Skip to main content

Posts

Showing posts with the label ஆழ்வார்கள்

பெரியாழ்வார் என்கிற பெரிய ஆழ்வார்!

பெரியாழ்வார் என்கிற பெரிய ஆழ்வார்! உற்சவத்தின் போது நாயந்தே என்று சொல்லுவதைக் கேட்டிருப்பீர்கள். அது என்னவாக இருக்கும் என்று யோசித்ததுண்டு. அதை கடைசியில் சொல்லுகிறேன். இப்போது பெரியாழ்வாரை சேவிக்க ஸ்ரீவில்லிபுத்தூருக்கு செல்லலாம். ஆழ்வார் பெரிய ஆழ்வாராக இருப்பார் என்று நினைத்து நாம் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்றால், கைக்கு அடக்கமாகச் சின்ன ஆழ்வாராகக் காட்சியளிக்கிறார். பெரியாழ்வார் என்று சொன்னவுடன் நமக்கு நினைவுக்கு வருவது எது? பல்லாண்டு, ஆண்டாளின் தகப்பனார், விஷயம் தெரிந்தவர்களுக்கு ‘பொங்கும் பரிவு’ என்ற சொல். இன்றைய பெரியாழ்வார் திருநட்சத்திர நன்னாளில் மேலும் விஷயங்களைப் பார்க்கலாம். ஒரு அன்பர், “சரணாகதியில் பெரிய பெருமாள் திருவடிகளைப் பற்றுகிற மாதிரி திருவேங்கடமுடையான் திருவடிகளையும் மனதில் கொள்ள வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்” என்று சொல்லியிருந்தார். உண்மைதான். “அடியேன் உன் அடி கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்று திருவேங்கடமுடையான் திருவடிகளைத்தான் ஆழ்வார்களில் தலைவரான நம்மாழ்வாரே சொல்லியிருக்கிறார். அமலனாதிபிரானில் “விரையார் பொழில் வேங்கடவன் நிமலன் நின்மலன் நீதி...

பேயாழ்வார் பிறந்த இடம்

பேயாழ்வார் பிறந்த இடம் திருக்கண்டேன் பொன் மேனி கண்டேன் திகழும் அருக்கன் அணி நிறமும் கண்டேன் செருக் கிளரும் பொன் ஆழி கண்டேன் புரி சங்கம் கைக் கண்டேன் என் ஆழி வண்ணன் பால் இன்று - பேயாழ்வார் அருளிய மூன்றாம் திருவந்தாதி என் மகன் ஐந்தாவது படிக்கும் போது அவனுக்கு ஆழ்வார் கதைகளைச் சொல்லி வைத்தேன். ஒரு நாள் அவன் புத்தகப் பையைப் பார்த்த போது அதில் ஏகப்பட்ட காகிதங்களில் ’ஆழ்வார் கதைகள்’ என்ற தலைப்பில் முதலாழ்வார்கள் கதை காமிஸ்க் வடிவில் வரைந்திருந்தது கண்ணில் பட்டது. ( ஒரு பக்கத்தைத் தந்துள்ளேன்). சமீபத்தில் தோளுக்கு மேல் வளர்ந்து கல்லூரி செல்லும் வயதில் அவனுடன் ஒரு விடியற்காலை சென்னையைச் சுற்றி நடந்த போது, முன்பு அவன் வரைந்த காமிக்ஸ் வரைபடத்தைப் பற்றி பேச்சு வந்தது. என் கைப்பேசியில் அவன் வரைந்த அப்படத்தைக் காண்பித்தேன். அதைப் பார்த்துவிட்டு அவன் கேட்ட கேள்வி “பேயாழ்வார் மைலாப்பூரில் தான் பிறந்தாரா?. பிறந்த இடம் இன்னும் இருக்கிறதா?’ ‘இருக்கிறது’ என்று சுருக்கமாகப் பதில் சொன்னேன். ‘இப்போது போய் பார்க்கலாமா?’ உடனே ஓர் ஆட்டோவை பிடித்து மைலாப்பூர் சென்றோம். பேயாழ்வார் திருமஞ்சனக் கட்டியத்தின் போத...

சடகோபன் அருள்

சடகோபன் அருள் மதுரகவி ‘கண்ணி நுண்சிறுத்தாம்பில்’ மூன்று இடங்களில் சடகோபன் என்ற சொல்லை உபயோகிக்கிறார். சடகோபன் நம்பி என்று இரண்டு இடத்திலும் ஒரு இடத்தில் ‘சடகோபன் அருளையே’ என்கிறார். ‘சடகோபன் அருள்’ என்றால் என்ன ? நாதமுனிகளுக்குச் சடகோபன் அருளியதால் தான் இன்று நமக்கு நாலாயிரமும் கிடைத்தது. தற்காலத்தில் திரு.உ.வே.சா தமிழ் ஓலைகளைச் சுவடிகளைத் தேடிக்கொண்டு ஆழ்வார்திருநகரியில் மனம் உருகி ஆழ்வாரை வேண்டிக்கொண்டதால் அவருக்கு வேண்டியது கிடைத்தது ( இதைப் பற்றித் தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன் ). அதே போல் யோகா ஆசான் திரு கிருஷ்ணமாச்சாரியார் ஆழ்வார்திருநகரியில் சம்பந்தத்தால் அவருக்கு யோக ரகசியம் கிடைத்தது. ( இதைப் பற்றியும் அடியேன் தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன்). பல வருடங்கள் முன் லிப்கோ ஸ்தாபகத்தார் நாதமுனிகள்போலப் பல ஆயிரம் முறை கண்ணி நுண்சிறுத்தாம்பு அனுசந்திக்க முடிவு செய்து ஒரு குழுவாக அதைச் சேவிக்க ஆரம்பித்தார்கள். அவர்கள் சேவித்துக்கொண்டு இருக்கும் இடத்துக்கு. அருகில் ஒரு கல்யாண மண்டபம். விழாக்கோலமாக இருக்கக் கோயில் மாலை பிரசாதமாக வருகிறது. ஏதோ காரணம் கல்யாணம் நின்றுவிட்டது. கோயில் ம...

(4) நம்பெருமாளும் நம்மிராமானுசனும்

 (4) நம்பெருமாளும் நம்மிராமானுசனும்  ஆலவந்தார் தன் வாழ்நாள் குறுகியுள்ளது என்பதை உணர்ந்து, இளையாழ்வாரை காஞ்சியிலிருந்து அழைத்து வாரும் என்று பெரியநம்பியை நியமித்தார். நம்பியும் காஞ்சிக்கு உடனே புறப்பட்டு,  ராமானுஜர் வரும் வழியில் ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்தினத்தை இளையாழ்வார் காதில் விழுமாறு ஓதினார். அதில் பொதிந்துள்ள ஆழமான அர்த்த விஷேசங்களை அறிந்த ராமானுஜர் “இவை யார் அருளியது? அவரை நான் காண முடியுமா ?” என்று கேட்க, நம்பியும் “ஆளவந்தார் அருளியது, அவரை காண இப்போதே கிளம்பலாம் என்று அவரை அழைத்துக்கொண்டு திருவரங்கம் புறப்பட்டனர்.  ஆனால் பெரிய பெருமாளின் திட்டம் வேறாக இருந்தது. அந்தத் திட்டத்தை சற்று பார்க்கலாம்.  பெரிய நம்பியும், இளையாழ்வாரும் திருவரங்கம் நுழைய, ஆளவந்தார் பரம பதித்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து மனம் வருந்தினர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என்று இருவரும் புலம்பினர். அச்சமயம் இளையாழ்வார் ஆளவந்தாருடைய விரல்கள் மூன்று மடங்கியிருப்பதைக் கண்டு, அவருடைய ஆசைகளை நிறைவேற்றுவேன் என்று சபதம் செய்ய, மடங்கிய கைவிரல்கள் நிமிர்ந்தன. தன்னால் ஆ...

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா !

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா ! உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் குறளை எடுத்துக்காட்டாக நாம் பல காலமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.  இப்படியொரு நண்பனைப் பார்ப்பதோ அல்லது இப்படியொரு நண்பனாகவோ இருப்பது அரிது. காரணம் சுயநலம்.    ’தோழன்’ என்ற சொல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் தான் வருகிறது.  திருமங்கை ஆழ்வார் பாசுரம். பாசுரம் உங்களுக்குத் தெரிந்தது தான்.   ஏழை, ஏதலன் கீழ்மகன் என்னாது   இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து  மாழை மான் மட நோக்கி உன் தோழி   உம்பி எம்பி என்று ஒழிந்திலை  உகந்து  தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற    சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட  ஆழி வண்ண! நின் அடியிணை அடைந்தேன்    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே! குகன் தான் அறிவில்லாதவன், கொலைத்தொழில் புரிகின்றவன், நீச ஜாதியில் பிறந்தவன் என்று தன் தாழ்வுகளைச் சொல்ல நினைப்பதற்கு முன்பே, அவற்றை எல்லாம் என்னாது இரங்கி ஸ்ரீராமர்  ‘உகந்து தோழன் நீ எனக்...

சிங்கமாய தேவ தேவன்

 சிங்கமாய தேவ தேவன் நரசிம்ம அவதாரம் என்பது நரசிம்ம பிரபாவமா ? அல்லது பிரகலாதன் சரித்திரமா ? என்ற கேள்விக்கு என்றுமே பதில் கிடையாது. நரசிம்மரிடம் கேட்டால் “ என் பக்தனுக்கு நான் எப்போதும் கட்டுப்பட்டவன். அதனால் இது என் பக்தனான பிரகலாதனின் கதை ” என்பார். பிரகலாதனோ ” தனக்காக இரணியன் சொல்லும் தூணிலிருந்து உடனே வந்தாக வேண்டுமே என்று சர்வ வல்லமை மிக்க எம்பெருமானே ஒரு நொடி கலங்கினார். தன் பக்தனுக்கு அருள் மழையால் மூழ்கடித்து  அவன் குண நலன் எவ்வளவு மகத்தானது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது அதனால் இது நரசிங்கனின் பிரபாவம் ” என்பான். இவர்களுடைய பிரபாவத்தை பேச ஆயிரம் நாப்படைத்த ஆதிசேஷனாலும் முடியாத விஷயத்தை ஸ்ரீ நரசிம்மர் அருள் இருந்தால் மட்டுமே முடியும் என்பதை ஸ்ரீராமானுஜர் காட்டிக் கொடுத்தார். சுமார் ஆயிரம் வருடம் பின்னோக்கி செல்ல வாசகர்களை அழைக்கிறேன். ஸ்ரீ வைஷ்ணவச் சம்பிரதாயம் எங்கும் பரவி வளர வேண்டும் என்று ஸ்ரீராமானுஜர் ‘ அறியக் கற்று வல்லார் வைட்ணவர் களைக் கொண்டு 74 சிம்மாசனாதிபதிகளை நியமித்தார். இந்த எழுபத்து நான்கு சிம்மாசனாதிபதிகளுக்கும் அவர்களுடைய நித்திய ஆராதனைக்...