Skip to main content

Posts

Showing posts from January, 2007

பரமபத சோபானம்

[%image(20070125-paramapadam.jpg|329|400|paramapadam)%] ஒரு நாள் விஜயமாக திருச்சி சென்றிருந்தேன். வைகுண்ட ஏகாதசி முடிந்து ஸ்ரீரங்கத்தில் கூட்டம் கம்மியாக இருந்தது. ரெங்க விலாஸ் கடைகளில் கலர் பரமபதம் லேமினேட் செய்து விற்பனை செய்கிறார்கள். ( விலை 7/= ). சின்ன வயசில் அப்பா எனக்கு வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் சேவித்துவிட்டு வரும் வழியில் இந்தப் படம் மற்றும் தாயக்கட்டை வாங்கித் தருவார். அப்போது எல்லாம் சிகப்பு, கருப்பு அல்லது நீல நிறத்தில் இருக்கும். அந்தக் காலத்தில் டிவியின் தாக்கம் அதிகம் கிடையாது; அதனால் இதை விளையாட முடிந்தது. இப்போது எவ்வளவு பேருக்குப் பொறுமை இருக்கும் என்று தெரியாது. முதலில் தாயம் போட்டு ஆரம்பித்து, பிறகு ஏணிமேல் ஏறி, பாம்பின் வால் வழியாக இறங்கி கடைசியில் தாயமாகப் போட்டு போட்டு சொர்க்கம் செல்ல வேண்டும். சில சமயம் விளையாட்டு முடியாமல், அடுத்த நாளுக்கும் தொடரும். தற்போது வந்திருக்கும் படம் நான் சிறிய வயதில் பார்த்த படம் இல்லை. எல்லாம் மாறிவிட்டது, ஏணிகள் இடம் மாறிவிட்டது, பாம்புகள் சிரிக்கின்றன. பரமபத விளையாட்டு எல்லோருக்கும் புரியும்படி, நல்ல குணங்களான தருமம், நீதி,

காலச்சுவடு முதல் பஞ்சுமிட்டாய் வரை (Book Fair 2007)

புத்தகக் (கண்)காட்சிக்கு பொங்கல் அன்று சென்னை சென்றிருந்தேன். காலை 11 மணிக்கு, கூட்டம் அதிகமாக இருக்காது என்று நினைத்தேன். ஆனால் நான் போன சமயம் அப்படியில்லை; நுழைவு சீட்டு வாங்குவதற்கே க்யூ இருந்தது. முதலில் விகடன் பிரசுரம் இருந்தது. தீபாவளி பட்டாசு கடை போல் கூட்டம் அலை மோதியது. எனக்கு வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு வெளியே வருவதே ஒரு பெரிய சாதனையாக இருந்தது. அதிகம் விற்பனையானவை - கற்றதும், பெற்றதும், மதன் ஜோக்ஸ், ஓ-பக்கங்கள். பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் 4000/= முன் பதிவு செய்தால் 1999 என்று தூள் பறந்தது. விகடனில் மொத்தம் 113 தலைப்புகள் இருக்கின்றன. அடுத்தது கிழக்கு பதிப்பகம் வந்தேன். ஏகப்பட்ட தலைப்புகள், எல்லோரும் எப்போதும் போல் கிழக்கு யுனிஃபார்ம் போட்டுக்கொண்டு வரவேற்றார்கள். ஹாய் மதன், துப்பறியும் சாம்பு ( முழு தொகுப்பு, படங்கள் ரொம்ப சுமார், பழைய படங்களில் சாம்புவிற்கு இருக்கும் மூக்கு இந்த புத்தகத்தில் இளைத்திருக்கிறது, அட்டைப்படத்தில் சாம்பு ஓட்டும் பைக் TN-06-DS-007 ரெஜிஸ்டரேஷன்!. முன்னுரையில் சீக்கிரம் தேவனின் படக்கதை வெளியாகும் என்று சொல்லியிருக்கிறார்கள். அலையன்ஸ் பதிப்பித்

கணையாழி கடைசிப் பக்கங்கள்

[%image(20070110-kanayali cover.JPG|221|339|kanayazhi cover)%] இந்த வருடம் தொகுத்த புத்தகம் இது. சுஜாதாவின் முன்னுரை மற்றும் என்னுடைய சிறு குறிப்பு. சுஜாதா முன்னுரை கடைசிப் பக்கங்களின் முதல் தொகுப்பு விசா பதிப்பகத்தினர் வெளியிட்டு மூன்று பதிப்புகள் கண்டது. அது முழுமையான தொகுப்பல்ல. கைவசம் இருந்த கணையாழி இதழ்களில் கிடைத்த 72 பக்கங்களின் தொகுப்பாக வந்தது. கணையாழியின் ஆரம்ப காலத்திலிருந்து ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகள்வரை நான் கடைசிப் பக்கங்களை ஓரிரு இதழ்கள் தவிர தொடர்ந்து எழுதி வந்திருந்தேன். நூற்றுக்கணக்கில் இருந்தன. அவை அனைத்தையும் என்னால் தொகுத்திருக்க முடியாது. தேசிகன் இந்தப் பணியை மேற்கொள்ள விரும்பினார். கணையாழி இதழ்கள் புதுக்கோட்டை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, டோரதி கிருஷ்ணமூர்த்தி, வெ. சபா நாயகம், வெங்கடேஷ் போன்ற ஆர்வலர்களிடம் இருந்தன. ஆசிரியர் கஸ்தூரி ரங்கன் சில திரட்டுகள் வெளியிட்டார். யாரிடமும் கடைசிப் பக்கங்கள் முழுமையாக இல்லை. மேலும் கடைசிப் பக்கம் என்று சொல்லி முதல் பக்கம், நடுப் பக்கம், பத்தாம் பக்கம் என்று எங்கிலும் எழுதி வந்தேன். சிறுகதைகள் எழுதும்போது நிறுத்திவந்தேன். கோபித