காந்தாராவும் காப்பியும் பல வருடங்கள் முன் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். சேர்ந்த பத்தாவது நாள் கொரியாவிற்கு அனுப்பினார்கள். போகும் போது என் பாஸ் பெரிய நிறுவனம் புதிதாக ஒன்றைத் தயாரிக்க போகிறார்கள். அதன் விவரக்குறிப்புகளை ஒழுங்காக எழுதிக்கொண்டு வா என்று அறிவுரையுடன் பெட்டிப் படுக்கையுடன் கிளம்பினேன். கொ(பெ)ரிய மேலதிகாரியைச் சந்தித்தேன். ”உங்களுடைய தயாரிப்பு எப்படி வேண்டும் அதைக் குறித்து சொல்லுங்கள்” என்று குறிப்பை எழுத புத்தகத்தை திறந்தேன். அவர் என் கையில் டேபிள் மீது இருந்த ஒரு பெரிய புத்தகத்தைக் கொடுத்து, இதே மாதிரி ’ஈயடிச்சான் காப்பி’ செய்து கொடுங்கள் என்று ஐந்து நிமிடத்தில் மீட்டிங்கை முடித்துக்கொண்டார். அவர் கொடுத்தப் புத்தகம் பெரிய அமெரிக்க நிறுவனத்தின் தொழில்நுட்ப விவரக்குறிப்பு. ”இதை அப்படியே கா.அடித்தால் பிரச்சனைகள் வராதா ?” போன்ற கேள்விகள் என் மனதில் எழுந்தது. அவர்களிடம் கேட்டேன். நீங்கள் செய்து கொடுங்கள் பிறகு நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றார்கள். செய்து கொடுத்தோம். அதில் அவர்கள் சிற்சில மாற்றங்கள் செய்து சில புதிய அம்சங்கள் சேர்த்து புதிய தயாரிப்பு