திருப்பதிக்கு போக வேண்டும் என்று மனைவி சொன்ன போது அஜித் படம் என்று நினனத்துக்கொண்டு "அதுக்கு என்ன போயிட்டு வந்தால் போச்சு" என்றேன். "கீழ் திருப்பதியிலிருந்து மேலே நடந்து போகணும்" என்றதும், எனக்கு அடிவயிறு கலங்கியது. இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் "நான் நடந்துடுவேன் உன்னால் நடக்க முடியுமான்னு பார்த்துக்கோ" அந்த பிரசித்திபெற்ற பயணம் இரண்டு வாரத்துக்கு முன் நடந்தது. பெங்களூரிலிருந்து KSRTC volvo பேருந்தில் இரவு 11:00 மணிக்கு குடும்பத்துடன் கிளம்பினோம். நாலுமணிக்கு நல்லா தூங்கும் போது "கோவிந்தா கோவிந்தா" என்று பின் சீட்டில் இருந்தவர் பக்தி பரவசத்தால் சத்தம் போட திருப்பதி வந்து சேர்ந்தோம். திருப்பதிக்கு வரும் கூட்டம் ஒரு நாளைக்கு 100,000 மேல் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ரோம், ஜெருசலம், மெக்கா விட இது அதிகம். நாங்கள் சென்ற தினம் எங்களையும் சேர்ந்து 100,002.5 இருந்திருப்பார்கள் (குழந்தைக்கு அரை டிக்கேட்) [%image(20060730-top_view_gopuram.jpg|150|112|Top view)%] பேருந்து நிலையத்திலிருந்து ஒரு ஆட்டோ வைத்துக்கொண்டு மேல் திருப்பதிக்கு