்னை போகும் வழியில் பாடாலூரில் மிகப் பழமையான ராமர் கோயில் இருக்கு. ஏழாம் நூற்றாண்டு என்கிறாகள். வைகுண்ட ஏகாதசிக்குப் போனேன் ஸ்வாமி என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர் தான் கோயில் இருந்தார்கள்.. கஷ்டமா இருந்தது.... இந்தக் கோயில் பற்றியும் பற்றி எழுத வேண்டும்.. நிறையப் பேர் அந்தக் கோயிலுக்கு வர வேண்டும்.. ஏதாவது செய்யுங்கள்” கோயில் பற்றி கூகிளில் தேடினேன். தகவல் கிடைக்கவில்லை. எனக்குத் தொலைப்பேசியில் அழைத்தவரைத் தொடர்பு கொண்டேன். அவர் அனுப்பிய SMS “Sr